படிக்க வேண்டும் என்பதற்கு இத்தனை காரணங்களா?

  • இது ஒரு அற்புத அனுபவம்.
  • நீங்கள் அறிவுசார் சூழலில் இருக்கிறீர்கள்.
  • மிகுந்த நம்பிக்கையுடன் இருக்க உதவுகிறது.
  • உலகம் உங்களை சுற்றி உள்ளது.
  • உலகம் முழுவதையும் சிக்கனமாக சுற்றி வர முடிகிறது.
  • உங்கள் ஆளுமையை வளர்க்கிறது.
  • மனதிற்கு உற்சாகம் தருகிறது.
  • சிந்தனைக்கு விருந்தாக அமைகிறது.
  • அறிவின் எல்லைகள் விரிவாகிறது.
  • உங்கள் வாயிற்படியில் இயற்கையை கொண்டு வருகிறது.
  • உங்களை சிரிக்க, சிந்திக்க, பகுத்தறிய வைக்கிறது.
  • இது உங்கள் வாழ்வையும் கண்ணோட்டத்தையும் மாற்ற வல்லது.
  • முழுமையை  நோக்கி  உங்களை கொண்டு செல்கிறது.
  • உருவாக்கும் திறனை தூண்டுகிறது.
  • உங்கள் எழுத்தார்வத்தை வளர்க்கிறது.
  • கருத்துகளை பரிமாறிக் கொள்ள உதவுகிறது.
  • வாழ்வின் இலட்சியங்களை அடைய உதவுகிறது.
  • 'கனவு' காண அழைப்பு விடுக்கிறது.
  • எல்லாம் தெரிந்தவராக மாற்றுகிறது.
  • உங்கள் பார்வையை தெளிவாக்குகிறது.
  • நீங்கள் படிப்பதால் உடனிருக்கும் மற்றவர்களும் படிக்கிறார்கள்.
  • உங்கள் தேடலுக்கு மன நிறைவு தருகிறது.
  • சிறந்ததை தேர்ந்தெடுக்க உதவுகிறது.
  • உங்களை வளர்த்திக் கொள்ள செய்கிறது.
  • மதி நுட்பத்தை மேம்படுத்துகிறது.
  • படிக்க ஆரம்பித்தால் பழக நண்பர்கள் கூட தேவையில்லை.
  • கல்வியறிவை வளர்த்துக்  கொள்ள உதவுகிறது.
  • பயனுள்ள பொழுதுபோக்கு.
  • படிப்பதற்கு தனிச் சிறப்பு கருவிகள் ஏதும் தேவையில்லை.
  • எழுச்சி தருவது.
  • கல்லாமையை களைகிறது.
  • எங்கும், எப்போதும் நீங்கள் இதைச் செய்யலாம்.
  • இது உங்களை துடிப்புள்ளவராக, அறிவாளியாக காட்டுகிறது.
  • உங்களைச் சுற்றி மற்றவர்களை இருக்கச் செய்கிறது.
  • மற்ற மகிழ்ச்சிகள் தோற்கையில், இது மன மகிழ்ச்சியை தருகிறது.
  • இது உங்களை சக்தியுள்ளவராக ஆக்குகிறது.
  • இது எதையும் ஏன், எவ்வாறு என்று அறிய வைக்கிறது.
  • இது உங்களை கனவெனும் வானில் சிறகடிக்க ஊக்குவிக்கிறது.
  • இது உங்கள் சுயமரியாதையை மேம்படுத்துகிறது.
  • இது தன்னம்பிக்கையையும், துணிவையும் வளர்க்கிறது.
  • இது மனதிற்கும், உடலுக்கும் களைப்பு நீங்க ஓய்வு தருகிறது.
  • இது தகவல் தெரிவிக்கும் கருவியாக உள்ளது.
  • இது உங்களை அறிவார்ந்த வழியில் மனநிறைவடைய செய்கிறது.
  • இது உங்களுக்கு உணர்வுபூர்வமான வலிமையை தருகிறது.
  • இது காலத்தைக் கடந்து பயணம் செய்விக்க வல்லது.
  • இன்று வரையிலான புள்ளி விவரங்களை அறியச் செய்கிறது.
  • அன்பு, பாசம் மற்றும் அறிவை பரப்புகிறது.
  • ஆன்மிக அனுபவத்தை அளிக்கிறது.
  • புத்தககங்களே உற்ற தோழர்கள். 
அனைத்தையும் அனுபவித்தே அறிய முடியாது.
அதற்கு வாழ்நாளும் போதாது.
அனுபவித்தவர்களும், அறிந்தவர்களும் தங்கள் 
எண்ண ஓட்டங்களை கொண்டு 
எழுதியதை படிப்பதன் வாயிலாக,
உலகத்தை, உங்களிரு 
உள்ளங்கைகளுக்குள் அடக்கி விடலாம்.எனவே
படியுங்கள்.. படியுங்கள்... படியுங்கள்..

Comments

படிப்பதற்காக ஊக்கப் படுத்தும் சிந்தனைகள் அருமை..

பகிர்வுக்கு நன்றி..
தொடர்ந்து சிறப்பான பதிவுகள் எழுதும் தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்...
@!* வேடந்தாங்கல் - கருன் *!

