வாங்க..... கொஞ்சம் பிராக்டிகலா நடந்துக்குவோம்..!

இந்த தலைப்பை 'வாருங்கள்... சற்றே செயல்முறை சாத்தியமாக நடந்து கொள்வோம்..!" என்று நற்றமிழில் சொல்லலாம்.

கெடுபிடியான, வழக்கமான, சிரமமான முறையை விட்டுவிட்டு, தளர்வான, விரும்பத்தக்க புதிய நடைமுறையில் அமைந்த, சுலபமான வழியில் செயல்படுவது. இதை 'பிராக்டிகல்' என்கின்றோம். இதற்கு முன் சொன்னது போல், செயல்முறை அல்லது காரிய சாத்தியமான, நடைமுறை சார்ந்த, அனுபவத்தில் தெரிகின்ற, காரியத்துக்கு பயனாகின்ற என்று தமிழில் பொருள் சொல்லலாம்.

சரி... விடயத்திற்கு வருவோம்..

இன்று எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம். குறிப்பாக என்னதான் இணைய தள சேவைகள் பல இருந்தாலும், அரசு அலுவலகங்கள், வங்கிகள், பேருந்து நிலையங்கள், தொடர்வண்டி நிலையங்கள் ஆகிய இவற்றில் நேர்விற்கேற்றவாறு தங்கள் காரியங்களை முடித்துக்கொள்ள அல்லது பயணச் சீட்டு வாங்க என மக்கள் கால்கடுக்க பல மணி நேரங்கள் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது.

இதை தவிர்க்க செயல்முறையில் என்ன செய்யலாம் என்று ஒருவர் நினைத்தார். அதாவது பெரிய அளவில் செய்ய வாய்ப்பு குறைவு என்றாலும், சூழலுக்கு தக்கவாறு எளிமைப்படுத்த ஒரு சிந்தனை செய்தார். அதன் விளைவுதான் பின்வரும் நிழற்படம்.



நேரடியாக வரிசையில் நின்றால்தான் காரியம் நடக்குமா...? இப்படி செயல்முறையில் நின்றாலும் உரிய நேரத்தில் காரியம் நடக்கும். இப்போது புரிகின்றதா...?

விதிவிலக்கு :

எனினும் இன்று பல வங்கிகளிலும், காப்பீட்டு நிறுவனங்களிலும்  வரிசை எண் ஒன்றை அச்சடிக்கப்பட்ட சீட்டு வடிவில் வரவேற்பு முகப்பில் உள்ள தானியங்கி இயந்திரம் ஒன்று கொடுத்து விடுகின்றது. அங்கு வாடிக்கையாளர்கள் அமர நிறைய நாற்காலிகளும் போடப்பட்டுள்ளன. வரிசை எண்ணும், அதற்குரிய காரிய மேடையும் (கவுண்டர்) கணினி திரையில் காண்பிக்கப்பட்டவுடன், தொடர்புடைய வாடிக்கையாளர் எழுந்து சென்று வரிசை எண்ணுக்குரிய அலுவலரை சந்தித்து தனது காரியத்தை முடித்துக் கொள்கின்றார்.

அதே நேரத்தில் இந்த வசதி இல்லாத அலுவலகங்களும் நிறைய உண்டு. கூட்டம் அதிகமாக இருக்கும் போது, அமர நாற்காலி போடப்பட்டிருப்பின், சூழலுக்குத் தக்கவாறு மேற்சொன்னதை செயல் முறையில் சாத்தியப்படுத்தலாமே....! 

எங்கேயும், எப்போதும் முரண்பாடு உண்டு. 

தலைதலையாக நீண்ட வரிசையை ஒரு வித இறுமாப்புடன் பார்த்து வந்த சம்பந்தப்பட்ட  அலுவலருக்கு இந்த செயல்முறை 'பொசுக்' என்று இருந்ததாம். கடுகடுவென பார்த்தாராம். உடனே அவர் தனது இருக்கையை விட்டு வெளி வந்து,  "இப்படி எல்லாம் செருப்பை வரிசையாக விட்டுவிட்டு ஹாயாக போய் உட்காந்துடுடக் கூடாது... அப்புறம் செருப்பு தொலைஞ்சு போச்சு என்பீங்க...! அதுக்கெல்லாம் நாங்க பொறுப்பில்லே" என்று சத்தமிட்டாராம். உடனே ஒரு வாடிக்கையாளர், "உங்களுக்கு ஏன் சார் பொறாமை...? நாங்க பிராக்டிகலா தின்க் பண்ணி ஒரு முடிவுக்கு வந்திருக்கோம்... இதை பாராட்டறதை விட்டுவிட்டு குத்தம் குறை சொல்லிக்கிட்டு இருக்கீங்க.. போங்க சார் .... போய் ... வேலைய கன்டினியு பன்னுங்க" என்று பதில் சத்தமிட்டாராம்..."

இந்த செயல் முறை அணுகுமுறைக்கும் சட்டத்திற்கும், நீதிமன்றதிற்கும்  இடையே ஒரு முக்கியத் தொடர்பு உண்டு. கோட்பாடு பெரிதா... ? செயல் முறை பெரிதா..? என்ற கேள்வி எழுகின்றபோது, சம்பந்தப்பட்ட சூழலில் செயல் முறையே பெரிது, அதுவே பிரச்சனைக்கு வழி காட்டக்கூடியது  என்று வாதிடுதல். கிட்டத்தட்ட பட்டிமன்றம் மாதிரி. அதாவது இதை ஆங்கிலத்தில் Pragmatic Approach என்பர். சில சமயங்களில் இதை  Non-doctrinal Approach என்றும் சொல்வர். இதை வழக்குகளுடன் விளக்கினால் புரிந்து கொள்ள எளிமையாக இருக்கும். நேரம் கிடைக்கும் போது 



எல்லாம் ஒரு செயல்முறை அணுகுமுறைதான்....!!

இக்கட்டுரையை எழுத தூண்டிய நண்பர் நிஜாம் அவர்களுக்கு நன்றி..

Comments

நல்ல விளக்கம்... நன்றி...
Anonymous said…
மிக அருமையான பதிவு, எளிய செயல்முறைகள் தேவைக்கு ஏற்ப உருவாக்கப்படும், உருவாகும். பொதுவாக சேவை வழங்குநர் இதனை ஏற்படுத்தல் வேண்டும் நம் நாட்டில் இவற்றை எதிர்ப்பார்க்க இயலுமா, ஆக தத்தம் வசதிக்கேற்ப செயல்முறை சோதனைகளில் மக்களே இறங்கிவிடுவர், இதில் ஒழுங்கமைப்பு, புரிதல் இருப்பது அரிது, அவ்வண்ணம் இருக்கும் போது அனைவருக்கும் நலமே.
சரியா சொன்னீங்க.நியாயமான உங்கள் வாதம் சரியே .தொடருங்கள் நண்பரே
இதை வழக்குகளுடன் விளக்கினால் புரிந்து கொள்ள எளிமையாக இருக்கும்.

சுவாரஸ்யமான விளக்கங்களை அறிய ஆவல்...