நீ ரொம்போ நல்லவொ..... !

ஆமா சார்.... இப்படி கூட ஒரு பதிவுக்கு தலைப்பு வைக்க முடியும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு !

தலைப்பை வாசித்தவுடன், இந்தப் பதிவு பெண் பாலினம் சம்பந்தப்பட்டது என்பதை நீங்கள் நிச்சயம் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

சார் .... நம்ம வாழ்க்கையிலே ரெண்டு இடம் ரொம்ப முக்கியமானது... ஒன்னு, அதிகாரம் செய்யற இடம்... இன்னொன்னு பணிஞ்சு போற இடம்... இந்த ரெண்டிலையும் நாம ரொம்ப கேர்புல்லா இருக்கோணும். இல்லாட்டி போன நிறைய சிக்கல் வந்து சேரும். சில சமயங்களில் இடியப்ப சிக்கலும் ஏற்பட்டு விடும்.

அதாகப்பட்டது, அதிகாரம் செய்ற இடத்திலே பணிஞ்சு போறதோ....  பணிஞ்சு போற இடத்திலே அதிகாரம் செய்றதோ கூடாது... அதே நேரத்திலே இதுக்கு ஒரு லிமிடேசனும் இருக்கு. அதிகாரம் செய்றோம் என்ற பேரிலே, ஆணவம் வந்து விடக்கூடாது. பணிஞ்சு போறோம் என்ற பேரிலே, பகுத்தறிவை இழந்து விடக் கூடாது.

அதிகாரம் செய்றது நமக்கு நல்லவே வரும். ஆனா பணிஞ்சு போறது ஒரு கலை. நிறைய பொறுமையும், பக்குவமும் வேண்டும். நமக்கு காரியம் நடக்கணும்... வெட்டி வீரியம் வேண்டியதில்லை. இதிலே நல்ல பயிற்சி பெற்ற பெரியவங்க, அதனாலேயே மேலும் பெரியவங்க ஆனாங்க... அதே சமயத்திலே பணிஞ்சு போறதுக்கும் விட்டுக் கொடுக்கறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு... பணிஞ்சு போய் விட்டுக் கொடுத்தவங்க, மொத்தமா அள்ளிக்கொண்டு போன சங்கதியும் உண்டு. அது போல் தேவையில்லாமே ரொம்ப 'போல்டா' நின்னவங்க 'கிளீன் போல்டு' ஆன கதையும் உண்டு. அதிகாரம் பண்றதுக்கு காரணம் தேவையில்லை... அதிகாரம் இருக்கு... அதனாலே பண்றோம் என்று அதிகாரமாக சொல்லலாம். இது கேட்கிறவங்களுக்கு கொஞ்சம் எரிச்சலா இருக்கும். ஏனென்றால் அது அதிகாரம்.  ஆனா பணிஞ்சு போறதுக்கு எத்தனையோ காரணம், சமாதானம் சொல்லலாம்.  கேட்பவங்களுக்கு நியாயமாபடும். ஏனென்றால் அது பணிவு.

சரி சார்... இந்த 'பில்டப்'  இப்போதைக்கு போதும்.. இனி கொஞ்சம்  'மேட்டரு'க்கு வருவோம்...

சார்... வீட்டிலே ஒரு குடும்பத்திலே பல்வேறு சண்டைகள் வருவது சகஜமான விஷயம். வீண் சண்டையும் உண்டு, விவகார சண்டையும் உண்டு. சமாளிச்சு வாழ்வது புருஷ லட்சணம் (!). பல நேரங்களில் பொஞ்சாதிகளின் பல வினோதமான கோரிக்கைகள், மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு சாடை மாடையாக குத்திக் காட்டுவது, தனது பிரச்சனையை அமுக்கி வைத்துக் கொண்டு புருஷனை குதர்க்கம் பேசுவது,  தானே உயர்ந்தவள் என்ற மனப்பான்மையில் புருஷனை, அவனது உறவுக்காரர்களை மட்டம் தட்டுவது இப்படி எத்தனையோ.  எல்லாத்துக்கும் புருஷன் 'கவுண்டர்' கொடுக்க முடியும். அப்படி கொடுத்துக் கிட்டே வந்தா தொடர்ந்து வாழ முடியாது. ஆம்பிளை அதிகாரம் பண்ண வேண்டாமா ... என்ற நினைப்பில் ஏதாவ்து சொல்லி வைத்து அது முடியாச் சண்டையில் சென்று கூட முடிந்து விடும். அதாவது நான் என்ன சொல்ல வர்றேன்னா கொஞ்சம் பணிஞ்சு போறது பெட்டர். அதுக்கு சில வழிகளை கையாள வேண்டும்.

