எப்படி இருந்தவங்க எப்படி ஆய்ட்டாங்க பாத்தீங்களா?

திருமணத்திற்கு  முன்பு 
(அதாவது காதலிக்கும் போது என்று வைத்துக் கொள்ளுங்களேன்)

"அவனும் அவளும்" என்ன பேசினார்கள் ?


அவன் : உம்... காத்துக்கிட்டுருக்கிறது ரொம்ப கஷ்டம்.

அவள் : நீங்க என்னை விட்டுட்டு போயிடமாட்டீங்களே ?

அவன் : இல்லை.. இல்லை.. சத்தியமா இல்லை...

அவள் : நீங்க என்னை விரும்புறீங்களா?

அவன் : நிச்சயமா..

அவள் : நீங்க என்னை ஏமாத்திடுவீங்களா ?

அவன் : மாட்டேன் .. ஏன் இப்படி கேட்டுகிட்டே இருக்கே?

அவள் : நீங்க எனக்கு ஒரு முத்தம் தருவீங்களா?

அவன் : கண்டிப்பா..

அவள் : நீங்க என்னை அடிப்பீங்களா?

அவன் : சான்சே இல்லை.. நான் அப்படிப்பட்ட ஆள் கிடையாது..

அவள் : நான் உங்களை நம்பலாமா?

அவன் : உம்..

அவள் : அன்பே....

--------------------------------------------------------------------------------------------

திருமணத்திற்கு பின்பு ...

"அவனும் அவளும்" என்ன பேசினார்கள் ?



மேலே கண்ட உரையாடலை கீழிருந்து மேலாக வாசித்துக் கொள்க !

Comments

Subramanian said…
உண்மை. நிதர்சனமான உண்மை. பகிர்வுக்கு நன்றி நண்பரே! தொடருங்கள்.
@ வே.சுப்ரமணியன்.
//உண்மை. நிதர்சனமான உண்மை. பகிர்வுக்கு நன்றி நண்பரே! தொடருங்கள்.//

மறுமொழிக்கு நன்றி.