இன்று என்னுடைய பிறந்த நாள்...
இன்று என்னுடைய பிறந்த நாள்...
காலம் வேகமாக போய் விட்டது. என்ன செய்தேன்..? எப்படி வாழ்ந்தேன்...? எந்த அளவுக்கு மற்றவர்கள் விரும்புமாறு வாழ்ந்தேன்? நான் என்னை விரும்பி வாழ்ந்தேனா?
எல்லாம் கேள்விகள்....????
எனினும், என்னைப் பொருத்தவரை யாருக்கும் கெடுதல் செய்யவில்லை. யாரையும் வஞ்சிக்கவில்லை. துரோகம் செய்யவில்லை. நேர்மைக்கு சோதனை வந்தாலும் நிதானம் கடைப்பிடித்திருக்கிறேன். எனது சட்ட அறிவை மற்றவர் வாழவே பயன்படுத்தியுள்ளேன். மேலாக 'பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே.." என்றே வாழ்ந்து வந்திருக்கின்றேன். அதை இந்த நிமிடம் வரை கடைப்பிடித்து வாழ்ந்து வருகின்றேன். தொடர்ந்து அவ்வாறு வாழ மன வலிமை, திட்பம் வேண்டும் என வேண்டுகின்றேன்; ஆண்டவனை வணங்குகின்றேன். ஆனாலும், விதி வசம் அகப்பட்ட வாழ்க்கையில் நல்ல எண்ணங்கள் என்றும் தோற்றுப் போனதில்லை என்றே கருதுகின்றேன்.
அண்மையில் ஒரு அம்மையார் மேடைப் பேச்சு ஒன்றின் போது, "நல்லது நடக்கும் என்று நினைத்து செயல்பட்டால் நிச்சயம் நல்லது நடக்கும்" என்று பேசியதை செய்தித் தாளில் வாசித்தேன். மனது முழுக்க தீய எண்ணங்களை வைத்துக் கொண்டு நல்லது நடக்கும் என்று நினைத்து செயல்பட்டால் எப்படி அது நடக்கும்? எனவே வேண்டிய அடிப்படை யாதெனில், நல்ல எண்ணங்கள். தொடர்ந்து நல்ல செயல்கள். நிச்சயம் நல்லது தானாக நடக்கும் என்று நம்புகின்றேன்.
குற்றவியல் சட்டத்தில் ஒரு குற்ற செயலுக்கு குற்ற மனம் (mens rea) இருந்ததா என்பதை கவனிக்க வேண்டும் என்று சட்டம் சொல்கின்றது. எனவே ஒன்று குற்ற செயலா (actus reus) என்று ஆராயும் முன்பு குற்ற மனம் இருந்ததா என்பதையும் ஆராய வேண்டியது அவசியமாக உள்ளது. குற்ற மனமில்லாச் செயல் குற்றமாவதில்லை [actus non facit reum nisi mens sit rea, which means: "an act does not make a person guilty unless (their) mind is also guilty] என்பது சட்டக் கோட்பாடு. எனவே குற்ற மனமில்லாமல் வாழ்வது சிறந்த ஒன்று.
கடந்த கால பிறந்த நாட்களில் இருந்து தொடங்கிய வாழ்க்கையில் நிறைய சவால்கள், நிறைய நண்பர்கள், அதே நேரத்தில் நண்பர்கள் போர்வையில் எதிரிகள், சுயநலவாதிகளின் சொரூபங்கள், பிரச்சனைகள், சூழ்ச்சிகள், சமாளிப்புகள் என எல்லாவற்றையும் மிக மிக பொறுமையுடன் பார்த்து வருகின்றேன். எல்லாம் காலம் கற்றுத் தரும் பாடம். சகிப்புத் தன்மையுடன் வாழ்ந்து வருகின்றேன்.
நிறைய பேர்களை அடையாளம் கண்டு கொண்டேன். விலகி இருக்கின்றேன். இது வரை வாழ்ந்ததோ, கற்றுக் கொண்டதோ ஏதுமில்லை என்று உணர்கின்றேன். இனி வாழ்வதும், கற்றுக் கொள்ள வேண்டியதும் நிறைய உள்ளது என்று அறிகின்றேன்; அறிய வைக்கப்பட்டிருக்கின்றேன்.
