ஐயா மாரே... அம்மா மாரே....

 

 மனித உரிமைகளைப் போற்றும் ஒரு பாடலை உருவாக்கும் முயற்சியில் அதற்கான வரிகளை நான் அண்மையில் எழுதினேன். அதில் மனித உரிமைகள் மீறலுக்கு எதிராக கிடைக்கும் தீர்வழிகள் உள்ளடக்கமாக மனித உரிமைகள் தொடர்பான அனைத்து கூறுகளையும் குறிப்பிட்டுக் காட்டியுள்ளேன். மனித உரிமைகள் மையமாக கொண்டு தமிழில் வெளிவரும் முதல் பாடலாக இது இருக்கும் என நம்புகின்றேன். நண்பர்கள் இந்த பாடலைக் கேட்டு கருத்து தெரிவிக்கும்படி அன்புடன் வேண்டுகின்றேன் - பி.ஆர்.ஜெயராஜன் (Copyright rests with P.R.Jayarajan) 

 I have written the lyrics based on Human Rights covering almost all of its elements including right to enforcement. It may be the first song in Tamil published, I hope. Please hear and comment. 

இதோ நான் எழுதியுள்ள பாடலின் வரிகள் ... 

ஐயா மாரே... அம்மா மாரே.. பெற்றோரே, பெரியோரே.. உற்றாரே... உறவினரே.. நாமெல்லாம் மனுசமாரே ... உலகம் பூரா நம்ம ஊரே ..! இந்த உலகம் பூரா நம்ம ஊரே..!! மனித உரிமை நமக்கிருக்கு, மனசு போல வாழ்விருக்கு, சமத்துவம், தனி மனித சுதந்திரம் மீறுனா நீதி கேட்டு சீறுவோம்... ஆமா நீதி கேட்டு சீறுவோம்... சோறு தின்னு வளரல எங்க உடலு, நாங்க மானத்தோடு வாழுற மக்களு.. மனித உரிமைதான் எங்க குரலு, ஆமா மனித உரிமைதான் எங்க குரலு.. அது எப்போதும் எங்களோட காவலு அது எப்போதும் எங்களோட காவலு சட்டத்தை எல்லோரும் மதிக்கணும், சமூகத்தை நீதிமன்றம் காக்கணும் ... பாகுபாடு நாமெல்லாம் தவிர்க்கணும், பாசத்தோட எந்நாளும் வாழணும், கண்ணே பாசத்தோட எந்நாளும் வாழணும் ஐயா மாரே... அம்மா மாரே.. பெற்றோரே, பெரியோரே.. உற்றாரே, உறவினரே.. நாமெல்லாம் மனுசமாரே ... உலகம் பூரா நம்ம ஊரே ..! இந்த உலகம் பூரா நம்ம ஊரே..!! நீதி நேர்மைதான் எங்க மூச்சு, அதிலே மனித உரிமைதான் எங்க பேச்சு அடக்குமுறைக்கு இடமில்லே சித்ரவதை செய்ய தடமில்லே ஒடுங்கிப் போக முடியாது; ஒதுக்கி வைக்கக் கூடாது, கண்ணே ஒதுக்கி வைக்கக் கூடாது பேச உரிமை இருக்கு, நல்ல தொழில் தொடங்க தயக்கம் எதுக்கு ? நாட்டுலே எங்கும் போக உரிமை இருக்கு, வீடெடுத்து வாழ பயம் எதுக்கு? சங்கம் ஆரம்பிக்க உரிமை இருக்கு, கூட்டம் நடத்த தயக்கம் எதுக்கு? ஆறு சுதந்திரம் நமக்கிருக்கு, இந்த ஆறு சுதந்திரம் நமக்கிருக்கு. ஆறு சுதந்திரத்த யாரும் மீறுனா, ஏன்னு கேட்க பேராணை இருக்கு; ஆமா அஞ்சு நீதிபேராணை இருக்கு... ஆதரவா நீதி சொல்ல பாதுகாப்பு ஆணையங்கள் பல இருக்கு; கேட்டு நடந்துக்கோ ராஜா, நல்லா கேட்டு நடந்துக்கோ... கேட்டு நடந்துக்கோ ராஜா, இத நல்லா கேட்டு நடந்துக்கோ ... ஐயா மாரே... அம்மா மாரே.. பெற்றோரே, பெரியோரே.. உற்றாரே, உறவினரே.. நாமெல்லாம் மனுசமாரே ... உலகம் பூரா நம்ம ஊரே ..! இந்த உலகம் பூரா நம்ம ஊரே..!!

Comments