CLAT நுழைவுத் தேர்வு 2020 - P.R.ஜெயராஜன்
CLAT நுழைவுத் தேர்வு 2020 - விண்ணப்பிக்க இறுதி நாள் 25/4/2020:
தேசிய சட்டப் பல்கலைக்கழகம் நடத்தும் தேசிய சட்டப்பள்ளிகளில் (National Law Schools) சேர்ந்து சட்டப்படிப்பு பயில வாய்ப்பு.
+2 மற்றும் B.Sc., B.Com., B.A., இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களின் கனிவான கவனத்திற்கு: -
CLAT 2020 நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க இறுதி தேதி 25 ஏப்ரல் 2020.
நுழைவுத்தேர்வு தேதி : 24 மே 2020 ஞாயிறு பிற்பகல் 3.00 முதல் 5.00 மணிவரை நடைபெறும்.
இந்தியாவில் 19 இடங்களில் தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் (National Law Universities) உள்ளன. இவை நடத்தும் தேசிய சட்டப்பள்ளிகளில் சேர CLAT நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.
நம் தமிழ்நாட்டில் திருச்சியில் உள்ள திருவரங்கத்தில் தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளி (Tamil Nadu National Law School) அமைந்துள்ளது.
மேலும் சில நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் (Deemed Universities) நடத்தும் சட்டப்பள்ளிகளில் சேரவும் இந்த நுழைவுத் தேர்வு மதிப்பெண்ணை தகுதியாக எடுத்துக்கொள்கிறார்கள்.
நுழைவுத் தேர்வு விண்ணப்பிக்க வேண்டிய நிகழ்நிலை (ஆன்லைன்) இணையதள முகவரி https://consortiumofnlus.ac.in/clat-2020/
+2 முடித்த மாணவர்கள் B.A, LLB & B.Sc, LLB & B.Com, LLB (5 years integrated course) போன்ற படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். +2 வில் எந்த குரூப் எடுத்து படித்து இருந்தாலும் விண்ணப்பிக்க முடியும்.
B.Sc, B.Com மற்றும் B.A., முடித்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
இந்தத் தேர்வு வழக்குரைஞராக ஆவதற்கு மட்டுமின்றி, அதன் பின் நீதிபதிகளாகும் வாய்ப்பையும், சட்ட ஆலோசகர், நிறுவன சட்ட அலுவலர், சட்டக்கல்லூரி விரிவுரையாளர் மற்றும் பேராசிரியர் உள்ளிட்ட பல பதவிகளுக்கான வாய்ப்புகளையும் வழங்குகிறது. இந்திய ஆட்சிப்பணியாளராகும் வாய்ப்பையும் இது தருகிறது.
இன்றைய காலகட்டத்தில் இந்தியாவின் மிகச்சிறந்த உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களை உருவாக்கிய கல்வி நிறுவனங்களான தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்து சட்டக்கல்வி படிப்பது என்பது மதிப்பு மிக்க வாய்ப்பாக உள்ளது.
தகுதி உள்ள அனைவரும் விண்ணப்பித்து வெற்றி பெறவும், சமூக நல நோக்குடன் கூடிய சட்ட மேதைகளாக இளந்தலைமுறை உருவாகவும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
என்றும் அன்புடன்,
P.R.ஜெயராஜன்
வழக்குரைஞர், சட்ட நூலாசிரியர்
மற்றும் சட்டக்கல்வியாளர், சேலம்.
(நிழற்படங்கள் அனைத்தும் வெற்றி நிச்சயம் என்ற கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் முன்னதாக எடுக்கப்பட்ட கோப்புப்படங்கள் ஆகும். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி நடத்தப்படவில்லை)
Comments