எப்படியெல்லாம் ஆபத்து வருகிறது பார்த்தீர்களா ?

அண்மையில் ஒரு  செய்தியை வாசிக்க நேர்ந்தது.  ஒருவர் தனது மடிக்கணனியில் (லேப்டாப்) பணிகளை முடித்து விட்டு, இன்னும் விடுபட்டுப் போன பணிகளை செய்து முடிப்பதற்காக அதை அவர் தனது படுக்கை அறைக்கு எடுத்து செல்கிறார்.  அங்கு தனது மெத்தையின் மீது அம்மடிக் கனணியை வைத்துக் கொண்டு சில வேலைகளை செய்கிறார். தனக்கு வந்த மின்னஞ்சல்களை திறந்து வாசிக்கிறார். இரவு நேரம் என்பதால் தூக்கம் அவர் கண்களை தழுவியது.  அப்படியே தூங்கிப் போனார்.

அதிகாலை வேளையில் அவரது அறையில் இருந்து தீயும், புகையும் வெளியாவதைக் கண்டு அக்கம் பக்கத்தில் உள்ளோர் அவரது அறையின் கதவை உடைத்து உள்   சென்றனர்.

அங்கு அவர் தீயில் கருகி இறந்து போயிருந்தார். காவல் துறை வந்து தீக்கான காரணத்தை ஆராய்ந்தது. எப்படி தீ பிடித்தது என்பது புரியாத  மர்மமாக இருந்தது. இது சில நாட்கள் நீடித்தது. பின் மெத்தையின் மீது வைக்கபட்டிருந்த மடிக் கனணி, மெத்தை ஆகியன நன்கு பரிசோதனை செய்யப்பட்டது. அவை அறையில் இருந்த மற்ற பொருட்களை காட்டிலும்  முற்றிலும் தீயால்  நாசமாகி இருந்தன. முடிவில் காவல் துறையின் புலனாய்வு முடிவு இவ்வாறு இருந்தது. அதாவது,-

தீயில் இறந்து போனவர்   மடிக்  கனணியை மெத்தையின் மீது வைத்துக் கொண்டு நீண்ட நேரம் பணியாற்றி இருக்கிறார். மடிக் கனணி மெத்தையில் நன்கு பொதிந்து விட்டிருந்தது. இதனால் மடிக் கணனியின் அடிபகுதியில் சுற்றிக் கொண்டிருக்கும் சிறிய விசிறிக்கு வெளிக் காற்று கிடைக்கவில்லை. மடிக் கனணி இயங்கும் போது உருவாகும் வெப்பம்/சூடு வெளி செல்ல வாய்ப்பில்லாமல் அது மென்மேலும் சூடாகியது. மடிக் கணணி சூடானால் சரியாக வேலை செய்யாது. அதன் இயக்கம் தடைபடும். இதனால் ஏற்பட்ட களைப்பால் அவர் அப்படியே தூங்கிப் போனார். சிறிது நேரத்தில் அதிக வெப்பத்தின் காரணமாக அவரது பஞ்சு மெத்தை கருக ஆரம்பித்து தீப்பிடித்து, அது அருகில் படுத்திருந்த அவரையும் பற்றிக் கொண்டது.

எனவே மடிக் கனணியை மெத்தையின் மீது வைத்துக் கொண்டு பணி புரிய வேண்டாம். அது மடிக்கனணிக்கு மட்டுமல்ல நமக்கும் நல்லதல்ல.

இப்பதிவை நீங்கள் நேசிக்கும் மற்றவர்களுக்கும் எடுத்துச் செல்லவும்.

Comments

Unknown said…
ஆண்டவன் அடுத்தவன் உசிர எப்படி எல்லாம் விதவிதமா எடுக்கலாம்னு ஒக்காந்து யோசிப்பாரோ :)
ஆம் உண்மைதான் இருந்தாலும் இது கொஞ்சம் நம்பமுடியாமத்தான் இருக்கு..
அப்பப்பா...படிக்கவே ரொம்ப பயமாக இருக்கு!!
KaRa said…
என்னதான் இருந்தாலும், எரியும் பொது அவர் எவ்வாறு உணர்வில்லாமல் இருப்பார்?
//ஆம் உண்மைதான் இருந்தாலும் இது கொஞ்சம் நம்பமுடியாமத்தான் இருக்கு..//

கருத்துரைக்கு நன்றி முனைவர் அவர்களே..
//அப்பப்பா...படிக்கவே ரொம்ப பயமாக இருக்கு!!//

வாசித்து உணர்வுகளை வெளிப்படுத்தியமைக்கு நன்றி திரு ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி அவர்களே..
//என்னதான் இருந்தாலும், எரியும் பொது அவர் எவ்வாறு உணர்வில்லாமல் இருப்பார்?//

எல்லாம் நேரந்தான்.. நேரம் நல்ல இருந்த சாகிறவன் கூட பிழைக்கிறான். மரண யோகம் வந்திச்சின்ன இப்பதான் வாழப்போறோம் என்று நினைக்கிறான் கூட செத்துப்போறான். மரண பயமே ஆளைக் கொன்னுடும்..

ஆபத்து எல்லா இடத்திலும் இருக்கு. எனவே கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கிறது நல்லது. எதிலும் அசட்டை வேண்டாம். மடிக் கணணியை மடியிலே வச்சிருந்த சூடு தெரிஞ்சு இருக்கும். ஒருவேளை பிழைச்சு இருக்கலாம்.... !