ஃபிரான்சு தமிழ் மாத இதழில் வெளியான எனது கவிதை - பி.ஆர்.ஜெயராஜன்
எனது அழகான கவிதை ஒன்றை ஃபிரான்ஸ், முல்ஹவுஸ் நகரிலிருந்து வெளிவரும் "தாய் மடி" என்ற மாத இதழ் தனது "காதலர் தின சிறப்பிதழில்" பிரசுரித்து எனது எழுத்துகளுக்கு மாண்பு சேர்த்துள்ளது.
"தாய்மடி" ஆசிரியருக்கும், அவர்தம் குழுவினருக்கும், குறிப்பாக எனது கவிதையை பிரசுரத்திற்குத் தெரிவு செய்த சுவிட்சர்லாந்து, பாசெல் மாநில வாழ் உலகப்புகழ் பெற்ற கவிதாயினி திருமதி Svr Pamini அவர்களுக்கும் என் இதயபூர்வமான நன்றிகள் - #ஜெயராஜன்.
அயல்நாட்டு பத்திரிகை ஒன்று பல வண்ணங்களில் வெளியிட்ட எனது எண்ணக் கவிதை இதோ உங்கள் பார்வைக்கு......
#மணிமொழி...
#உன்னை_மறப்பதெப்படி...?
~~~~~~~~~~~~~~~~~~~
என்னதான் கோபித்துக் கொண்டாலும்
என்னத்தான்தானே கோபித்துக் கொண்டார்
என்றிருந்தவளை மாற்றியவர் யாரோ..?
என்னிடமிருந்து பிரித்தது எதுவோ..?
எங்கு சென்று வந்தாலும்
அங்கிங்கென தேடாமல், கண்
மங்கிக் காத்திருக்கும் என்னவளை
இன்றிங்கு காணாமல் தவிக்கின்றேன்..!
வாய்விட்டு எதையும் கேட்காதவள்
வாய்விட்டு என்ன கூறினாளோ..?
காது கொடுத்து கேட்டவர்
கதையை திரித்து விட்டாரோ?
முடிந்ததென நினைத்தாளா? இல்லை
முறிந்து விட்டதாக நினைத்தாளா?
மடிந்தாலும் முடியாதது இது !
கொடி சாய்ந்தாலும் முறியாதிது !
கேட்காமல் அனைத்தையும் தந்தேன்,
உன் அணைப்பிற்காக அல்ல.
சொல்லாமல் எல்லாவற்றையும் செய்தேன்,
நீ சொல்லாமல் செல்வதற்கல்ல.
பிழை சொல்லி இருந்தால்,
பிழைக்கும் வழி சொல்லியிருப்பேன்.
பிழைக்கும் மன்னிப்புண்டு; இங்கு
பிழை செய்தவள் நீதான்.
தாய் வீடு தங்குமிடம்;
தாயாய் தாங்கிய என்னிடம்தான்
நீ வாழ்ந்தாக வேண்டும்...
வா.. வா... கண்ணே !
- பி.ஆர்.ஜெயராஜன்,
யதார்த்தக் கவிஞர்.
#உன்னை_மறப்பதெப்படி...?
~~~~~~~~~~~~~~~~~~~
என்னதான் கோபித்துக் கொண்டாலும்
என்னத்தான்தானே கோபித்துக் கொண்டார்
என்றிருந்தவளை மாற்றியவர் யாரோ..?
என்னிடமிருந்து பிரித்தது எதுவோ..?
எங்கு சென்று வந்தாலும்
அங்கிங்கென தேடாமல், கண்
மங்கிக் காத்திருக்கும் என்னவளை
இன்றிங்கு காணாமல் தவிக்கின்றேன்..!
வாய்விட்டு எதையும் கேட்காதவள்
வாய்விட்டு என்ன கூறினாளோ..?
காது கொடுத்து கேட்டவர்
கதையை திரித்து விட்டாரோ?
முடிந்ததென நினைத்தாளா? இல்லை
முறிந்து விட்டதாக நினைத்தாளா?
மடிந்தாலும் முடியாதது இது !
கொடி சாய்ந்தாலும் முறியாதிது !
கேட்காமல் அனைத்தையும் தந்தேன்,
உன் அணைப்பிற்காக அல்ல.
சொல்லாமல் எல்லாவற்றையும் செய்தேன்,
நீ சொல்லாமல் செல்வதற்கல்ல.
பிழை சொல்லி இருந்தால்,
பிழைக்கும் வழி சொல்லியிருப்பேன்.
பிழைக்கும் மன்னிப்புண்டு; இங்கு
பிழை செய்தவள் நீதான்.
தாய் வீடு தங்குமிடம்;
தாயாய் தாங்கிய என்னிடம்தான்
நீ வாழ்ந்தாக வேண்டும்...
வா.. வா... கண்ணே !
- பி.ஆர்.ஜெயராஜன்,
யதார்த்தக் கவிஞர்.
Comments