சர்வதேச சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி தரும் "பப் தெரு" (Pub Street) - P.R.Jayarajan


தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் கோயில் உலக பிரம்மாண்டங்களில் ஒன்று என்பதை நாமனைவரும் அறிவோம். அங்கு இது போன்று பார்க்க வேண்டிய புராதனக் கோவில்கள் நிறைய உள்ளன. மேலும் கடல் போல் பரந்து காணப்படும் "டான்லே சாப்" ஆறு மற்றொரு பிரமாண்டம். மேலும் 'நாம்குளன்' மலையிலிருந்து ஓடி வரும் ஆற்று நீருக்கு அடியில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் செதுக்கப்பட்டு இருக்கும் ஆயிரம் லிங்க சிலைகள் நமக்கு வியப்பை தரக்கூடியதாகும். 

இப்படி சுற்றிப்பார்ப்பதற்கு பல இடங்கள் கம்போடியாவில் நிறையவே உள்ளன. அந்தப்பட்டியலில் அங்கிருக்கும் "பப் தெருவும்" (Pub Street) இடம் பிடிக்கின்றது.

கிளைகிளையாக நாற்புறமும் பிரிந்து செல்லும் இந்தத் தெருக்களில் கேளிக்கையும் உண்டு, விலை கேட்டு வாங்க கலைப் பொருட்களும் உண்டு. மலிவாக துணிமணிகளும் வாங்கலாம்; பொலிவான பரிசுப்பொருட்களையும் தேடலாம்.

கம்போடியில் உள்ள சியம்ரீப் மாகாணத்தில்தான் இந்த அதிசய கோவில் அங்கோர்வாட் உள்ளது.  அங்குதான் இந்த பப் தெருவும் உள்ளது. எனவே அங்கோர்வாட் உள்ளிட்ட இதர சுற்றுலா முனைகளைக் காண வரும் சர்வதேச பயணிகள் அனைவரும் தங்கள் மாலை நேர களிப்பு, இரவு நேர பன்னாட்டு உணவு, கடைகளில் பொருள் வாங்கல், ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டத்தை தருவது இந்த பப் தெருதான் என்று சொன்னால் அதில் மிகை ஒன்றுமில்லை. 

கம்போடியா சென்றால் இந்த பப் தெருவில் ஒரு நீண்ட நடை சென்று வேடிக்கை பார்த்து வரலாம்.  நாம் சென்றிருந்த நேரம் நடுத்தெருவில் ஒரு பெண் நெருப்புடன் நடனமாடிக் கொண்டிருந்தாள். அதை காணொலிப்படுத்தியதை  இங்கு தந்துள்ளேன்.

மேலும் பல உணவகங்களின் முன் பின்வருமாறு ஒரு அறிவிப்பு பதாகை வைத்திருந்தார்கள. அதில் கண்ட வாசகங்கள், "நீரை சேமியுங்கள்; பீரை குடியுங்கள்" என்று கருத்துரைக்கின்றது. மேலும் ஒரு பீரின் அமெரிக்க மதிப்பு 50 சென்ட் என எழுதப்பட்டிருந்தது. அதாவது இன்றைய அன்னிய செலாவணிப்படி நமது இந்திய மதிப்பில் 38 ரூபாய்.


 கம்போடியா சென்றால் இந்த பப் தெருவை நழுவ விடாதீர்கள்!

- பி.ஆர்.ஜெயராஜன்.
To buy books online please visit
www.shripathirajanpublishers.com

Comments