உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான 5 வாஸ்து குறிப்புகள்

www.shripathirajanpublishers.com


 வாஸ்து மீது நம்பிக்கை இருக்கின்றதோ இல்லையோ, வீடு கட்டும் பொழுது வாஸ்துப்படிதான் கட்டுகின்றார்கள். வாஸ்து என்பதை ஒரு மூட நம்பிக்கை என்பதை விட அதை புவிப்புறவியல், சுற்றுச்சூழலியல் சார்ந்த ஓர் அறிவியலாக மக்கள் பார்க்கத் தொடங்கி பல ஆண்டுகள் கடந்துவிட்டன.

"இதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை" என்று கூறும் எத்தனையோ கட்டட உரிமையாளர்கள் வாஸ்து பார்த்து கச்சிதமாக வீடு காட்டும் பொறியாளர் அல்லது மேஸ்திரியைத்தான்  தங்கள் வீடு கட்டும் பணிக்கு அமர்த்திக் கொள்கிறார்கள்.

"ஈசானியத்தில் (வடகிழக்கு) சம்பு தொட்டி இருக்க வேண்டும்" என்பதில் தொடங்கி "நைருதி (தென்மேற்கு) மூலை எல்லாத்தையும் விட கொஞ்சம் உசந்து இருக்க வேண்டும்; ஓவர் ஹெட் டேங்க் அதன் மீது இருக்க வேண்டும்"  என்றெல்லாம் ஆரம்பத்தில் வாஸ்து நிபுணர்களால் சொல்லப்பட்டு வந்த வாஸ்து சாஸ்திரம், பின்னாளில் அனைவருக்கும் தெரிந்த ஓர் விடயமாக மாறிப்போனது என்பதை யாரும் மறுக்க முடியாது. இன்று ஒவ்வொரு வீட்டிலும் யாரேனும் ஒருவர் அல்லது இருவர் வாஸ்து சாஸ்திரம் நன்கு அறிந்த நபராக இருப்பார்கள் என்பதில் எனக்கு மாற்றுக கருத்தில்லை.

இப்படி வாஸ்து சாஸ்திரம் அனைவரும் அறிந்த ஒன்றாக மாறிப் போனாலும் வாஸ்து நிபுணர்களும் விடாமல் வாஸ்துவை நமது வாழ்வின் பல்வேறு நிகழ்வுகளுக்கும் தொடர்புபடுத்தி புதிதுபுதிதாக கருத்து சொல்வதை மட்டும் நிறுத்தவில்லை.

அந்த வகையில் நாம் இன்று காணவிருப்பது நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஐந்து வாஸ்து குறிப்புகள் :- 


1. நமது உடலின் மையப்பகுதி வயிறு. நமது வீட்டின் மையப்பகுதி நமது உடலின் மையப்பகுதியை பாதிக்கின்றது. எனவே நமது வீட்டின் மையப்பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும். மையப்பகுதியில்ஆள்துளைக் கிணறு அமைப்பது, மின் ஆக்கி அல்லது இன்வெர்ட்டர் பாட்டரி வைப்பது, படி அல்லது கழிவறை கட்டுவது ஆகியன செய்தால் நமக்கு வயிற்றுக் கோளாறு வர வாய்ப்புண்டு என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகின்றது.
 
2. வீட்டின் மையப்பகுதியை ஓர் வழித்தடமாக பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது சாப்பிட்டது வயிற்றில் தங்கி செரித்து வெளியேறும் தடம் போல் நேராக. மேலும் அந்த இடத்தில உணவு உண்ணும் மேஜையை (டைனிங் டேபிள்) வைக்கலாம்.

3. தென்கிழக்கு பகுதி, அந்த வீட்டில் வாழும் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதிக்கின்றது. தென் மேற்கு பகுதி வீட்டில் உள்ள வயதானவர்களின் உடல்நலத்தை குறிக்கின்றது. எனவே இந்த இரண்டு பகுதிகளிலும் விரிசல்கள், சுரங்க அறைகள், கழிவு நீர் தொட்டிகள், சாக்கடைகள் இருக்கக் கூடாது.

4. வடகிழக்கு பகுதியில் குப்பைத் தொட்டி, கழிவறை ஆகியன இருக்கக் கூடாது. இந்த பகுதியும் மிகவும் சுத்தமாக இருக்கவேண்டும். சமையல் அறையில் மருந்துகள் இருக்கக் கூடாது. அங்கு மருத்துகளை வைத்திருததால், ஆரோக்கியக் கோளாறுகள் அதிகமாகும்.

5. உறங்கச் செல்லும் முன் தலையை தெற்கு அல்லது கிழக்கில் வைத்து உறங்க வேண்டும்.  தென் மேற்கு மூலையில் அந்த வீட்டின் உரிமையாளர் அல்லது முதியோர்கள் வசித்து வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும். படுக்கையறைக்கு உகந்த இடம்.

இந்த குறிப்புகளை பின்பற்றுவது என்பது அவரவர் விருப்பத்திற்கு உரியது.

#ஜெயராஜன்
www.shripathirajanpublishers.com

Comments