'கடவுளே.. இதற்கு எதற்கு என்னை தேர்ந்தெடுத்தாய்? '
விம்பிள்டன் விளையாட்டு போட்டியில் மிகவும் புகழ் பெற்ற ஒரு விளையாட்டு வீரர் கேன்சர் நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்.
மரணம் அவரை நெருங்கிக் கொண்டிருந்தது.
அவரது நோயும் நிலையும் அறிந்து அவரது பல ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கடிதங்கள் எழுதினர். அதில் ஒரு கடிதத்தில் ஒரு ரசிகர், "இந்தக் கொடுமையான நோய்க்கு உங்களை தேர்ந்தெடுக்க கடவுளுக்கு எப்படித்தான் மனம் வந்ததோ?" என்று எழுதி இருந்தார்.
அதற்கு அவ்விளையாட்டு வீரர் எழுதிய பதில் கடிதத்தில் ஒரு சிறு பத்தியில் ஒரு பெரும் விளக்கத்தை சொல்லி இருந்தார். "50 மில்லியன் குழந்தைகள் டென்னிஸ் விளையாட்டை பார்க்கின்றனர். 5 மில்லியன் பேர் டென்னிஸ் விளையாட கற்றுக் கொள்கின்றனர். 50000 பேர் தொழில் முறையில் டென்னிஸ் விளையாட பயிற்சி பெறுகின்றனர். 5000
பேர் ஆட்டச் சுற்றுக்கு வருகின்றனர். 500 பேர் கிரான்ட்சலம் சுற்றை அடைகின்றனர்.
50 பேர் விம்பிள்டன் சுற்றுக்கு வருகின்றனர். 4 பேர் மட்டுமே அரை இறுதி போட்டியை அடைகின்றனர். 2 பேர் மட்டுமே இறுதிப் போட்டியில் நுழைகின்றனர். நான் போட்டியில் வெற்றி பெற்று மகிழ்ச்சியாக கோப்பையை உயர்த்திப் பிடிக்கும் போது, 'கடவுளே.. இதற்கு எதற்கு என்னை தேர்ந்தெடுத்தாய்? ' என்று நான் ஒருபோதும் அவரிடம் கேட்டதில்லை.
எனவே எனக்கு தற்போதிருக்கும் வேதனையில் 'கடவுளே.. இதற்கு எதற்கு என்னை தேர்ந்தெடுத்தாய்? ' என்று அவரிடம் நான் ஒருபோதும் கேட்க மாட்டேன். அப்படி கேட்பதும் நியாயமில்லை, " என்று அவர் அப்பதில் கடிதத்தில் எழுதியிருந்தார்.
மகிழ்ச்சி உங்களை இனிமையாக வைத்திருக்கிறது.
வேதனை உங்களை வலிமைப்படுத்துகிறது.
இரண்டையும் இன்முகத்துடன் ஏற்றுக் கொள்ளுங்கள்.
Comments