முள்ளங்கி கழுவுற இடத்தைப் பாருங்க ! - சொல்கிறார் ஜெயராஜன்...

கொடைக்கானலில் கேரட், பீட்ரூட், முள்ளங்கி என எண்ணற்ற 'இங்கிலீஷ்' காய்கறிகள் விளைகின்றன. அவற்றை மண்ணிலிருந்து பறித்து அந்த மண்ணுடனே மூட்டையாக கட்டி எடுத்து வந்து, பிறகு ஊருக்குள் மூஞ்சுக்கல் என்ற இடத்தின் வழியாக ஓடும் ஒரு ஓடை நீரில் போட்டு கழுவுகிறார்கள்.

அந்த ஓடை தண்ணீரில் அருகில் உள்ள விடுதிகளின் கழிவு நீரும் சேர்க்கிறது. அத்துடன் அங்கேயே துவைக்கவும் செய்கிறார்கள். 

பின்வரும் நிழற்படங்களில் நீங்கள் முள்ளங்கியை அவ்வாறு சுத்தம் செய்யும் விதத்தை காண்கிறீர்கள்.


முள்ளங்கியை மூட்டையுடன் தண்ணீரில் அலசுகிறார்கள். பிறகு ஒரு கூடையில் போட்டு...


மீண்டும் அலசுகிறார்கள்...

அங்கேயே துணி துவைக்கவும் செய்கிறார்கள்..


பக்கட்டில் நீர் பிடித்து....


முள்ளங்கி மீது ஊற்றுகிறார்கள் 


முள்ளங்கியை 'இந்த' தண்ணீரில் வெள்ளைவெளேரென ஆக்கி மூட்டை கட்டுகிறார்கள். 


"ஹைய்யா ... நான் பச்சையா கூட தின்பேனே" என்று ஆவேசப்படாமல் காய்கறிகளை, பழங்களை சுத்தமான தண்ணீரில் கழுவி சாப்பிடுங்கள், சமையுங்கள் ! 

படங்கள் உதவி : ஜோதி.


Comments

yuck:(

சுத்தத்துக்கும் இந்தியாவும் இடைவெளி ரொம்பவே அதிகம்:(
மறுமொழிக்கு நன்றி..
நியூசிலாந்தில் எப்படி...?
நியூஸி சுத்தத்தில் வெகு சுத்தம்.

தெருவிலே இலைபோட்டு சாப்பிடலாமுன்னு இந்தியாவில் இருந்து விஸிட் வந்த நங்கநல்லூர் பெரியவர் (தோழியின் மாமனார்) சொன்னாருன்னா பாருங்க.
@ துளசி கோபால்

//நியூஸி சுத்தத்தில் வெகு சுத்தம்.
தெருவிலே இலைபோட்டு சாப்பிடலாமுன்னு இந்தியாவில் இருந்து விஸிட் வந்த நங்கநல்லூர் பெரியவர் (தோழியின் மாமனார்) சொன்னாருன்னா பாருங்க.//

படிக்கறப்போவே ரொம்ப நான்னா இருக்கு..
ஒருதரம் வந்து பாக்குனுமும்ன்னு இருக்கேன்னா..!

மறுமொழிக்கு ரொம்ப நன்றி..
HOTLINKSIN.com said…
ஓ... இதெல்லாம் இங்கிலீஸ் காய்கறியா...?
காய்கறி பறித்து சுத்தம் பண்ணுறதை லைவ் ஷோவே காட்டிட்டீங்க... இதைப் பார்த்த பிறகு எங்க பச்சையா சாப்பிடுறது....?

நண்பரே உங்கள் பதிவுகள் மேலும் பல வாசகர்களை சென்றடைய http://www.hotlinksin.com/ இணையதளத்தில் பதிவுகளை பகிருங்கள்.
வாங்க, கட்டாயமா ஒருமுறை வந்து போங்க. டிசம்பர் முதல் ஃபிப்ரவரி வரை கோடைகாலம். சுற்றுலாவுக்குத் தோதான சமயம்.

கூடுதல் தகவல்களுக்கு ....:-)))))

http://thulasidhalam.blogspot.com/2010/06/blog-post_12.html
@ துளசி கோபால்
//வாங்க, கட்டாயமா ஒருமுறை வந்து போங்க. டிசம்பர் முதல் ஃபிப்ரவரி வரை கோடைகாலம். சுற்றுலாவுக்குத் தோதான சமயம். கூடுதல் தகவல்களுக்கு ....:-)))))//

கண்டிப்பா வரேன் டீச்சர்.
எனக்கு 'நியூசிலாந்து' புத்தகம் வேண்டுமே...
சந்தியா பதிப்பகம் வெளியீடு.

