இதைப் படிங்க.. மனசு விட்டு சிரிங்க..
செருப்பு இல்லாம நாம நடக்கலாம்;
ஆனா நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது.
_____________________________________________
என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும்,
ரயிலேறனும்னா ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும். இதுதான்வாழ்க்கை.
_____________________________________________
பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும். ஆனா
ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா?
நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது!!!
_____________________________________________
என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்,
ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது!
_____________________________________________
என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும்,
லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது!!!
______________________________________________
பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும். ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும். சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும். ஆனா... கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா??
நல்லா யோசிக்கனும்...!!
______________________________________________
இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர்ஆகலாம். ஆனா பிரசி டன்சி காலேஜ்ல படிச்சா
பிரசிடன்ட் ஆகமுடியுமா?
______________________________________________
ஆட்டோக்கு 'ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும், மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும்.
______________________________________________
வாழை மரம் தார் போடும்,
ஆனா அதை வச்சு ரோடு போட முடியாது!
(ஹலோ! ஹலோ!!!!)
______________________________________________
பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம்,
ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?
இல்லை தலைவலி வந்தால் தலையைதான்
புடுங்கமுடியுமா?
______________________________________________
பில் கேட்ஸோட பையனா இருந்தாலும்,
கழித்தல் கணக்கு போடும்போது,
கடன் வாங்கித்தான் ஆகனும்.
______________________________________________
கொலுசு போட்டா சத்தம் வரும்.
ஆனா, சத்தம் போட்ட கொலுசு வருமா?
______________________________________________
பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,
ஃப்ரன்ட் வீல முந்த முடியாது.
______________________________________________
T Nagar போனா டீ வாங்கலாம்.
ஆனால் விருதுநகர் போனா விருது வாங்க முடியுமா?
______________________________________________
என்னதான் பெரிய வீரனா இருந்தாலும்
வெயில் அடிச்சா திருப்பி அடிக்க முடியாது.
(ஹலோ.. ஹலோ.. என்ன சார் இப்படியெல்லாம் ?)______________________________________________
இளநீர்லயும் தண்ணி இருக்கு, பூமிலயும் தண்ணி இருக்கு. அதுக்காக, இளநீர்ல போர் போடவும் முடியாது,
பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது.
______________________________________________
உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும்,ஒரு செல்லில் கூட ஸிம் கார்ட்
போட்டு பேச முடியாது.
______________________________________________
என்னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும்
மெஸேஜ் Forwardதான் பண்ண முடியும்,
Rewind பண்ண முடியாது.
______________________________________________
"தீவிரமாக யோசிப்போர் சங்கம்"
(எங்களுக்கு வேறுஎங்கும் கிளைகள் கிடையாது)
நன்றி : திரு. ரமேஷ்
____________________________________________________________________________________
Comments
//அட, ஆமாங்க!!//
மறுமொழிக்கு நன்றிங்க...
மனதில் இருக்கும் வலி போய் இருக்குமுங்க..
//ஹா ஹா ஹா ஹா சிரிப்போ சிரிப்பு...//
சந்தோசம்.. மகிழ்ச்சி..
சிரிப்புடன் ,
கோவை சக்தி
புரட்சி எழுத்தாளர்களுக்கு நகைச்சுவை வருமா?
அதற்குத் தனித்திறமை வேண்டும்!
//மனசு விட்டுச் சிரித்தேன்..//
makilchi...
//பதிவுலகில் நகைச்சுவையின் பங்கு குறைவுதான்! அதற்குத் தனித்திறமை வேண்டும்!//
unmai...
nanri..
Thank you.
ராஜா
.. இன்று
பதிவர்களையும், அஜித் ரசிகர்களையும் கேவலப்படுத்திய "வினவு" தளம்
எனது பகிர்வு ஒன்று:
என்ன தான் பெரிய படிப்பாளியா இருந்தாலும், ஆம்லேட் வேண்டும்னா முட்டை வாங்கித் தான் ஆகணும்.. :)