இப்படி பல்வேறு உணர்வுகளின் நடுவே பிறந்திருக்கும் இந்தப் பிறந்த நாளில் பதிவுலக நண்பர்களின் வாழ்த்துகளை வேண்டுகின்றேன்.
என்றும் அன்புடன்,
பி.ஆர்.ஜெயராஜன்.

Comments
நாம் பிள்ளைகள் போலே
தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்! “
தங்களுக்கு எனது உளங்கனிந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!
பிறந்தநாளுக்கான மனம் நிறைந்த இனிய வாழ்த்து(க்)கள்.
நல்லா இருங்க!
ஆசிகள்.
அகத்தின் அழகு முகத்தில் மட்டுமல்ல
எழுத்தில் கூடத் தெரியும்
உங்கள் பண்பின் நலத்தை
உயர்ந்த எண்ணத்தை தங்கள்
பதிவின் மூலம் அறிந்து மகிழ்ந்தேன்
தங்கள் பதிவுகளைத் தொடர்வதில்
பெருமிதம் கொள்கிறோம்
வளத்தோடும் நலத்தோடும்
வாழ்க வாழ்க பல்லாண்டு
//“ பிறந்த நாள்! இன்று பிறந்த நாள்!
நாம் பிள்ளைகள் போலே
தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்! “
தங்களுக்கு எனது உளங்கனிந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!//
தங்கள் பிறந்த நாள் வாழ்த்துப் பாடலுக்கு மிக்க நன்றி அய்யா ...
//அட! வெறும் 46 தானா? அப்ப வாழ்த்த வயதிருக்கு!!!!
பிறந்தநாளுக்கான மனம் நிறைந்த இனிய வாழ்த்து(க்)கள். நல்லா இருங்க ஆசிகள்.//
பெரியோர்களிடம் ஆசி பெற்ற பெருமை கொண்டேன்.. நன்றி அம்மா..
//இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே அகத்தின் அழகு முகத்தில் மட்டுமல்ல எழுத்தில் கூடத் தெரியும்
உங்கள் பண்பின் நலத்தை உயர்ந்த எண்ணத்தை தங்கள் பதிவின் மூலம் அறிந்து மகிழ்ந்தேன் தங்கள் பதிவுகளைத் தொடர்வதில் பெருமிதம் கொள்கிறோம் வளத்தோடும் நலத்தோடும் வாழ்க வாழ்க பல்லாண்டு//
புதிய உற்சாகம் தரும் நீண்ட பிறந்த நாள் வாழ்த்து மடலுக்கு என் நெஞ்சு நிறை நன்றிகள் பல.....
//46 வது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.எல்லா நலன்களும் பெற்று மென்மேலும் வளர வாழ்த்துக்கிறேன்//
நாலும் ஆறும் பத்து; பிறந்த
நாளும் அதுவுமாக உங்கள் வாழ்த்து முத்து.
//எனது மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...//
நன்றி சொல்ல உங்களுக்கு
வார்த்தை இல்லே எனக்கு....!
மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்....!!
//மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்....!//
ஆன்மிகப் பதிவரிடம் ஆசி பெற்றது என் பாக்கியம் ... நன்றி...
//இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.//
Thanks for the wishes Sir...
பல்லாண்டு வாழ்க!
//இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
பல்லாண்டு வாழ்க!//
வாழ்த்துகளுக்கு நன்றி புலவரைய்யா ...
//இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்...//
நன்றி சங்கவி சார்...
//மன நேர்மையான ஒரு வாக்குமூலம் - இந்த பிரபஞ்சம் எனும் பதிவின் மேல் .வாழ்த்துக்கள் சொல்ல வயதில்லை வணங்கிகொள்கிறேன்//
புதிய கோணத்தில் வாழ்த்துரைத்தமைக்கு நன்றி....
many more happy returns of the day
believe kannan lives in our heart and always accompany it gives a great support forget all good bad thoughts happily live with kanna
rens