ஆர்குட்டுக்கு மூடு விழாவாம்....!
ஆரம்பத்தில் அதாவது 2005-06 ஆண்டுகளில் நான் 'ஆர்குட்' பயன்படுத்தி
வந்தேன். அந்தக் காலகட்டத்தில் ஆன்ட்ராய்டு போன்கள், 3G போன்ற வசதிகளுக்கு
பெரிய அறிமுகம் ஏதும் இங்கில்லை. எனவே ஆர்குட்டில் நுழைய கணினியை பெரிதும் சார்ந்து இருக்க வேண்டியிருந்தது.
அதே காலகட்டத்தில் Blog என்ற இப்படிப்பட்ட வலைப்பதிவுகளில் எழுதுவது பெரிதும்
வளர்ச்சியுற்றது. 'நான் ஒரு பிளாக் ஓனர்' என்று சொல்வது 'நான் ஒரு பிளாட்
ஓனர்' என்று பெருமையாக சொல்வதற்கு ஒத்ததாக இருந்தது. இதனால் 'ஆர்குட்' கவர்ச்சி
குறைய ஆரம்பித்தது.
இந்நிலையில் நான் "Satta Parvai - சட்டப்பார்வை - The Legal Vision" என்ற எனது வலைப்பதிவில் நிறைய கட்டுரைகள் எழுதினேன். பல்வேறு நாடுகளில் இருந்து இதுகாறும் சுமார் 1,25,000 பேர் வாசித்துள்ளனர் அல்லது வருகை தந்துள்ளனர். இருந்தாலும் வலைப்பதிவு மூலம் கருத்து மற்றும் கட்டுரை வெளியிடும் ஆர்வம் அல்லது மோகம், டுவிட்டர் மற்றும் பேஸ்புக் வருகையால் கொஞ்சம் குறைந்தது. இது ஆன்ட்ராய்டு போன், டேப் மற்றும் 3G யின் சகஜ வருகையால் மேலும் குறைந்தது.
இந்நிலையில்தான் ஆர்குட்டை அனைவரும் சுத்தமாக மறந்து போயினர். தனது சரிவைப் பற்றி ஆர்குட்-ம் பெரிதாக கவலைப்படவில்லை.
ஆர்குட் தொடர்பின் போது அயல்நாட்டு வாழ் தமிழர்கள் நிறைய பேர் எனக்கு நண்பர்களாயினர். சிறிது காலம் பழகினாலும், மின்னஞ்சல், குறுஞ்செய்தி தொடர்பு ஆகியவற்றுக்கு அடுத்து ஆர்குட்டே எனக்கு மிகப்பெரிய சமூக வலைத் தொடர்பாக இருந்தது.
அதற்கு மூடு விழாவாம்.... நெஞ்சம் கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது... ஆர்கூடே இனி நீ யார் கூடவும் இல்லை....

Comments