இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு இரண்டு புதிய நீதிபதிகள்
இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு இரண்டு புதிய நீதிபதிகளை குடியரசு தலைவர் நியமனம் செய்து ஆணை பிறப்பித்துள்ளார்.
மாண்பமை நீதியரசர் மிஸ்ரா அவர்கள் 1953-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ஆம் நாளில் பிறந்தார். அவர் தன்னை ஒரு வழக்குரைஞராக 1977 -ஆம் ஆண்டில் பதிவு செய்துகொண்டு, ஒரிசா உயர் நீதிமன்றத்தில் உரிமையியல், குற்றவியல், வருவாய், அரசுப்பணி, விற்பனை வரி போன்ற பகுதிகளில் சட்டத் தொழிலாற்றினார். பாட்னா உயர் நீதிமன்றத்தில் 2009-2010 ஆண்டுகளில் தலைமை நீதியரசராக பணியாற்றினார். பின் தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதியரசராக மாற்றப்பட்டார்.
மாண்பமை நீதியரசர் ஜஸ்டி சேலமேஸ்வர் ஆந்திர பிரதேச மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பெட்ட முட்டேவி என்ற ஊரில் 1953-ஆம் ஆண்டு ஜூன் திங்கள், 23-ஆம் நாளில் பிறந்தவர். இவரது தந்தையர் ஜஸ்டி லக்ஷ்மிநாராயண மசூலிபட்டினத்தில் வழக்குரைஞராக தொழிலற்றியவர். அதே ஊரில் தனது பள்ளிப்படிப்பை முடித்த மாண்பமை நீதியரசர் ஜஸ்டி சேலமேஸ்வர், சென்னை லயோலா கல்லூரியில் தனது பட்டபடிப்பை முடித்தார். பின் 1976-இல் விசாகப்பட்டினம் ஆந்திர பல்கலைகழகத்தில் தனது சட்டப் படிப்பை முடித்தார். இதைத் தொடர்ந்து தன்னை ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குரைஞராக பதிவு செய்து கொண்டு தனது சட்டத் தொழிலை ஆரம்பித்தார். இவர் பல மூத்த வழக்குரைஞர்களிடம் சேர்ந்து தனது சட்டத் தொழிலை கற்றுக் கொண்டார். சட்டத்தின் பல பிரிவுகளிலும் வந்த வழக்குகளை ஏற்றுக் கொண்டு திறம்பட தனது பணியை புரிந்து வந்தார். இந்நிலையில் இவர் இவர் அரசு வழக்குரைஞராக நியமனம் செய்யப்பட்டார். பின் 1995-இல் மூத்த வழக்குரைஞராகவும், 13 -10 -1995-இல் அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞராகவும் நியமனம் செய்யப்பட்டார்.
தில்லி உயர் நீதிமன்றத்தின் மாண்பமை தலைமை நீதியரசர் திரு தீபக் மிஸ்ரா அவர்களையும், கேரளா உயர் நீதிமன்றத்தின் மாண்பமை தலைமை நீதியரசர் திரு ஜஸ்டி சேலமேஸ்வர் அவர்களையும் இந்திய உச்ச நீதிமன்றதிக்கு நீதிபதிகளாக குடியரசு தலைவர் நியமனம் செய்துள்ளார். இப்பதவி நியமனம் இவர்கள் தங்கள் பதவிகளை ஏற்றுக் கொள்ளும் தினத்திலிருந்து அமலுக்கு வரும்.
இந்நியமனத்தை குடியரசு தலைவர் இந்திய அரசியலமைப்பின் உறுபு 124 -இன் கூறு (2)-இன் கீழ் தனக்குள்ள அதிகாரத்தை செயலுறுத்தி செய்துள்ளார்.
மாண்பமை நீதியரசர் தீபக் மிஸ்ரா - வாழ்கை வரலாறு
மாண்பமை நீதியரசர் மிஸ்ரா அவர்கள் 1953-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ஆம் நாளில் பிறந்தார். அவர் தன்னை ஒரு வழக்குரைஞராக 1977 -ஆம் ஆண்டில் பதிவு செய்துகொண்டு, ஒரிசா உயர் நீதிமன்றத்தில் உரிமையியல், குற்றவியல், வருவாய், அரசுப்பணி, விற்பனை வரி போன்ற பகுதிகளில் சட்டத் தொழிலாற்றினார். பாட்னா உயர் நீதிமன்றத்தில் 2009-2010 ஆண்டுகளில் தலைமை நீதியரசராக பணியாற்றினார். பின் தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதியரசராக மாற்றப்பட்டார்.
மாண்பமை நீதியரசர் ஜஸ்டி சேலமேஸ்வர் - வாழ்கை வரலாறு
மாண்பமை நீதியரசர் ஜஸ்டி சேலமேஸ்வர் ஆந்திர பிரதேச மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பெட்ட முட்டேவி என்ற ஊரில் 1953-ஆம் ஆண்டு ஜூன் திங்கள், 23-ஆம் நாளில் பிறந்தவர். இவரது தந்தையர் ஜஸ்டி லக்ஷ்மிநாராயண மசூலிபட்டினத்தில் வழக்குரைஞராக தொழிலற்றியவர். அதே ஊரில் தனது பள்ளிப்படிப்பை முடித்த மாண்பமை நீதியரசர் ஜஸ்டி சேலமேஸ்வர், சென்னை லயோலா கல்லூரியில் தனது பட்டபடிப்பை முடித்தார். பின் 1976-இல் விசாகப்பட்டினம் ஆந்திர பல்கலைகழகத்தில் தனது சட்டப் படிப்பை முடித்தார். இதைத் தொடர்ந்து தன்னை ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குரைஞராக பதிவு செய்து கொண்டு தனது சட்டத் தொழிலை ஆரம்பித்தார். இவர் பல மூத்த வழக்குரைஞர்களிடம் சேர்ந்து தனது சட்டத் தொழிலை கற்றுக் கொண்டார். சட்டத்தின் பல பிரிவுகளிலும் வந்த வழக்குகளை ஏற்றுக் கொண்டு திறம்பட தனது பணியை புரிந்து வந்தார். இந்நிலையில் இவர் இவர் அரசு வழக்குரைஞராக நியமனம் செய்யப்பட்டார். பின் 1995-இல் மூத்த வழக்குரைஞராகவும், 13 -10 -1995-இல் அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞராகவும் நியமனம் செய்யப்பட்டார்.
இதை அடுத்து இவர் ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக 1997 -இல் நியமனம் செய்யப்பட்டார். பின் கவுஹத்தி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதியரசராக 2007-இல் நியமனம் செய்யப்பட்டார். மூன்றாண்டுகள் கழித்து அங்கிருந்து கேரளா உயர் நீதிமன்ற தலைமை நீதியரசராக மட்ட்ரப்பட்டார்.
இவருக்கு திருமதி ஜெ. லக்ஷ்மி நளினி என்ற மனைவியும், மூன்று மகன்களும் உள்ளனர். தாயார் பெயர் திருமதி அன்னபூரனதேவி
Comments