"தமிழ் கம்ப்யூட்டர்" இதழுக்கு நன்றி ! - வலைப்பதிவர்களுக்கு கிடைக்கும் பயன் என்ன?

இந்த வலைப்பதிவின் வாயிலாக நான் 100 பதிவுகளை எழுதி முடித்தமைக்கு வாழ்த்துகளை வேண்டி "இது என் 100-வது பதிவு ! வாழ்த்துகளை வேண்டுகிறேன் !!" என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதி இருந்தேன். அதில் நான் எனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல், "வலைப்பதிவில் எழுதுவதால் ஒரு வலைப்பதிவாளருக்கு  என்ன பயன்?" என்ற தலைப்பில் சில விடயங்களை பகிர்ந்து கொண்டிருந்தேன்.

அதை சென்னையிலிருந்து மாதமொருமுறை வெளிவரும் "தமிழ் கம்ப்யூட்டர்" என்ற இதழ் பிரசுரம் செய்துள்ளது. மேலும் நான் எழுதிய "அடேங்கப்பா எவ்வளவு பெரிய 1  GB ?"  என்ற குறுங்கட்டுரையை பெட்டி செய்தியாக இந்த பிரபல இதழ் வெளியிட்டுள்ளது.

கணினி, வலைத்தளம், மென் மற்றும் வன் பொருள் தொடர்பான பல்வேறு பயன் மிகு செய்திகள், தகவல்கள், கட்டுரைகளை வெளியிட்டு வரும் "தமிழ் கம்ப்யூட்டர்"  இதழுக்கு எனது கட்டுரையை வெளியிட்டமைக்காக என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.





பயன் தரும் இந்த இதழுக்கு சந்தாதாரராக சேர பின்வரும் முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்.

தமிழ் கம்ப்யூட்டர்,
37, அசீஸ்முல்க் இரண்டாம் தெரு,
அண்ணாசாலை, ஆயிரம் விளக்கு,
சென்னை - 600 006.

நன்றி ! நன்றி !! நன்றி !!!

Comments

sakthi said…
வாழ்த்துக்கள் சார் ,
தமிழ் பத்திரிகையில் உங்கள் எழுத்துக்கள் பிரதிபலித்துள்ளது மிக்க மகிழ்ச்சி .இது தான் எழுத்துக்கு கிடைக்கும் உண்மையான மதிப்பு .மீண்டும் வாழ்த்துக்கள்
நட்புடன் ,
கோவை சக்தி
நன்றி...
ஏற்கனவே வேறு சில பத்திரிக்கைகளும் எனது வலைப்பதிவில் வந்த கட்டுரைகளை வெளியிட்டுள்ளன.
தமிழ்க் கம்ப்யூட்டர் தமிழ் வளர்க்கும் நல்ல இதழ்.
தாங்கள் தமிழர்க்கு உதவும் நல்ல எழுத்தாளர்.
பாராட்டுகள்.
aalunga said…
இணையத்தில் ஏற்றிய எழுத்துகள் இதழில் மின்னுகிறன..

தட்டச்சியவை அச்சேறியமைக்கு வாழ்த்துகள் ஐயா!!
@ பரமசிவம்
//தமிழ்க் கம்ப்யூட்டர் தமிழ் வளர்க்கும் நல்ல இதழ்.தாங்கள் தமிழர்க்கு உதவும் நல்ல எழுத்தாளர்.பாராட்டுகள்.//

பேராசிரியர் அவர்களுக்கு நன்றி..
@ ஆளுங்க (AALUNGA)

//இணையத்தில் ஏற்றிய எழுத்துகள் இதழில் மின்னுகிறன.. தட்டச்சியவை அச்சேறியமைக்கு வாழ்த்துகள் ஐயா!!//

எழுத்துகள் ஏற்றம் பெறும் போது எழுதியவனுக்கு எழுச்சிதான்...
மறுமொழிக்கு மனமார்ந்த நன்றி..
வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் சார் ,

தமிழ் பத்திரிகையில் தங்கள் படைப்புகள் பிரசுரமானதற்கும்,

நூறுபதிவுகள் மேலாக பதிவிட்டமைக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்... பாராட்டுக்கள்..
@ இராஜராஜேஸ்வரி

//வாழ்த்துக்கள் சார் ,
தமிழ் பத்திரிகையில் தங்கள் படைப்புகள் பிரசுரமானதற்கும்,நூறுபதிவுகள் மேலாக பதிவிட்டமைக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்... பாராட்டுக்கள்..//

நெஞ்சம் நிறை நன்றி..