தமிழ்நாட்டில் நடக்கும் புத்தகக் கண்காட்சிகளில் கிடைக்கிறது என்று நண்பர்கள் சொன்னார்கள்.

சென்னையில் புதுப்புத்தக உலகம்( New Booklands) ஹிக்கின்பாதம்ஸ், மற்றும் பன்னாட்டு முனையும் சென்னை விமானநிலையம் இங்கெல்லாம் கிடைக்கிறது.

சேலத்திலும் ஒருவேளை கிடைக்குமோ என்னவோ!!!!

ஆர்வத்துக்கு மிகவும் நன்றி.

இந்தப் புத்தகத்தைப்பற்றி நம் பதிவர்களும் விமரிசனம் எழுதி இருக்கிறார்கள்.
@ HOTLINKSIN.com

//ஓ... இதெல்லாம் இங்கிலீஸ் காய்கறியா...? //

கொஞ்சம் கௌரவமா சொல்றதுதான்...
@ HOTLINKSIN.com

//காய்கறி பறித்து சுத்தம் பண்ணுறதை லைவ் ஷோவே காட்டிட்டீங்க... இதைப் பார்த்த பிறகு எங்க பச்சையா சாப்பிடுறது....?//

கொஞ்சம் அவாய்ட் பண்றது நல்லதுன்னு எனக்கு தோன்றது..
//நண்பரே உங்கள் பதிவுகள் மேலும் பல வாசகர்களை சென்றடைய http://www.hotlinksin.com/ இணையதளத்தில் பதிவுகளை பகிருங்கள்.//

நிச்சயம் செய்கின்றேன்..
மறுமொழிக்கு நன்றி..
@ துளசி கோபால்
//சென்னையில் புதுப்புத்தக உலகம்( New Booklands) ஹிக்கின்பாதம்ஸ், மற்றும் பன்னாட்டு முனையும் சென்னை விமானநிலையம் இங்கெல்லாம் கிடைக்கிறது.//

எப்படியும் தேடிக் கண்டுபிடிச்சுடுவேன்..
வாசிச்சு பாத்து எழுதுறேன்..
Sakthi said…
சார் இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல..கொஞ்சம் விட்டா பயிர் செய்யும் நிலத்தை பாருங்கள் .. ஒரே மண்ணாக இருக்கிறது, புழு நெளிகிறது அங்கேனு சொல்லுவிங்க போல..
மிகவும் நன்ரி.

ஆமாம்..... இரவு ஒன்னரை மணி இப்போ. இன்னும் என்ன கணினி??????? தூங்கப்போகலையா/:-)))))
@Sakthi
//சார் இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல..கொஞ்சம் விட்டா பயிர் செய்யும் நிலத்தை பாருங்கள் .. ஒரே மண்ணாக இருக்கிறது, புழு நெளிகிறது அங்கேனு சொல்லுவிங்க போல..//

நல்லதுக்கு காலமில்லை.. மறுமொழிக்கு நன்றி..
@ துளசி கோபால் said...

//மிகவும் நன்ரி.
ஆமாம்..... இரவு ஒன்னரை மணி இப்போ. இன்னும் என்ன கணினி??????? தூங்கப்போகலையா/:-)))))//

நாளைக்கு கோர்ட் பாய்க்காட். முல்லைப்பெரியாறு பிரச்சனையா..
அதனாலே கொஞ்சம் கணினி..
தோ.. கிளம்பிட்டேன்.. படுக்கிறதுக்கு..
சட் டவுன்.....
Unknown said…
நல்ல விழிப்புணர்வு பதிவு! த.ம 2ம் ஓட்டு!
@ ரமேஷ் வெங்கடபதி

//நல்ல விழிப்புணர்வு பதிவு! த.ம 2ம் ஓட்டு!//

த.ம. 2 - புரிந்தது.
ஓட்டளித்த உங்களுக்கு நன்றி..
அருமையான தகவல். இன்று தான் உங்கள் தளத்திற்கு வருகிறேன். பல பதிவுகள் பயனுள்ளவை. பகிர்வுக்கு நன்றி சார்!
goma said…
தேவையான பதிவு மக்கள் மனதில் பதிந்தால் நல்லது.

