அடி .... அறிவில்லாதவளே !

இது ஒரு மிக முக்கியமான தலைப்பு ! இதுக்குள்ளே பல விஷயம் இருக்கு சார்....!!

ஒரு கல்யாணத்தில் மாப்பிள்ளைக்கு விடுக்கப்படும் கடைசி எச்சரிக்கை என்ன தெரியுமா...? 

மந்திரம் ஓதிக் கொண்டிருக்கும் ஐயர், மாப்பிள்ளையை ஒரு தரம் பார்த்து விட்டு, "நல்ல நேரம் முடியப் போறது... பொண்ணே சீக்கிரம் அழைச்சிட்டு வாங்கோ...!" என்று குரல் கொடுப்பார்.


திருமணத்திற்கு முன் மாப்பிள்ளை அல்லது பெண் எப்படி வாழ்ந்திருந்தாலும், திருமணம் செய்து கொண்ட பின் ஒரு கட்டுக்குள் வருகின்றார்கள். அதாவது ஒரு கால் கட்டு போடப்படுகின்றது. இது அன்யோன்னியத்தின் காரணமாக  குழந்தை பெற்ற பிறகு  அரைக்கட்டு ஆகின்றது. தங்கள் அன்யோன்ய வாழ்வின் முக்கியத்துவம் குறைந்து பெற்ற குழந்தைகளுக்கென ஒரு வாழ்வை அமைத்துக் கொடுக்கும் நேரம் வருகின்ற போது, இது முழுக்கட்டாக மாறி முழுமை பெற்று முதுமை வரை தொடர்கின்றது.


இதில் வாய்க்கும் துணை எப்படிப்பட்டவர் என்பதைப் பொறுத்து இருவரின் வாழ்விலும் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகின்றன. போக்குவரத்துக்கு நல்ல சாலை இருக்கின்றது. இருந்தாலும் விபத்து நேர்வதில்லையா? காயம் படுவதில்லையா ? அல்லது மரணம் சம்பவிப்பதில்லையா ? அது போல மண வாழ்விலும் விபத்துகள் நேர்கின்றன. விட்டுக் கொடுக்காமை, புரிந்து கொள்ளாமை, சகிப்பு தன்மை இன்மை, ஆற்றாமை, அன்பின்மை, தன்னலம் பேணுதல், உதாசீனப்படுத்தல், துர்போதனைகள், துரோகங்கள், பேராசை,  கள்ளத் தொடர்பு போன்ற பல்வேறு மேடு பள்ளங்களால் கோபம், பிரிவு, மணமுறிவு, மன உளைச்சல், நீதிமன்ற பிரச்சனைகள், பெற்ற குழந்தைகளை பேண முடியாமை போன்ற விபத்துக்கள் நேர்கின்றன. எல்லா விபத்துக்களுக்கும் கவனக்குறைவு, அசிரத்தை அல்லது அசட்டை அல்லது அசட்டு துணிச்சல்தான் காரணம். விபத்துகளை தவிர்க்க சாலை விதிகளை மதிக்க வேண்டும். அதே போன்று மண வாழ்வில் விபத்துகளை தவிர்க்க, பரஸ்பர அன்பு, நம்பிக்கை, உணமையாக இருத்தல் ஆகிய முப்பெரும் விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்.

இந்தப் பின்னணியிலே இப்போ நாம நம்மோட தலைப்புக்கு வருவோம்.

வாய்ச்ச மனைவி வாய்க்கு ருசியா சமைச்சு போடுறா...! அன்பா இருக்கா... !! சொன்னா கேட்டு நடந்துக்குறா... !!! கணவனோட விருப்பத்துக்கு தடை ஏதும் போடுறதில்லே.... !!!! முக்கியமா மூக்குக்கு மேல கோபம் வர்றதில்லே... !!!! கோபத்தை சாந்தப்படுத்துறா...!!!! குடும்பத்தை பக்குவமா கொண்டு போறா... !!!! இப்படியும் ஒரு மனைவியா ? (இதுக்கு மேல என்னலே ஆச்சரிய குறி போட முடியாது சாமி). ஆனாலும் இதை படிக்கிறப்போவே எவ்வளவு சந்தோசமா, மனசுக்கு நிம்மதியா இருக்கு... கட்டிக்கிட்ட கணவனை  கொடுத்து வச்ச மவராசன்னுதானே  சொல்லோனும்.

