ஒரு இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட பிரச்சனை

திருமணமாகாத ஒரு இளம்பெண்ணுக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டது. அவள் தான் கர்ப்பமாக இருப்பதை கண்டறிந்து அதிர்ந்து போனாள். தனது தாய், தந்தையின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாக வேண்டுமே என்று அஞ்சி நடுங்கினாள்.

எனினும் சற்றே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு இந்த அதிர்ச்சி தகவலை தனது தாயிடம் சொன்னாள். இதை கேட்டு அவளது தாய் அவளை விட மிகவும் அதிர்ச்சியும் கோபமும் அடைந்தாள். உடனே, "எந்த பன்னி உன்னை இந்த நிலைக்கு ஆளாக்கினான்? எனக்கு உடனே மேட்டர் தெரிஞ்சு ஆகனும்" என்று உரத்த குரலில் கத்தி ஆவேசத்துடன் கேட்டாள் அத்தாய்.

இதை அடுத்து அப்பெண் உடனே செல்லிடபேசி எடுத்து தமாசுக்கு பேசினாள். சுமார் ஒரு மணி நேரம் கழித்து தாமஸ் அவளது வீட்டிற்க்கு வந்தான். பார்க்க உயரமாக, இலட்சணமாக, பகட்டான ஆடை அணிந்து ஒரு BMW காரில் அவன் வந்து இறங்கினான். அவன் பூசி இருந்த வாசனாதி தைலம் (அதாங்க 'சென்ட்') அவ்விளம் பெண்ணின் வீடு முழுவதும் அளாவியது.

அவன் வரவேற்பறையில் அமர்ந்தான். அப்பெண், அவளது தாய், தந்தை ஆகியோரும் அமர்ந்து இருந்தனர். அப்போது அவன், "வணக்கம். நான் தாமஸ். உங்க பெண் தனது பிரச்சனையை பற்றி என்னிடம் சொன்னாள். ஆனா நீங்க என்னை மன்னிக்கணும். என் குடும்ப சூழ்நிலை காரணமாக உங்க பெண்ணை நான் கல்யாணம் செய்து கொள்ள முடியாது. இருந்தாலும் இந்த பிரச்சனைக்கு நான் பொறுப்பேத்துக்கிறேன்" என்றான். மேலும் அவன் தொடர்ந்து சொல்லும் போது...

"உங்க பெண்ணுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தால் நான் அக்குழந்தைக்கு என்னோட இரண்டு கடைகளையும், ஒரு வீட்டையும், ஒரு கடற்கரை பங்களாவையும் எழுதி வைத்து, வங்கியில் 1 மில்லியன் டாலர் ரொக்கப் பணத்தையும் வைப்பீடு செய்கின்றேன்.

உங்க பெண்ணுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தால் நான் அக்குழந்தைக்கு என்னோட இரண்டு தொழிற்சாலைகளை எழுதி வைத்து, வங்கியில் 2 மில்லியன் டாலர் ரொக்கப் பணத்தையும் வைப்பீடு செய்கின்றேன்.

இரட்டைக் குழந்தைகள் பிறந்தால் ஆளுக்கு ஒரு தொழிற்சாலையையும், தலைக்கு 1 மில்லியன் டாலர் பணத்தையும் வைப்பீடு செய்கின்றேன்"

இவ்வாறு ஒரு தீர்வழி சொன்ன தாமஸ் இப்படி ஒரு கேள்வியை அவர்கள் முன் வைத்தான்.

அதாவது, "ஒருவேளை உங்க பெண்ணுக்கு கருச் சிதைவு ஏற்பட்டாலோ, பிரசவத்திலே பிரச்சனை ஏற்பட்டு குழந்தை இறந்து பிறந்தாலோ நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்" என்று அப்பெண் ணின் தாய், தந்தையிடம் கேட்டான்.

இது வரை முகத்தில் எந்த சலனமும் காட்டாமல் அப்பாவியாக அமர்ந்து இருந்த அப்பெண்ணின் தந்தை தாமசின் தோள் மீது ஆதரவாக கை வைத்து பின்வருமாறு சொன்னார்...


"நீங்கள் மறுபடியும் ஒரு அட்டெம்ப்ட் அடித்து பார்க்கலாம்" என்றார் அவர்.


(கலி முத்திடுத்து சாமி... )

Comments

gabriel said…
After all everything including personal life is for compromise if at all the result is a reward or award unmindful of the custom and discipline of the society.
நான் ஏதோ உண்மையிலேயே இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட ஒரு சட்டச்சிக்கலை பத்தி எழுதியிருப்பீங்க அப்படீன்னு பார்த்தால்...........

பரவாயில்லை நல்லாயிருக்கு!!
Thanks for comments Mr. Gabriel Sir
நன்றி மாயாவி அய்யா.
களைப்பான சட்டத்திற்கு இடையே இளைப்பாற இப்படிப்பட்ட சங்கதிகளும் தேவை.
Anonymous said…
Really humorous......... Hats off to you sir........