வக்கீல் தொழிலுக்கு வர 8 காரணங்கள்
ஒருவர் வழக்குரைஞர் தொழிலை தேர்ந்தெடுப்பதற்கு பின்வரும் 8 காரணங்கள் உள்ளன.
1. அவர் தூக்கத்தை வெறுப்பவர்;
2. அவர் தனது வாழ்க்கையை குழந்தை பருவத்திலேயே அனுபவித்து இருப்பார்;
3. அவரால் டென்சன் இல்லாமல் வாழவே முடியாது;
4. அவர் கரடுமுரடான வாழ்கையை விரும்புபவராக இருக்கலாம்;
5. அவர் பழிவாங்கும் எண்ணம் அதிகம் கொண்டவராக இருப்பார்;
6. அவர் கீதை சொல்லிய "காரியத்தை செய், பலனை எதிர்பார்க்காதே" என்பதை அதிகம் நம்புபவராக இருக்கலாம்;
7. அவர் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க விரும்பாதவராக இருக்கலாம்;
8. ஞாயிற்றுக் கிழமை மற்றும் விடுமுறை நாட்களிலும் பணி புரிய அதிகம் விரும்புவார்;
Comments
//நான் விரும்பி ஏற்றுக் கொண்டது,என்ன பொழப்புடா இது..//
உண்மைதான்.. என்ன செய்ய சொல்கிறீர்கள்?
//ஹ...ஹ ...ஹ ...//
எங்க கஷ்டம் உங்களுக்கு சிரிப்பா வருது.. என்ன பண்றது..?
//ஹ...ஹ ...ஹ ...//
எங்க கஷ்டம் உங்களுக்கு சிரிப்பா வருது.. என்ன பண்றது..?//
வணக்கம் ஐயா ,
என்ன பண்றது
நானும் வழக்கறிஞர் தான்.
//வணக்கம் ஐயா ,
என்ன பண்றது
நானும் வழக்கறிஞர் தான்//
சரியப் போச்சு... அப்போ... இடுக்கண் வருங்கால் நகுக...!
மற்றவர்களுக்காக வாழும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்குமா சொல்லுங்க !
நட்புடன் ,
கோவை சக்தி
//மற்றவர்களுக்காக வாழும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்குமா சொல்லுங்க !//
ஒரு வக்கீல் தனது வாழ்வை அனுபவித்து வழலாம் என்று நினைக்கும் போது அவன் தொழிலை விட்டு போகிறான் அல்லது செத்து போகிறான்.