இப்படிப்பட்ட மனைவிகள்தாம் 'அறிவில்லாதவர்கள்'. தப்பா நினைக்கப்படாது... வக்கீல் சொன்ன, செய்ஞ்ச  அதுலே ஏதாவது பொருள்விளக்கம் இருக்கும். அதாகப்பட்டது இவங்களை 'அறிவில் ஆதவனைப் போன்றவர்கள்' என்று சொல்வார்கள். இதிலே பெருசா லாஜிக் எல்லாம் ஒன்னும் இல்லே சார்... கணவனுக்கு நிம்மதி, சந்தோசம் கொடுத்து அவனோட சின்ன சின்ன ஆசைகளுக்கு சி.பி.சி. செக்சன் 151-இன் கீழே தன்னோட இன்ஹெரன்ட் பவர்ஸ்லே பெர்மிசன் கொடுத்தா, அவன் மனைவிக்கு வேண்டியதை தானா அதுவும் கேட்கமே பண்ணிக்கிட்டே வருவான்.

ஆனா இது ரொம்ப பேருக்கு புரியதில்லை. இதுக்கு ரெண்டு காரணம் சொல்லலாம். ஒன்னு சூழலை மேனேஜ் செய்யத் தெரியதிறதில்லே .... இன்னொன்னு, மற்றவர்களின் துர்போதனைகள் .... அதாவது "நீ ரொம்ப இடம் கொடுக்கிறே...", அல்லது  "அப்பப்போ உன் புருஷனை கொஞ்சம் டைட் பண்ணி வைச்சிகிட்டே இருக்கணும்.... இல்லாட்டி போன கையிலே அம்புடமாட்டான்", "காலாகாலத்திலே உனக்கு வேண்டியதை எப்படியாவது பண்ணிக்கோ.... புடிவாதம் பிடி.... அப்போதான் வழிக்கு வருவான்", அல்லது "கூட்டுக் குடித்தனமா வாழ்ந்தது போதும்.... தனிக்குடித்தனம் போய் இன்னும் ஜாலியா இருக்கலாம் இல்லே..." என்றெல்லாம் ஜாக்கி ஏத்தி விட்டுக்கொண்டே இருக்கிற சில ஜென்மங்கள் இருக்கு.... ஆனா அறிவில் ஆதவ மனைவி "போடி .... சரிதான்.... பெருசா சொல்ல வந்துட்டா.... என் புருஷனை எப்படி கைக்குள்ளே போட்டுக்கிறதுன்னு எனக்கு தெரியும்... நீ உன் வேலையைப் பாரு... அவரொன்னும் உன் புருஷன் மாதிரி இல்லே" என்று நிச்சயம் சொல்வார். மாறாக அறிவில்லாத மனைவி "அப்படியா சொல்றே...?" என்று கேட்டுவிட்டு மேலும் கேட்க ஆசைப்படுவாள்... துர்போதனை செய்யும் பெண்ணுக்கு இது அல்வா தின்றது போலாகிவிடும்... உடனே பல்வேறு எடுத்துக்காட்டு கதைகளை கட்டி விட ஆரம்பிப்பாள். அதாகப்பட்டது, பல சமயங்களில் பெண்ணுக்கு பெண்ணே எதிரியாக அமைந்து விடுவதுண்டு...  "நான் இப்படி இருக்கேன்.. நீ மட்டும் எப்படி சந்தோசமா இருக்குறது...?" அல்லது  "நான் இருக்கேன்னில்லே .... உனக்கு கட்டாயம் நல்ல வழி காட்டுகின்றேன்...!" என்ற உள் நமைச்சல்கள் அல்லது மறைமுக ஆதாயங்கள் அல்லது காட் ஃபாதர் போன்ற பெரிய மனுசத் தோரணைகள் இன்னொரு பெண்ணின் வாழ்வை நாசப்படுத்தி விடும். குடும்பத்தை சிதைத்து விடும்.


