உடற்பயிற்சியின்றி "சிக்ஸ் பேக்ஸ்" வர என்ன செய்ய வேண்டும்?
வயிற்றுத்தசையில் இடது பக்கம் மூன்று, வலது பக்கம் மூன்று என மொத்தம் ஆறு கட்டுகளைக் (Six Packs) கொண்டு வர அதீத உடற்பயிற்சிகளை எல்லாம் மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை; சீரான உணவுக்கட்டுப்பாடு ஒன்று போதும்.
அதை #பைந்தேனீரில்' (Green Tea) இருந்து தொடங்கலாம். இத்தேனீர் அருந்தி வர கெட்ட கொழுப்பு கரைகிறது. வயிறு சுருங்குகிறது. தானாக உடல் எடை வற்றத்தொடங்குகிறது.
அதேபோல் சுடுநீரில் தேனும் எலுமிச்சை அரை மூடியும் பிழிந்து தினமும் காலையில் பல்லில் படாமல் அருந்தி வந்தால் அன்றைய தினம் முழுக்க சுறுசுறுப்பாகச் செல்வதை நாம் உணரலாம். காரணம் அது நமது ஜீரண உறுப்புகள் சீராகப் பணியாற்றுவதைத் தூண்டுகிறது. இதனால் வயிற்று உப்புசம் கணிசமாகக் குறைகிறது. அழற்சி ஏற்படுவதில்லை. இந்த பானகத்துடன், புதினா தூளும் சேர்த்துக் கொள்ளலாம்.
மூன்று வேளை மூக்குமுட்ட சாப்பிடுவதை ஆறுவேளை என மாற்றி அளவாகச் சாப்பிடுங்கள். ஆறுவேளை அளவான உணவு, ஆறு அழகான கட்டுகள் - வாசிக்கும் போதே ஏதோ ஒரு தொடர்பு இருப்பதுபோல் தெரிகின்றது அல்லவா?
கார்போ உணவு எனப்படும் மாவு வகை உணவு, சாதம் ஆகிய இவற்றை படிப்படியாகக் குறைத்துக் கொள்ளலாம்.
இன்னும் சொல்ல எத்தனையோ இருந்தாலும், 'ஆறு கட்டுகள்' வர, முதலில் 'வாயைக்கட்ட' பழக வேண்டும். பிறகு 'சமையற்கட்டு' மெனு தயார் செய்தல் வேண்டும்; முடிவில் 'வயிற்றுக்கட்டு' தானாக வந்துவிடும். தேவைப்படின், வேர்வை வழியவழிய வலியுடன் செய்யும் உடற்பயிற்சிகள் அடுத்தகட்டம்.
#Jayarajan
www.shripathirajanpublishers.com
P/c. Getty Images
Comments