காசோலை வரைதல் பற்றி RBI-யின் முக்கிய சுற்றறிக்கை

              வங்கி வாடிக்கையாளர்கள் காசோலை வழங்குவது தொடர்பாக இந்திய சேம வங்கி (RBI) அண்மையில் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 01-07-2010 முதல் அமலுக்கு வரும் அச்சுற்றறிக்கையின்படி,

              - வாடிக்கையாளர்கள் காசோலைகள் வழங்கும் போது அதில் உள்ள செலுத்தப் பெறுநரின் (பேயி) பெயரிலோ, காசோலை தொகையிலோ (எழுத்திலும் சரி எண்ணிலும் சரி)  திருத்தங்கள் ஏதும் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

              -செலுத்தப் பெறுநரின் பெயரில் அல்லது செலுத்தப்பட வேண்டிய தொகையில் திருத்தங்கள் / அடித்து எழுதுதல் ஆகியவற்றுடன் காசோலை வழங்கப்பட்டால் அது வங்கியால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டது அல்லது மதிப்பிற்குரிய பணம் வழங்கப்படமாட்டது.

              -செலுத்தப் பெறுநரின் பெயரிலோ, காசோலை தொகையிலோ (எழுத்து அல்லது எண்ணில் உள்ள தொகை) மாற்றங்கள் ஏதும் செய்யப்பட வேண்டி வந்தால், அதற்கு வாடிக்கையாளரால் புதிய காசோலை வழங்கப்பட வேண்டும்.

             மேற்படி வழிகாட்டு நெறிகள் மோசடியான திருத்தங்களை அடையாளம் கண்டு அதை கட்டுப்படுத்த வங்கிகளுக்கு உதவுகிறது. எனவே எதிர்வரும் 01-07-2010 முதல் செலுத்தப் பெறுநரின் பெயர், எழுத்தில் உள்ள தொகை, எண்ணில் உள்ள தொகை ஆகியவற்றில் திருத்தங்களுடன் வரும் காசோலைகளை (மேற்படி வழிகாட்டு நெறிகளின் அடிப்படையில்) வங்கிக் கிளைகள் திருப்பிக் கொடுத்து விட வேண்டும்.
  
             எனினும் காசோலையின் மீது ஒரேயொரு திருத்தம் செய்ய அனுமதிக்கப் படுகிறது. அதாவது காசோலை தேதியில் திருத்தம்  செய்யலாம்.


            எனவே வாடிக்கையாளர்கள் 01-07-2010 முதல் காசோலை வரையும் போது விழிப்புடன் இருக்கவும்.

Comments