முதலிரவு
சின்ன தலைப்புதான்....! ஆனா மேட்டர் பெரிசு...!!
இதே முதல்லே ஒத்துக்கறீங்கல்லே !!!
கல்யாணம் ஆனவங்களுக்கு தெரிஞ்ச விஷயம்.. ஆகாதவங்களுக்கு புரிஞ்ச விஷயம். ஆனா அது பத்தி நிறைய கனவுகள் எல்லோருக்கும் இருக்கும். படிக்கிறப்போவே குதிரை பின்னாடி போகுது இல்லே...? அப்படி ஒரு விஷயம் சார் இது.
முதலிரவு யாருக்கு...? ஒருவனுக்கு ஒருத்தியா.. ஒருத்திக்கு ஒருவனா இருந்தா அங்கே அது சம்பிரதாயப்படி முதலிரவு. வேறு ஏதாவது சமச்சாரம்ன்னா முதலிரவுக்கு முக்கியத்துவம் ஏதுமில்லே. அதுக்கு பேரு வேற..!
சிலருக்கு முதலிரவு சுகம். அதாவது ஏற்கனவே ஒருத்தருக்கொருத்தர் பாத்துப், பழகி, பேசி பின் திருமணமாகி (கிட்டத்தட்ட காதல் திருமணம்) அதன் பின் வரும் முதலிரவு ... புரிதல் நிறைய இருக்கும்..! நினைத்தாலே இனிக்கும் !!
வேறு சிலருக்கு கொஞ்சம் கஷ்டமா கூட இருக்கலாம்.. மனசிலே என்ன இருக்கு என்பது யாருக்கு தெரியுங்க..?
இன்னும் சிலருக்கு புரிதல் ரொம்ப அதிகம் இருக்கும். திருமணக் களைப்பிலே ரெண்டு பேரும் முதலிரவுலே படுத்து தூங்கி விடுவது கூட உண்டு. அதனாலே ஒரு பாட்டி தனது பேத்தியை திருமணம் முடிந்த கையோடு ஒரு நாலு மணி நேரேம் பகல் பொழுதிலே நல்ல படுத்து ரெஸ்ட் எடுக்க சொன்னாங்களாம் . மாப்பிள்ளை அதுக்கு முன்னடியே ரெஸ்ட் எடுக்க போனது யாருக்கும் தெரியாது என்பது இன்னொரு முக்கிய மேட்டர். கவனிக்க வேண்டியது சார்...!!
முதலிரவு முடிந்த கையோட தேனிலவு போகிற சதிபதிகள் நிறைய உண்டு. அதாவது வீட்டிலே டிச்டர்பன்ஸ் ஜாஸ்தியாம். ரெண்டு பேரா போனவங்க மூணு பேரா தயாராவதும் (தாயராவதும்) உண்டு.
சிலருக்கு முதலிரவிலே தகராறு வருவதும் உண்டு. என்ன பண்றது ..? எல்லாம் தலை விதி சார் ! எப்படியோ போகப் போக பிக்கப் செய்து மேக்கப் ஆவுருதும் உண்டு. ஆனா பேக்கப் ஆகாம இருந்தா சரி..
இன்னும் சிலர் முதலிரவை திட்டமிடுவாங்க... அதாவது குடும்பத் திட்டமிடல். கொஞ்ச நாள் ஜாலிய இருக்கலாம்..! அப்புறம் குழந்தை பெத்துக்கலாம்..!! இது ஒரு ரகம். ஆனா இப்படி ஜாலியா இருக்கலாம் என்று நினைத்து கொஞ்சம் சீரியசாக போன விசயமும் உண்டு. அவர்கள் கடைசி வரை குழந்தை பெற்றுக் கொள்ளாமல் ஒருவர் மற்றொருவருக்கு குழந்தையாக மாறிய வரலாறும் மருத்துவத்தில் உண்டு. எதுவும் காலத்தே பயிர் செய்யனும் சார்.
இன்னொரு ரகமும் உண்டு. கல்யாணம் முடிஞ்ச கையேடு பலகாரம் தர்றதிலே சம்மந்தி சண்டை வந்து முதலிரவு தள்ளிப் போகிறதும் உண்டு. அந்த சிருசுங்கலே பாக்க பாவமா இருக்குமில்லே சார்..? இது இருதலை விருப்பம்.
இதோ ஒருதலைக்கு ஒரு எடுத்துக்காட்டு. அதாவது, மாப்பிள்ளை பையன் பொண்ணை ரொம்ப விரும்பி கல்யாணம் பண்ணியிருப்பான். எப்போடா தாலி கட்டலாம்.. எப்போடா ரூமுக்கு போகலாம் என்று அடிக்கடி பொண்ணை பாத்து ஒரு தினுசா சிரிச்சுகிட்டே இருப்பான். ஆனா பொண்ணுக்கு அப்படி விருப்பம் எதுவும் இருக்காது. மனசிலே வேறு சிந்தனைகள் அல்லது பழைய பழகிய ஆள் ஒட்டிக் கொண்டு இருப்பான். ஏதோ ஒரு நிர்பந்தத்துக்கு கல்யாணம் பண்ணியிருப்பா அவ. அப்போ ரொம்ப கஷ்டம் சார். பையனோட கனவுலே மண்ணை அள்ளிப் போட்ட கதைதான். பின் குறிப்பு : இது பொண்ணு விசயத்திலும் பொருந்தும் சார்...
