பாவலர் கருமலைத்தமிழாழனின் கவிதை மலேசியாவில் அரங்கேற்றம்
மலேசியா நாட்டு பேரா மாநில அரசும், பேரா மாநில ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றமும் இணைந்து ஈப்போவில் 9, 10 -11 -2019 ஆகிய இரு நாள்கள் "2-ஆம் உலகக் கவிதை மாநாடு" நடத்துகிறது.
மாநாட்டை ஒட்டி உலகம் முழுவதும் உள்ள கவிஞர்களிடமிருந்து “உலக வாழ்வியலுக்குக் காலம்தோறும் கவிதை” என்ற தலைப்பில் கவிதைகள் பெறப்பட்டன. அவற்றில் தேர்வு செய்யப்பட்ட கவிதைகளை இயற்றிய கவிஞர்கள் மாநாட்டில் பங்கு பெற அழைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் ஓசூரில் வசிக்கும் பாவலர் கருமலைத்தமிழாழன் எழுதிய “வீணை மத்தளமாகிறது” கவிதை அரங்கேற்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
10 -11 -2019 அன்று மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் இடம் பெறும் கவியரங்கத்தில் கவிதையை அரங்கேற்றம் செய்யப் பாவலர் கருமலைத்தமிழாழன் மலேசியா அழைக்கப்பட்டுள்ளார்.
Comments