உண்மையான கடற்கன்னியை காண வாருங்கள்

கடற் கன்னியை நாம் கதைகளில் அறிவோம். அது ஒரு கற்பனை வடிவம் என்றே நாம் இதுகாறும்  பெரும்பாலும் நினைத்திருந்தோம். ஆனால் கடற்கன்னி இருப்பது உண்மைதான் என்பதை அண்மையில் எனக்கு எனது சட்டக் கல்லூரி தோழர் உயர் நீதிமன்ற வழக்குரைஞர் திரு எம். ஜெயக்குமார் அனுப்பிய மின் அஞ்சல் மூலம் தெரிய வந்தது.

கடந்த வாரம் அபுதாபியிலுள்ள முத்துத்தீவில் இறந்தநிலையில் ஒருகடற்கன்னி சடுதியாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது இங்கிருந்தஉல்லாசப்பிரயாணிகள் அதிர்ச்சிக்குள்ளானதோடு அத்தீவை விட்டும் உடனடியாகவெளியேறியுள்ளனர். இங்கு இன்னும் மர்மம் நிலவுகிறது. சுற்றுலா நிறுவனங்கள் கூட கவலை மற்றும் அதிர்ச்சிக்குள்ளான நிலையில் காணப்படுகின்றன.


கடற்கன்னி அழகாக இருப்பாள் என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இது அகோரமாக உள்ளது!

Comments

நெசமாவா சொல்றீங்க??????

வியப்பா இருக்கே!!!!
//நெசமாவா சொல்றீங்க??????

வியப்பா இருக்கே!!!!//

நெசந்தான்னு நம்பத் தோணுது...
இது கடற் கன்னி அல்ல கடற் கண்ணன் :-)
(not mermaid but merman )

Pictures ரொம்ப ரொம்ப பழசு, ஆங்கிலப் படத்திற்கான காட்சியாக‌
இருக்குமோ என்று கூட சந்தேகம் வந்ததுண்டு.
இது கடற் கன்னி அல்ல கடற் கண்ணன் :-)

கடற் கண்ணன் என்று சொல்வதை விட கடல் பிசாசு என்று கூட சொல்லலாம்.
//Pictures ரொம்ப ரொம்ப பழசு, ஆங்கிலப் படத்திற்கான காட்சியாக‌
இருக்குமோ என்று கூட சந்தேகம் வந்ததுண்டு.//

கண்ணால் காண்பதும் பொய். காதல் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய். நீங்கள் அரபுத் தமிழன் என்று பெயர் கொண்டிருப்பதால் அபுதாபி கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டதாக சொல்லப்படும் இந்த கடற் பிசாசை பற்றி விசாரித்து எழுதினால் இந்தப் பதிவு மேலும் பொலிவு பெறும்.
Kannan said…
இது உண்மையா? பொய்யா?
//இது உண்மையா? பொய்யா?//

நீங்க நல்லவரா? கெட்டவரா? என்ற மாதிரிதான்.

பின்னூட்டத்திற்கு நன்றி திரு Kannan.
Sir, இதை பாருங்கள்: http://www.hoax-slayer.com/malaysian-mermaid.html