//படிப்பதற்காக ஊக்கப் படுத்தும் சிந்தனைகள் அருமை..பகிர்வுக்கு நன்றி..//

மறுமொழிக்கு நன்றி..
@ Cpede News
//தொடர்ந்து சிறப்பான பதிவுகள் எழுதும் தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்...//

தங்கள் வரவேற்பிற்கு என் மகிழ்ச்சி..
மறுமொழிக்கு நன்றி..
கோவி said…
ஆக மொத்தம் மனிதனாய் மாற்றுகிறது.. அருமை நண்பரே..
மிகவும் அருமையான சிந்தனைகள் பகிர்வுக்கு நன்றி
Unknown said…
படிப்பது நமது தலைமுறையோடு நின்றுவிட்டது! படித்து படித்து சொன்னாலும் வாசிக்காமல் தொலைக்காட்சி,பாடல்களையே இந்தத் தலைமுறை நேசிக்கிறது! த.ம 3!
@ கோவி
//ஆக மொத்தம் மனிதனாய் மாற்றுகிறது.. அருமை நண்பரே.//

வருகை தந்தமைக்கும் மறுமொழிக்கும் நன்றி..
@ Lakshmi

//மிகவும் அருமையான சிந்தனைகள் பகிர்வுக்கு நன்றி//

மிக்க மகிழ்ச்சி லக்ஷ்மியம்மா ....
@ ரமேஷ் வெங்கடபதி

//படிப்பது நமது தலைமுறையோடு நின்றுவிட்டது! படித்து படித்து சொன்னாலும் வாசிக்காமல் தொலைக்காட்சி,பாடல்களையே இந்தத் தலைமுறை நேசிக்கிறது! த.ம 3!//

சரியச் சொன்னீங்க ரம்மி சார்..
இப்பொல்லாம் ஏதாவது படம் போட்டு காட்ட வேண்டியிருக்கு..
வாசிக்கிற பழக்கமே கொஞ்சம்கொஞ்சமாக போய்க்கிட்டுருக்கு..
நல்லவேளை வாசிப்புக்கு இப்போ பதிவுலகம் ஒரு வாசலை திறந்து வச்சிருக்கு..

சரி போகட்டும் ... கெட்டப் மாத்திட்டீங்க போலிருக்கு..! ஜோரா இருக்கு... அசத்துங்க சார்...

த.ம.3 -க்கு நன்றி..
படிக்க வேண்டும் என்பதற்கு இத்தனை காரணங்களா? என்பதற்கு பதிலாக படிப்பதால் இத்தனை நன்மைகள் என்று தலைப்பிட்டிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்.
@ ரஹீம் கஸாலி
//படிக்க வேண்டும் என்பதற்கு இத்தனை காரணங்களா? என்பதற்கு பதிலாக படிப்பதால் இத்தனை நன்மைகள் என்று தலைப்பிட்டிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்//

வாங்க ரஹீம் கஸாலி சார்..
நானும் முதலில் அப்படிதான் நினைத்தேன். ஆனால் 'படிப்பதால் நன்மைகள்' என்று தலைப்பு போட்டால் 'எல்லாம் தெரிஞ்ச விஷயந்தானே' என்று பதிவின் உள்ளே வராமல் போய் விடக்கூடும் என்று கருதி, 'காரணங்கள்' என்று போட்டேன். பொதுவாக 'காரண காரியங்களை' தெரிந்து கொள்வதில் எல்லோருக்கும் ஆர்வம் அதிகம் இருக்கும். இப்போ நீங்க உள்ளே வந்தீங்க.. அதனாலே நன்மைகள் தெரிந்தன...
மறுமொழிக்கு நன்றி சார்.
இன்று நீ என்னை தலை குனிந்து பார்!
நாளை பலர் உன்னை தலை நிமிர்ந்து பார்க்க செய்வேன்!

ungal pathivai padikumbothu yenakku yabagam vandhathu intha varigal than.
படிக்கிறேன்.உழைப்பின் ஊடே படித்துக்கொண்டே இருக்கிறேன்.புத்தகமும் நல்ல நண்பன் அல்லவா!!
@ வலிபோக்கன்
//படிக்கிறேன்.உழைப்பின் ஊடே படித்துக்கொண்டே இருக்கிறேன். புத்தகமும் நல்ல நண்பன் அல்லவா!!//

மறுமொழிக்கு நன்றி.
புத்தகங்களை சரியாக இனம் கண்டு கொண்டீர்கள்..
@ selvam
//இன்று நீ என்னை தலை குனிந்து பார்!
நாளை பலர் உன்னை தலை நிமிர்ந்து பார்க்க செய்வேன்! //

மிக அருமையான மேற்கோள்..
@ selvam

//ungal pathivai padikumbothu yenakku yabagam vandhathu intha varigal than.//

என் பதிவுகள் உங்களுக்கு பிடித்திருக்கின்றன என்பதை அறியும் போது மகிழ்ச்சி..
வருகை தந்த அனைவருக்கும் நன்றி..
aalunga said…
படிப்பதற்கான ஊக்கத்தைக் கொடுக்கும் வரிகள்..
நன்றி ஐயா..

பி.கு:
//எங்கும், எப்போதும் நீங்கள் இதைச் செய்யலாம்.//
தூங்கும் போது--?? (நகைச்சுவைக்கு மட்டுமே!!)
மதிப்பிற்குரிய அண்ணா,
வணக்கம்.
நீங்கள் என்னை ஐயா என்று கூப்பிடும் அளவிற்கு நான் பெரிய மனிதர் இல்லை.23 வயது மாணவன் தான்!