அவள் குழந்தைகளை செய்கிறாள் !


இந்த நிழற்படங்களை பார்த்தால் எனக்கு ஏற்பட்ட வியப்பை போலவே உங்களுக்கும் ஏற்படக்கூடும் !
















தத்ரூபமாக உள்ள இந்த பிஞ்சுக் குழந்தைகள் Marzipan-இல் செய்யப்பட்டது. அதென்ன Marizipan என்று கேட்கிறீர்களா? Marchpane என்ற சொல்லிலிருந்து மருவி வந்ததே Marzipan ஆகும். இது தின்பதற்குரிய ஒரு பண்டம். அதாவது வாதுமைக் கொட்டையும் (Almond) வெல்லமும் அரைத்து ஆக்கிய பண்டம். வாதுமைக் கோட்டை வெல்லமிட்டைமைத்த மாவு என்று சொல்லலாம். சுருங்கச் சொன்னால் 'வாதுமை பண்ணியம்' (நன்றி : ஆங்கில - தமிழ் அகராதி, டாக்டர் ஆ. சிதம்பரநாதச் செட்டியார், சென்னை பல்கலைக்கழகம், பக்கம் 619).

மேற்கண்ட படத்தில் உள்ள அம்மையார் இந்த வாதுமைப் பண்ணியதுடன் முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து இந்தக் குழந்தைகளை உருவாக்கி உள்ளார். (குழந்தைக்கு கரு வேண்டும் என்பதால் வெள்ளைக் கருவை சேர்த்து விட்டார் போலும்). ஒரு பிஞ்சுக் குழந்தைக்கு வேண்டிய அனைத்து அடையாளங்களும், முக பாவத்துடன் இந்த பொம்மையில் உள்ளன. அவ்வளவு அழகாக உள்ளன. 

உண்மைக் குழந்தையாக தெரியும் இந்த பொம்மைக் குழந்தைகளை உருவாக்கிய கலையார்வம் கொண்ட அத்தாயுள்ளத்திற்கு அனைவரும் ஒரு 'O' போடுவோம்.

Comments

நம்ப முடியவில்லை...!

நன்றாக உள்ளது.

நன்றி.
உண்மைதான். அவ்வளவு இயற்கையாக உள்ளது.
பின்னூட்டத்திற்கு நன்றி அமைதி அப்பா.
கவிதையாய் தலைப்பு ...தலைப்பின் தூண்டுதலில் பார்க்க வந்தேன் .ரொம்பவும் அழகு ,அதுவும் அந்த கொட்டாவி விடும் குழந்தை .ஆணி கெட்டஸ் படங்கள் போல இதுவும் அற்புதம்
தத்ரூபம்! பகிர்விற்கு நன்றி சார்!
//கவிதையாய் தலைப்பு ...தலைப்பின் தூண்டுதலில் பார்க்க வந்தேன் .//

நன்றி
//ரொம்பவும் அழகு ,அதுவும் அந்த கொட்டாவி விடும் குழந்தை .ஆணி கெட்டஸ் படங்கள் போல இதுவும் அற்புதம்//

கொட்டாவி விடும் குழந்தையை வலைபதிவில் ஓட்டும் போதே நினைத்தேன்.. இதன் அழகு பற்றி கருத்துரை ஏதும் வருமென்று..
//தத்ரூபம்! பகிர்விற்கு நன்றி சார்!//

பின்னூட்டத்திற்கு நன்றி !