கம்போடியாவில் "உலகத் தமிழ் கவிஞர்கள் மாநாடு, 2019" - பி.ஆர்.ஜெயராஜன்

தென் கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவின் சியாம் ரீப் நகரில் உலகத் தமிழ் கவிஞர்கள் மாநாடு ம்மாதம் நடக்கவிருக்கின்றது.


செப்டம்பர் 20, 21-ம்  தேதிகளில் நடக்கும் இப்பெரும் மாநாட்டின் ஏற்பாடுகளை அங்கோர் தமிழ் சங்கம், பன்னாட்டு தமிழர் நடுவம், சீனுஞானம் பயண ஏற்பாட்டாளர்கள் செய்து வருகின்றனர்.


இது குறித்து அங்கோர் தமிழ் சங்கத்தின் துணைத் தலைவர் திரு.இரமேஸ்வாரன் "சட்டப்பார்வை'-க்கு அளித்த சிறப்பு பேட்டியில், "உலகெங்கும் உள்ள தமிழ் கவிஞர்கள், தமிழுக்கு தொண்டாற்றிய அறிஞர் பெருமக்கள் மற்றும் தமிழ் ஆராய்ச்சியாளர்கள் இதில் கலந்து கொள்ளவிருப்பதாகவும்,  அவர்கள் தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பை போற்றும் விதமாக அவர்களுக்கு மாநாட்டு நிறைவு நாளில் விருதுகள் வழங்கப்படவிருப்பதாகவும், மேலும் மாநாட்டில் பங்கேற்றோருக்கு கம்போடிய சுற்றுப்பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், 22 முதல் 25 வரை நடக்கும் இச்சுற்றுலாவில் உலகப் புகழ் பெற்ற அங்கோர்வாட் கோயிலை சுற்றிப்பார்த்தல், ஆயிரம் லிங்க மலை தரிசனம், டோன்லே சாப் ஏரியில் படகு பயணம் ஆகியன அடங்கும் என்றும் தெரிவித்தார்.


அவர் மேலும் கூறுகையில், "மாநாட்டிற்கு வருகை தருவோர் அனைவரும் தங்குவதற்கு  நட்சத்திர விடுதி வசதி மற்றும் மூன்று வேளை சுவையான இந்திய உணவுக்கு  ஏற்பாடு செய்திருப்பதாகவும், விருதுக்கு விண்ணப்பிக்கும் முறை, விமான பயண சீட்டு பதிவு, கம்போடியா நுழைவிசைவு (விசா) பெறுதல், சுற்றுலா கட்டணம் உள்ளிட்ட மேலதிக விவரங்களுக்கு தனது செல்லிட பேசி கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) எண். +85511473133 க்கு தொடர்பு கொண்டால் உடன் தகவல் தெரிவித்து வழி காட்ட தயாராக இருப்பதாகவும்" கூறினார்.





மிகப் பிரமாண்டமாக நடக்கவிருக்கும் இந்த மாநாட்டில் திரைத்துறை கவிஞர்கள், பாடலாசிரியர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

Comments