பாஸ்ட் நைட்டுக்கு முன்னாடி ஹிந்து மதப்படி ரெண்டு ஹோமம் செய்வது நல்லது. அதாவது, (1) கர்ப்ப சாந்தி ஹோமம். இது கர்ப்பம் நல்ல முறையில் தரிக்க வேண்டும் என்பதற்கு. (2) சந்தான ஹோமம். - இது குழந்தை பேறை தருவது. அதாவது குழந்தை நன்றாக பிறந்து, தாயும் சேயும் நலமாக இருக்க வேண்டும் என்பதற்கு. ஒரு சந்தேகம் சார். இந்த ஹோமம் எல்லாம் இப்போ செய்றாங்களா சார்.... ?
முக்கியமா ஒன்னு இங்கே கவனிக்க வேணும்..? அதாவது, 'பஸ்ட் நைட்' என்று சொன்னவுடன், நிச்சயம் 'லாஸ்ட் நைட்' என்று ஒன்றும் உண்டு என்பதை நாம் இங்கே மறக்கக் கூடாது.
பஸ்ட் நைட்டுக்கும், லாஸ்ட் நைட்டுக்கும் உள்ள ஒரு மிகப் பெரிய வித்தியாசம் என்ன தெரியுமா?
"பூவுக்கு மேலே நாம படுத்திருந்த அது பஸ்ட் நைட். நம்ம மேலே பூ போட்டிருந்த அது லாஸ்ட் நைட்."
என்ன சார் கரெக்டா..?
சுவாரஸ்யமா இருந்தா கட்டாயம் பதில் போடுங்க பிளீஸ்...
Comments
சற்று சிருங்கார ரசமும் தேவைதான்!
சிந்திக்கத் தூண்டும் எழுத்துக்கள்..நன்று..வாழ்த்துக்கள்!
//Antha Homam pannathavanka ellam nallapadiya Kulanthai petru kollavillaiya..?//
பதிலுக்கு நன்றி அண்பு சார்.
அந்த ஹோமம் பண்ணாதவங்கல்லாம் குழந்தை பெற்றுக் கொள்ள வில்லையா? என்று கேள்வி கேட்டுள்ளீர்கள்.
வாஸ்தவமான பேச்சு.
சாக்கு சொல்றதுக்கு நாக்குக்கு நல்லா தெரியும். குழந்தை பெறக்கிறதிலே சிக்கல் ஆகும் போது அல்லது குழந்தை பிறக்கலன்னா உடனே 'எந்த நேரத்திலே கல்யாணம் பன்னோமோ தெரியலே... இப்படி ஆவுது... ஏதாவது சாந்தி ஹோமம் பண்ணி பாக்கலாம்' என்று இன்றும் எத்தனையோ பேர் ரமேஸ்வரத்திலே ஹோமம் பண்ணிக்கிட்டே இருக்காங்க. மனம் ஒரு குரங்கு.
ஒரு பக்கம் மருத்துவ அறிவை நம்பும்.. மற்றொரு புறம் மத நம்பிக்கையும் மனதில் நிழலாடும். முகூர்த்தத்திற்கு ஹோமம் பண்றாங்க.. அத பகுத்தறிவோட ஏத்துக்கிட்டு தாலி கட்டுறோம். நான் சொல்லலே.. சட்டம் சொல்லுது. அப்படியே சாந்திக்கு அதாவது கர்ப்ப சாந்திக்கு முகூர்த்தம் பண்ணா.. பின்னாடி மனசுலே சங்கடம் வர்றதுக்கு வாய்ப்பு கம்மி.
எப்படி இருந்தாலும், சாந்தி ஹோமம் பண்ணியும் குழந்தை பிறக்காமல் எத்தனையோ சதிபதிகள் உண்டு. சப்தபதி ஹோமம் பண்ணியும் சதிபதிகளாக வாழமுடியாமல் பிரிந்தவர்களும் உண்டு. தங்கள் கேள்விக்கு நன்றி !
//Entha kalathula irukkinka..!//
நான் இந்த காலத்து எழுத்தாளன், வழக்கறிஞன் அன்பு சார்.
ஆதியிலே இந்து திருமணம் முழுக்கமுழுக்க மத நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த சமய சடங்கு. திருமணம் நிலையான பந்தம், அடுத்த பிறவியிலும் தொடரும் ஜென்மஜென்மாந்திர பந்தம், புனித பந்தம் என்று அந்தக் காலத்திலே அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, முக்கியமா சப்தபதி செய்து, ஹோமத் தீயை வழிபட்டு முப்பத்து முக்கோடி தேவர்கள் ஆசியுடன் அதாவது சம்பிரதயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, திருமணம் நடந்தது. ஆனா 1956-லே இந்து திருமண சட்டம் வந்த பிறகு இந்தக் கதை நிறையவே மாறி விட்டது. இந்து திருமணம் வெறும் சமய சடங்கு மட்டும் என்று இல்லாமல் அது ஒரு ஒப்பந்தம் என்ற நிலை ஏற்பட்டது. எடுத்துகாட்டாக, திருமணம் அப்போ நிலையான பந்தம். தாலி கட்டிவிட்ட பிரிந்து போக முடியாது. ஆனா இந்து திருமண சட்டம் 'டிவோர்ஸ்' என்ற பிரிவை அறிமுகம் செய்து விட்டது. பிடிக்கலையா பிரிச்சு போவது உத்தமம் என்று சட்டம் சொல்லுது.
