பயம் ஒரு மாயை !

நீங்கள் இருட்டைக் கண்டு பயப்படுகிறவர் இல்லை !
அந்த இருட்டில் என்ன இருக்குமோ என்று பயப்படுகிறீர்கள்.

நீங்கள் உயரத்தைக் கண்டு பயப்படுகிறவர் இல்லை !
உயரத்தில் இருந்து கீழே விழுந்து விட்டால் என்னாகும் என்று பயப்படுகிறீர்கள்.

நீங்கள் நம்பிக்கை வைக்க பயப்படுகிறவர் இல்லை !
நினைத்தபடி நடக்குமா என்று பயப்படுகிறீர்கள்.

நீங்கள் உங்களை சுற்றி இருப்பவர்களைக் கண்டு பயப்படுகிறவர் இல்லை !
அவர்கள் உங்களை வெறுத்து விடுவார்களோ என்று பயப்படுகிறீர்கள்.

நீங்கள் காதலிக்க பயப்படுகிறவர் இல்லை !
உங்களை காதலிக்காமல் போனால் என்ன செய்வது என்று பயப்படுகிறீர்கள்.

நீங்கள் மீண்டும் முயற்சி செய்ய பயப்படுகிறவர் இல்லை !
அதுவும் தோல்வியில் முடிந்து விட்டால் என்ன செய்வது என்று பயப்படுகிறீர்கள்.

நீங்கள் மகிழ்ச்சியாக வாழ பயப்படுகிறவர் இல்லை!
அது மற்றவர்களின் பார்வைக்கு ஆளாகுமே என்று பயப்படுகிறீர்கள்.

நீங்கள் தொழில் செய்ய பயப்படுகிறவர் இல்லை !
அது இழப்பு ஏதும் ஏற்படுத்திவிடுமா என்று பயப்படுகிறீர்கள்.

நீங்கள் பணம் சேர்க்க பயப்படுகிறவர் இல்லை !
சேர்த்த பணம் நிற்குமா என்று பயப்படுகிறீர்கள்.

நீங்கள் வயிறு புடைக்க சாப்பிட பயப்படுகிறவர் இல்லை !
சாப்பிடுவது சேராமல் போய் விடுமா என்று பயப்படுகிறீர்கள்.

நீங்கள் செலவு செய்ய பயப்படுகிறவர் இல்லை !
மீண்டும் செலவு செய்ய பணம் வருமா என்று பயப்படுகிறீர்கள்.

நீங்கள் பிரயாணம் செய்ய பயப்படுகிறவர் இல்லை !
ஏதேனும் விபத்து நடந்தால் என்னவாகும் என்று பயப்படுகிறீர்கள்.

Comments

Unknown said…
இப்போது பயமில்லை! பின்னால் நீங்கள் நிற்பதால்!
@ ரமேஷ் வெங்கடபதி
//இப்போது பயமில்லை! பின்னால் நீங்கள் நிற்பதால்//

சில சமயம் நம்பளைப் பார்த்து நாம்பளே பயப்படறதும் உண்டு...
அந்தக் கதையை பின்னாடி சொல்றேன்..

எப்படி இருந்தாலும் உங்கள் கன்னி பின்னூட்டதிற்கு நன்றி...
aalunga said…
உண்மையான பயத்தை அருமையாக காட்டியமைக்கு பயபக்தியுடன் நன்றி!
பயம் என்று ஏதும் இல்லை.
அது ஒரு எச்சரிக்கை உணர்வு.
அவ்வளவுதான்...
ஒருக்கணம் துணிந்து விட்டால்,
பயம் படுத்துவிடும்..

தீயவை செய்ய பயப்பட்டால் போதும்.

நன்மனதுடன் பின்னூட்டம் இட்ட உங்களுக்கு நன்றி..
அருமை அருமை
பயத்தின் கழுத்தை மிகச் சரியாகப் பிடித்துவிட்டீர்களே
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்