அந்த நாளில் என் மாமியார் காய்கறிகளைக் கழுவும்போது பார்க்கவேண்டும் .....ஈமேயில்,பிளாக் எதுவும் வராத காலத்திலேயே அவர் எவ்வளவு விழிப்புணர்ச்சியோடு செயல்பட்டிருக்கிறார் என்பது புரிகிறது...
@ திண்டுக்கல் தனபாலன்
//அருமையான தகவல். இன்று தான் உங்கள் தளத்திற்கு வருகிறேன். பல பதிவுகள் பயனுள்ளவை. பகிர்வுக்கு நன்றி சார்!//

வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி. தொடர்ந்து வருகை தருக...
@ goma
//தேவையான பதிவு மக்கள் மனதில் பதிந்தால் நல்லது//

வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி. தொடர்ந்து வருகை தருக...
@ goma
//அந்த நாளில் என் மாமியார் காய்கறிகளைக் கழுவும்போது பார்க்கவேண்டும் .....ஈமேயில்,பிளாக் எதுவும் வராத காலத்திலேயே அவர் எவ்வளவு விழிப்புணர்ச்சியோடு செயல்பட்டிருக்கிறார் என்பது புரிகிறது..//

அந்த காலத்து மக்கள் அந்த காலத்தவர்கள்தாம்.
அவர்களுக்கு குடும்ப உறுப்பினர்கள் மீது நிறைய அக்கறை இருந்தது.
குறிப்பாக நேரம் இருந்தது. பார்த்து பார்த்து ஒவ்வொன்றையும் செய்தார்கள். இன்று நேரமின்மை தொடங்கி, மனித வாழ்க்கை துரிதமான இயந்திரமாகி, தன்னைத்தானே கவனித்துக் கொள்வது கூட இல்லாமல் போய் விட்டது.
sakthi said…
நன்றி நண்பரே ,
அநேகருக்கு பயன்படும் நல்ல தகவல்

நட்புடன் ,
கோவை சக்தி
@ sakthi
//நன்றி நண்பரே , அநேகருக்கு பயன்படும் நல்ல தகவல் நட்புடன் ,
கோவை சக்தி//

நன்றி!
CS. Mohan Kumar said…
கொடுமையா இருக்கு.

*****

ஈரோடு பதிவர் சந்திப்புக்கு வருகிறீர்களா? சென்னையிலிருந்து நண்பர்கள் வருகிறோம்.

சென்னையை சார்ந்த நானும் ஒரு வழக்கறிஞர் தான். கோர்ட் செல்வதில்லை. ஒரு நிறுவனத்தில் பணி புரிகிறேன். நீங்கள் ஈரோடு சந்திப்பிற்கு வந்தால் சந்திப்போம்
மறுமொழிக்கு நன்றி..

பதிவர் சந்திப்புக்கு வர முயற்சி செய்கின்றேன்..
வணக்கம்! நானும் கொடைக்கானலில் வசிப்பதால் கூறுகிறேன் .. இங்குள்ள விவசாயிகளுக்கு இதை தவிர வேறு வழியில்லை, எந்த விதமான உள் கட்டமைப்பும் விவசாயிக்கென்று இல்லை. அவர்களை குறை சொல்ல வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். மற்றுமொரு தகவல் இந்த ஆற்றின் நீரினைத்தான் பழனியில் வசிக்கும் மக்கள் குடிநீராக பயன் படுத்துகிறார்கள். :(
@ Karuthu Kandasamy
//நானும் கொடைக்கானலில் வசிப்பதால் கூறுகிறேன் .. இங்குள்ள விவசாயிகளுக்கு இதை தவிர வேறு வழியில்லை, எந்த விதமான உள் கட்டமைப்பும் விவசாயிக்கென்று இல்லை. அவர்களை குறை சொல்ல வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். //

மறுமொழிக்கும் விளக்கத்திற்கும் நன்றி..
@ Karuthu Kandasamy

//மற்றுமொரு தகவல் இந்த ஆற்றின் நீரினைத்தான் பழனியில் வசிக்கும் மக்கள் குடிநீராக பயன்படுத்துகிறார்கள்.:( //

அட முருகா....!!!!??
aalunga said…
காய்கறிகளைக் கழுவி சாப்பிட வேண்டும் என்று ஏன் பெரியோர்கள் சொன்னார்கள் என்று இப்போது புரிகிறது!!

அதே நேரம் இதையே சாக்காக கொண்டு இந்தியாவையும் தூய்மையையும் விமர்சிப்பது வேதனை தருகிறது.
நியூசிலாந்து அவ்வளவு சுத்தமான நாடாக இருந்தால், "நியூசிலாந்து ஆறுகளை மாசுப்படுத்தாதீர்கள்" என்று ஏன் இணையத்தில் அத்தனை கூவல்கள்? (River Pollution in Newzealand என்று கூகிள் செய்யுங்க.. பத்தி பத்தியா வரும்!)

பல மேலை நாடுகளில் சொகுசுப் பொருட்களாக பயன்படுத்தப்படும் பல பொருட்கள் இப்படி வளரும் தேசங்களை அசுத்தப்படுத்தி தயாராவது தான் என்பது
தெரியுமா???

இனியாவது இந்தியா மட்டுமே மிகவும் அசுத்தமாக இருப்பது போன்ற மாயையை உருவாக்காதீர்கள்