அன்பிற்குரிய முனைவர் புலவர் வை.சங்கரலிங்கம் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் !
கோடையில் வந்த மழையே; தமிழுக்கு
கொடை தந்த புலமையே..
கோடியில் தேடினாலும் கிடைக்காத அபூர்வமே ..
மாடி வீட்டுத் தோட்டமே...
மதுரை தந்த சொக்கத் தங்கமே...
எனதன்பு சங்கர லிங்கமே...
காந்தர்வன் காலடி தடங்களை தேடி
கண்ணியம் பெற்ற முனைவரே....
சிரிக்க சிரிக்க பேசும் சிந்தையே
சிறந்ததை உரத்துக்கூறும் விந்தையே ..
பழங்காநத்தம் வாழ் ஞானப்பழமே
பல காலம் வாழ்கவே...
உங்கள் பிறந்த நாளாம் இந்த
உன்னத திரு நாளில்
இன்று போல் என்றும் வாழ
என் நெஞ்சுநிறை வாழ்த்துக்கள்.
-என்றும் அன்புடன்,
பி.ஆர்.ஜெயராஜன்,
வழக்குரைஞர்,
சட்டக் கல்வியாளர் மற்றும்
சட்ட நூலாசிரியர்.
Comments