'கொரோனா... என்னை உன்னாலே ஒன்னும் பண்ண முடியாது' - பி.ஆர்.ஜெயராஜன்


அதிகாலை நான்கு மணியிருக்கும்.
அடித்தொண்டை கரகரத்தது.
சிறிய கமறலுடன் தொடங்கிய இருமல்,
பெரிதாகி நிற்காமல் தொடர்ந்து வந்தது.
மூச்சு விட சிரமமாக இருந்தது. .
நெஞ்சு அடைத்து திணறினேன்.
வெளியே காற்று இருந்தும், அதை
உள்ளுக்குள் இழுக்க முடியவில்லை.
முகம் சாகத் தயாராக கோணியது.
கை கால்கள் இழுக்கத் தொடங்கின.
உதவிக்கு அழைக்க நா எழவில்லை.
பார்வை மங்க ஆரம்பித்தது.


மனைவி, குழந்தைகள் என் கண்
முன் தோன்றி அழகாகச் சிரித்தனர்.
அடுத்ததாக, ஏற்கனவே செத்துப் போன
உறவினர்கள் சிலர் வரிசையாகத் தோன்றி
'வாவா..வந்துவிடு' என இரு கரம் நீட்டி
வரவேற்பது போல் நின்றனர்.

அதே நேரம் தேவலோகத்தில் இருந்து
கின்னர கிம்புருடர்கள் அப்சரஸ்களுடன் 
தோன்றி "போலாம் ரெடியா?" என்றனர்.
வண்ணமயமான கொரோனா வைரஸ்
கூட்டம் என் நுரையீரலை குறிவைத்து 

கழுகாக வட்டமடித்தன.

இறுதிச் சக்தி எல்லாவற்றையும் திரட்டி
'கொரோனா... என்னை உன்னாலே
ஒன்னும் பண்ண முடியாது' என்று
கத்தினேன்.
.
அருகில் படுத்திருந்த என் மனைவி,
"ஏங்க..என்ன இது விடியக்காலைலே
இப்படி பிணாத்திகிட்டு இருக்கீங்க?"
என்றவாறு என் தொடையில் ஓங்கித்
தட்டியவுடன் எனக்கு பட்டென தூக்கம்
தெளிந்தது.

"சும்மா ஃபேஸ் புக் பாக்காதீங்க..
வாட்ஸ்ப் பாக்காதீங்க..
கொரோனாவப் பத்தி எதுவும்
எழுதாதீங்கன்னு படிச்சுபடிச்சு சொன்னேன்..
கேட்டாத்தானே? எங்கிட்டே சவால் விடற
மாதிரியே அதுகிட்டேயும் சவால் விட்டா
செல்லுமா....?" என்றவாறு மீண்டும்
தூங்கிப்போனாள் என் மனைவி.

#PRJ

Comments