உத்தேசமான (பாவனையான) பாகப்பிரிவினை எப்போது ஏற்படுகிறது ? உச்ச நீதிமன்றம் தந்த பொருள் விளக்கம் என்ன?


 ஒரு இந்து ஆண், உயில் ஏதும் எழுதி வைக்காமல் இறந்துவிட்டால் அவர் விட்டுச் சென்ற சொத்தைப் பொறுத்து ஓர் உத்தேசமான (கற்பனையான) பாகப்பிரிவினை (Notional Income) ஏற்பட்டு, அது அவரது வாரிசுகளுக்கு அவரவர் பங்கின்படி அடைந்து விடுகிறது. இதன் பிறகு அச்சொத்து "இந்து கூட்டுக் குடும்ப சொத்து" என்ற தகுநிலையை (அந்தஸ்து)  இழந்துவிடுகிறது. இதையடுத்து அவர்களுக்குள் ஒரு தீர்வு உடன்படிக்கை எழுதிக் கொள்ளப்பட்டு அதில் அவரவரது பங்கு ஒதுக்கப்படும் வரை, அச்சொத்தை அவர்கள் பொதுவான வாடகைதாரர்களாக (Tenants-in-Common) அடைந்து, கூட்டான உடைமையில் அனுபவித்து வருவார்கள்.

இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் பிரிவுகள் 6 மற்றும் 8-க்கு உரிமையியல் மேல்முறையீடு ஒன்றில் விளக்கமளிக்கையில் உச்ச நீதிமன்றம் மேற்கண்டவாறு கருத்துரைத்தது.

8/1/2020-இல் கூறப்பட்ட தீர்ப்புரையை வாசிக்க பின்வரும் இணைப்பின் மீது சொடுக்குக

https://www.livelaw.in/pdf_upload/pdf_upload-368940.pdf




Comments