கங்காவை காப்பாற்று...!
மிகப்
'புனிதமானது' எனப்படும் ஒன்றை 'சுத்தப்படுத்த' வேண்டும் என்று எவரேனும்
சொன்னால் அது நமக்கு சற்று வியப்பாகத்தான் இருக்கும். "அதுவே புனிதமானது;
அப்படியிருக்க அதை ஏன் சுத்தம் செய்ய வேண்டும்?" என்ற கேள்வி எழுகிறது
அல்லவா..? இந்த அவல நிலைதான் புனிதமான கங்கைக்கும் ஏற்பட்டுள்ளது.
கங்கை கரையில் பிணங்களை எரித்து, அரைகுறையாக நீரில் தள்ளி விடுவது, வைதீக காரிய பொருட்களை அப்படியே நீரில் விடுவது, துர்கா சிலைகளை கரைப்பது, குப்பைகளை சேர்த்து கொட்டுவது என நாளுக்கு நாள் கங்கை கடுமையாக மாசடைந்து, கொஞ்சம் கொஞ்சமாக உள்ளூர் வாசிகளே முகம் சுளிக்கும் அளவிற்கு பிரச்சனை விசுவரூபம் எடுத்து விட்டது. இதை மெல்ல உணர்ந்த மைய அரசு, "கங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்தை" (Ganga cleaning plan) கொண்டு வந்தது. ஆனால் முழுமையற்ற இத்திட்டம் பல்வேறு காரணங்களால் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் எழுந்த வழக்கு ஒன்றின் போது,
"இதே நிலை நீடித்தால் இன்னும் இருநூறு ஆண்டுகள் ஆனாலும் கங்கையை உங்களால்
சுத்தப்படுத்த முடியாது. கங்கையின் சுத்தமான பொலிவை நாங்கள் பார்க்க
முடிகின்றதோ இல்லையோ, வருங்கால சந்ததியினர் காணும் வகையில் அதன் பொலிவைக்
கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என்று கூறி மைய அரசையும் அதன்
செயல் திட்டத்தையும் உச்ச நீதிமன்றம் முடுக்கிவிட்டுள்ளது.
மைய அரசே கங்காவை விரைவில் காப்பாற்று..!
- Jaya Rajan
மைய அரசே கங்காவை விரைவில் காப்பாற்று..!
- Jaya Rajan
Comments