குடும்ப வன்முறைக்கு எதிரான புகார் ஒன்றில் எதிர்த்தரப்பினருக்கு அறிவிப்பு அனுப்பும் முன்பாக, அங்கு குடும்ப வன்முறைக்கான நிகழ்வுகள் உள்ளன என்று வழக்கின் முதற்தோற்றத்திலேயே நீதிமன்றம் மனநிறைவு அடைய வேண்டும்- உச்ச நீதிமன்றம்


குடும்ப வன்முறைக்கு (Domestic Violence) எதிரான புகார் ஒன்றில் எதிர்த்தரப்பினருக்கு அறிவிப்பு அனுப்பும் முன்பாக, அங்கு குடும்ப வன்முறைக்கான நிகழ்வுகள் உள்ளன என்று வழக்கின் முதற்தோற்றத்திலேயே (Prima facie case) நீதிமன்றம் மனநிறைவு அடைய வேண்டும், அதன் பிறகே அறிவிப்பு அனுப்ப வேண்டுமென அண்மையில் உச்ச நீதிமன்றம் குற்றவியல் மேல்முறையீடு ஒன்றில் கருத்துரைத்துள்ளது.

இந்த வழக்கில் தனது கணவன், அவனது பெற்றோர்கள் உள்ளிட்ட 14 நபர்கள் மீது குடும்ப வன்முறைக்கான குற்றச்சாட்டை மனைவி செய்கின்றாள். தனது கணவனும், அவனது பெற்றோர்களும் தவிர மீதமுள்ள எதிர்மனுதாரர்கள் அனைவரும், கணவனின் உறவினர்கள்; வெவ்வேறு மாநிலங்களில் வசிப்பவர்கள்.

மனைவி தனது புகாரில், திருமணத்தின் போது தனது தந்தை பரிசாகக் கொடுத்த நகைகளை தனது கணவனும் (14-ஆம் மேல்முறையீட்டாளர்), அவனது பெற்றோர்களும் (1 மற்றும் 2-ஆம் மேல்முறையீட்டாளர்கள்) பறித்துக் கொண்டனர் என்றும், கொடுமைகள் செய்தனர் என்றும் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார். இவற்றை ஆராய்ந்த மாண்பமை நீதியரசர்கள் ஆர்.பானுமதி, ஏஎஸ். போபண்ணா, ஹரிஷ்கேஷ் ராய் ஆகியோர் அடங்கிய ஆயம், தனது தீர்ப்பில், "குடும்ப வன்முறைக்கான செயல்களுக்கு கணவரின் உறவினர்கள் (3 முதல் 13 வரையிலான  மேல்முறையீட்டாளர்கள்) எவ்வாறு காரணமாயினர் என்பது தொடர்பாக குறித்தவகையிலான குற்றச்சாட்டுகள் ஏதும் புகாரில் இல்லை என்றும், குஜராத் மற்றும் ராஜஸ்தானில் வசிக்கும் அந்த மற்ற உறவினர்கள் பணத்தொகை வடிவிலான நிவாரணத்தை (Monetary Relief) எதிர்மனுதாரருக்கு (மனைவிக்கு) வழங்க பொறுப்புடைவார்களாக்க முடியும் என்றும், அவர்கள் மீது குடும்ப வன்முறைக்கான முதற்தோற்ற வழக்கு உள்ளது என்று உயர் நீதிமன்றம் கூறுவது சரியல்ல என்றும், அவர்களுக்கு எதிராக குறித்தவகையிலான குற்றச்சாட்டுகள் ஏதும் புகாரில் இல்லாத நிலையில், அவர்களுக்கு எதிரான குடும்ப வன்முறை குற்றவியல் வழக்கை தொடர்ந்து நடத்த இயலாது என்றும், எனவே நசித்து (இரத்து) போகக் கடவது (liable to be quashed) என்றும்," கருத்துரைத்தனர்.

குடும்ப வன்முறை சட்டத்தின் வகைமுறைகளை சுட்டிக்காட்டி மாண்பமை உச்ச நீதிமன்றம் கருத்துரைக்கையில், பிரிவு 18-ஆனது பாதுகாப்பு ஆணை தொடர்பானது என்றும், இதன்படி பார்த்தால் பெண்களுக்கு அதிக பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதையே தனது நோக்கமாக நாடாளுமன்றம் கொண்டுள்ளது என்றும், பிரிவு 20, 'குறையுற்ற தரப்பினருக்கு' (Aggrieved party) பண்வடிவிலான நிவாரணத்தை வழங்க ஆணையிடும் அதிகாரத்தை நீதிமன்றத்திற்கு பிரிவு 20 வழங்குகிறது என்றும் கூறியது. மேலும், குடும்ப வன்முறைக்கான செயல்கள் குறித்து சாட்டுரைக்கப்படும் போது, நீதிமன்ற அறிவிப்பு அனுப்புவதற்கு முன்பாக, அங்கு குடும்ப வன்முறைக்கான நிகழ்வுகள் இருப்பதாக நீதிமன்றம் முதற்தோற்ற மனநிறைவு அடைந்திருக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.

முடிவில், 3 முதல் 13 வரையிலான மேல்முறையீட்டாளர்களுக்கு (கணவனின் உறவினர்கள்) எதிரான குடும்ப வன்முறை புகாரை இரத்து செய்து, குற்றவியல் மேல்முறையீட்டை பகுதியளவில் அனுமதித்து தீர்ப்புரைத்தது.

தீர்ப்புக்கு பின்வரும் இணைப்பின் மீது சொடுக்கவும்.
https://www.livelaw.in/pdf_upload/pdf_upload-369383.pdf

(8.Section 18 of the Domestic Violence Act relates to protectionorder. In terms of Section 18 of the Act, intention of the legislatureis to provide more protection to woman. Section 20 of the Actempowers the court to order for monetary relief to the “aggrieved party”. When acts of domestic violence is alleged, before issuingnotice, the court has to be prima facie satisfied that there have been instances of domestic violence. 

11. In the result, Crl. Misc. No.53 of 2015 filed against the appellants No.3 to 13 is quashed and this appeal is partly allowed. The learned VI Additional Metropolitan Magistrate at Bengaluru shall proceed with Crl. Misc. No.53 of 2015 against appellants No.1, 2 and 14 and dispose the same in accordance with law. We make it clear that we have not expressed any opinion on the merits of the matter.) 

IN THE SUPREME COURT OF INDIA
Criminal Appellate Jurisdiction
CRIMINAL APPEAL NO. 141 OF 2020
(Arising out of SLP(Crl.) No.4979 of 2019)
SHYAMLAL DEVDA AND OTHERS .....Appellants
VERSUS
PARIMALA .....Respondent.
Judgment Dated 22/01/2020


 




Comments