அறிவில் ஆதவ மனைவி தன்னோட குடும்ப விஷயத்தை, விவகாரத்தை  வெளியிலே பேசிக்க மாட்டா...  சரியோ... தவறோ... வீட்டுக்குளேயே விவாதித்து சரி செய்து கொள்வாளே தவிர... ஆறுதல் தேடுகின்றேன் பேர்வழி என்று வெளியில் பேசிக்கொண்டிருக்க மாட்டாள். குடும்பத்திலேயோ, தொழிலிலையோ வெற்றிகரமாக உள்ள ஆம்பிளையை கண்டு பொறாமைப்படும் கூட்டம் எப்போதும் உண்டு. குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது எளிது.  அதாவது "எப்போ கெட்டுப் போவான்...? எப்போ நாம ஏறி மிதிக்கலாம்...?" அல்லது "எப்போ கீழே விழுவான்... எப்போ கை கொட்டி சிரிக்கலாம்"  அல்லது  "எப்போ நாசமாப்போவான்... எப்போ நாம நல்ல இருக்கலாம்" என்றல்லாம் சிந்தித்துக் கொண்டே ஒரு கும்பல் நம்மை சுற்றி, நமக்கு அருகிலேயே, நம்முடனே ஒட்டிக் கொண்டு இருக்கும். அதற்கு அவல் போட்டு விட்டால், கண், காது, மூக்கு வைத்து பேசி, மேட்டரை கனக்கச்சிதமாக கொண்டு சென்று விடுவார்கள். அறிவில்லாத மனைவி தன்னை அறியாமலே அல்லது தெரிந்தே "விளம்பர கெட்டபெயர்" ஏற்படுததுவா...! பின் இருவரின் வாழ்விலும் குழப்பம்தான். அதுதானே போட்டிக்கார, பொறாமைக்கார கும்பலுக்கு வேண்டியது !

இப்படி நிறைய சொல்லலாம்... இந்தப் பதிவுக்கு இது போதும் என்று கருதுகின்றேன்.

நல்ல நேரம் முடிவதற்குள் அறிவில்லாத அதாவது அறிவில் ஆதவ மனைவி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். 'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்' என்று சொல்லி முடிக்கின்றேன்.

Comments

நல்லதொரு சாலை - வாழ்க்கை ஒப்பீடும், நடக்கும் உண்மைகளும் சரியாக சொல்லி உள்ளீர்கள்... முடிவில் "மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" சூப்பர்...
நல்லதொரு தொகுப்பு !

"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" என்ற வரியுடன் முடித்திருப்பது அருமை

தொடர வாழ்த்துகள்...

பைபிள் கூட ஒரு அருமையான வாக்கியம் சொல்கிறது "குணசாலியான ஸ்திரீயை கண்டுபிடிப்பவன் யார் அவள் முத்துக்களைப் பார்க்கிலும் விலையேறப்பட்டவள்" என்று...!
minnal nagaraj said…
நிதர்சனமான உண்மை நீங்கள் இந்தபதிவை இன்னும் தொடர வேண்டும் சமீபகாலங்களில் இவையனுத்துமே நம்மைச்சுற்றி நடைபெற்றுக்கொண்டுதான் உள்ளது இப்படிப்பட்ட அறிவில்லாதவள்களுக்கு நீங்கள் ஒரு பெரிய தனிப்பதிவே போடலாம் பிறந்த வீட்டு சொந்தங்களாலும் கூடாநட்புகளாலும் தன் வாழ்க்கையை தொலைக்கிறார்கள்
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்'
Anonymous said…
what, wife is god's gifta ?

Yarrukku...?



sivaparkavi
http://sivaparkavi.wordpress.com/