துஷ்பிரயோகம் செய்தால் பறித்து கொள்வான் !
அதிகாரம், பதவி, செல்வம், செல்வாக்கு, தகுதி, உரிமை ஆகிய இவை யாவும் இருப்பவரிடம் இருக்க வேண்டும். இவற்றுக்கு தகுதி அல்லாதவருக்கு சில சமயம் இவை முயன்று பெறாமல் கிடைத்து விடக் கூடும். எல்லாம் கடவுளின் திருவிளையாடல் அல்லது அதிர்ஷ்டம் என்றும் சொல்லலாம்.
ஆனால் இதனால் ஏற்படும் விளைவு ? "அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்" என்ற கதைதான்.
முயன்று கிடைக்காதது ஏன் நமக்கு கிடைத்தது என்பதற்கு கடவுள் எப்போதும் ஒரு பதில் வைத்திருப்பான். அந்த பதில் நல்ல பதிலாக அமைவதற்கும், கெட்டதாக அமைவதற்கும் நமது செயல்பாடே அளவு கோலாக அமையும். அதாவது கிடைத்ததை தவறாக பிரயோகம் செய்தால், கடவுள் அதை நிச்சயம் பறித்துக் கொள்வான்.
அதே நேரத்தில் முயன்று கிடைத்ததையும் துஷ்பிரயோகம் செய்தலாகாது. அது திரும்பத் தாக்கி விடும்.
எனவே துஷ்பிரயோகம் தவிர்.
Comments
அருமையான பகிர்வுகள்..
சரியாக சொன்னீர்கள்.
கிடைத்ததை தவறாக பிரயோகம் செய்தால், கடவுள் அதை நிச்சயம் பறித்துக்கொள்வான்.
இது 100க்கு100 உண்மையானது.
வாழ்த்துக்கள்.
//இது 100க்கு100 உண்மையானது.
வாழ்த்துக்கள்.//
பின்னூட்டதிற்கு நன்றி ஜமால் சார்...
அதே நேரத்தில் முயன்று கிடைத்ததையும் துஷ்பிரயோகம் செய்தலாகாது. அது திரும்பத் தாக்கி விடும்.
எனவே துஷ்பிரயோகம் தவிர்.//
நல்ல விஷயங்களை சிறப்பாகச் சொல்லியுள்ளீர்கள். நன்றி.
//நல்ல விஷயங்களை சிறப்பாகச் சொல்லியுள்ளீர்கள். நன்றி.//
Thanks for the feedback sir...
//தனியாக துஷ்பிரயோகம் செய்தால் தான் இந்நிலையோ .! குழுவாகச் செயல்படுபவர்கள் தப்பித்து விடுவார்கள் போல.! இதை நாளும் கண்கூடாகப் பார்க்கிறோமே !//
வாங்க ரம்மி சார்,, உங்க சிந்தனை சபாஷ்....
குழுவா மாட்டிக்கிட்டா கேஸ் போடும் போது நிறைய சிக்கல் வரும்.. எல்லோரும் முன்னுக்கு பின் முரணா சொல்லி கேசை குழப்பிடலாம். என்றாலும்... 'கூண்டோடு கைலாசம்' என்ற இரு வார்த்தைகளை மறந்து விடக் கூடாது.
வருகைக்கும், மறுபக்க சிந்தனை பதிவுக்கும் நன்றி.
//தகுதியில்லாதவர் உயர்ந்த நிலை அடைந்து அதை பல வருடங்களாக துஷ்ப்ரயோகம் செய்வதை பார்க்கும்போது மனம் நம்பிக்கை இழந்தாலும் கடவுளின் கணக்கை அறியும் அளவு நமக்கு பக்குவம் இல்லை என்றறிந்து மனம் சமாதானம் அடைகிறது!//
வாருங்கள் தோழரே...
உங்கள் முதல் வருகைக்கு நன்றி. கருத்துக்கு நன்றி.
கூட்டல், கழித்தால், வகுத்தலில் கொஞ்சம் தாமதமானாலும் கடவுளின் கணக்கு தப்புவதில்லை.