இங்கே இன்னொரு விஷயத்தையும் பாக்கணும். இந்த சாங்கியம் எதுவும் இல்லமே சுய மரியாதை திருமணம் செய்து கொள்வதும் சட்டத்தில் குறிப்பாக தமிழ் நாட்டில் அங்கீகரிக்கப்பட்டது.
அந்த காலத்திலே கணவன் இறந்து போன விதவை மறுமணம் செய்து கொள்ள முடியாது. உடன்கட்டைதான் வழி. அது பின்னிட்டு விதவை மறுமணச் சட்டத்தால் ஒழிக்கப் பட்டது. ஜென்மஜென்மாந்திர பந்தம் அடிபட்டு போய்விட்டது.
இன்று கிட்டத்தட்ட இந்து திருமணம் ஒரு ஒப்பந்தமாகவே மாறி விட்டது. இங்கே மிச்சம் இருப்பது ஒன்று மட்டுமே. அது புனித பந்தம். அதவது ஹோமம் வளர்த்து, அத வலம் வந்து திருமணம் செய்து கொள்வது. ஆனா அதுக்கும் ஒரு செக் பாய்ன்ட் உள்ளது. திருமணம் செய்து கொள்ளும் ரெண்டு பேரில், யாருக்காவது ஒருவருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி அவரது கணவன் அல்லது மனைவி அத்திருமனத்தின் போது உயிருடன் இருந்தால் அல்லது டிவோர்ஸ் ஆகாமல் இருந்தால், இதுவும் அடிபட்டு போய் விடும். இதிலே புனித பந்தம் எங்கே இருக்குது? இது கள்ளத் தொடர்பு அல்லது ஏதோ ஒரு காரியத்துக்காக ஒரு ஒப்பந்தம்தானே !
இந்து திருமணம் ஒரு சமயச் சடங்கா அல்லது ஒப்பந்தமா என்பது இந்த திருமண ஹோமம், மத நம்பிக்கை ஒன்றில் மட்டுமே தொக்கி நிற்கிறது, என்று சட்டம் சொல்கிறது. மற்றபடி இந்து திருமணம் இன்று முழுமையான ஒப்பந்தத்தின் வடிவில் இருக்கிறது. ஆனாலும் அடிப்படை புனிதம்.
அந்தக் காலத்திலே இருக்கிற ஒரு பாய்ண்டு இந்தக் காலத்திலேயும் தொடருகிறது சட்டத்தில்....!
பின்குறிப்பு : முஸ்லிம் திருமணம் முழுக்க முழுக்க ஒரு வாழ்வியல் ஒப்பந்தம். சமயச் சடங்குக்கு முக்கியத்துவம் இல்லை.
//Advice is ok but dont feed Religious things for a chilli thinks..!//
என்ன சார் பொசுக்கென்னு இப்படி சொல்லீட்டீங்க ?
பதிவை மீண்டும் நல்ல வாசித்து பாருங்க.... நான் இதுலே எந்த அட்வைசும் சொல்லலியே சார்..? இது ஒரு சிந்தனை..
ஆனா இந்த விசயத்தை எப்படி நீங்க "chilli thinks" என்று சொல்ல முடியும் ?
//Piragu unkalukkum pathivulagathil irukkum sila perukkum vithiyasam illama poidum..!!!//
சார்.... அவங்கவங்க கருத்தை அவங்கவங்க வெளியிடுகிறார்கள்...
வாசிக்கிறவங்க..., பதிவு பிடிச்சிருந்த மறுமொழி போடுறாங்க... பிடிக்கலையென்ன மறந்து போறாங்க..
நான் நான்தான் சார்.
என்னை சொல்லி, பதிவுலகத்தின் மற்ற நண்பர்களை குறை சொல்லாதீங்க சார்...
உங்க பிளக்கிலே நீங்க எத்தனை பதிவு எழுதி இருக்கீங்க சார்...?
//எத்தனை நாள் தான் சீரியஸாகவே பேசி..எழுதி வருவது?
சற்று சிருங்கார ரசமும் தேவைதான்!//
மகிழ்ச்சியான வாழ்விற்கு இந்த ரசமும் தேவை... மறுமொழிக்கு என் நன்றியே உரிய மொழி.
என்ன சார் கரெக்டா..?//
ரைட்டோ ரைட்டு.. !!
சுப்பு தாத்தா.
//ரைட்டோ ரைட்டு.. !!//
Thanks சுப்பு தாத்தா.