1. 'பேசு... நல்ல பேசு... வாய் வலிக்கிற வரைக்கும் பேசு' என்று மௌனமாக இருப்பது நலம்.

2. 'ஆ.. உன்னைப் பத்தி எனக்கு தெரியாது...?' என்று நமட்டு சிரிப்புடன் காதுகளில் கொஞ்சம் பஞ்சை வைத்துக் கொள்வது.

3. 'ஏய்... நீ.. ரொம்ப ஓவரா போறே' என்று அப்போதைக்கப்போது வேண்டுமானால் அதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கலாம். இது தவிர வேறு வார்த்தைகள் சொல்வது அவ்வளவு சிலாக்கியம் அல்ல.

4. 'பேசி முடிசிட்டில்லே... சரி... விட்டுரு...' என்று பொஞ்சாதியின் தொடர்  பேச்சுக்கு செயற்கையாக ஒரு முற்றுப் புள்ளி வைக்க முனைவது.

5. 'நீ சொல்றது எனக்கு புரியாமே இல்லே.. நான் என்ன பண்ணட்டும் சொல்லு ? அதையாவது செய்ய முடியுமா என்று பார்க்கின்றேன்' என்று வந்த பிரச்சனையை பொஞ்சாதியின் பக்கமே திருப்பி விட்டு கூலாக குளிர் காய்வது. (ஏதோ பொஞ்சாதி சொல்றது பூராவும் உடனே செஞ்சிடப் போற மாதிரித்தான் !)

6. 'இல்லேம்மா... நீ என்னோட நிலைமையை கொஞ்சம் கூட யோசிச்சு பாக்காமே பேசிகிட்டே போன எப்படிம்மா?' என்று பொஞ்சாதியை பாசமாக தாயாக்கி விடுவது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க ... சமாதானம் செய்கின்றேன் என்று சில புருசர்கள் வஞ்சப் புகழ்ச்சியாக சில வார்த்தைகளை விட்டுவிட்டு பின் அவதிப் படுவதுண்டு. பின்வருவன தவிர்க்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் பேச்சு வளரும்.. சண்டை வலுக்கும்.

1. 'நான் உனக்கெதிரா ஒரு வார்த்தை பேச முடியுமா...? நீ எப்பேர்பட்ட குடும்பத்தை சேர்ந்த பொண்ணுன்னு எனக்கு தெரியாதா...?' ('உங்க யோக்கியதை எங்களுக்கு தெரியாதா.... ?' என்ற பொருளை தந்து விடும் அபாயம் இதில் உண்டு.)

2. 'என்னோட வருமானத்திலே நீ எவ்வளவு லட்சணமா குடும்பம் நடத்துறேன்னு எனக்கு தெரியாதா...?' ('காசோட அருமை இந்த ஊதாரிக்கு  எங்கே தெரியுது..? சம்பாதிச்சு போட்டா இஷ்டத்துக்கு செலவு பண்ணுறா.. இவங்க அப்பன் ஊட்டு காசுன்னு நினைச்சிட்டா..' என்ற மறைமுக சிந்தனைகளுக்கு இது வழிவகுத்து விடும் சார்...)

3. 'உன் அழகென்ன... அந்தஸ்து என்ன ...? என்னை விட உனக்கு எத்தனையோ பெட்டர் மாப்பிள்ளைங்க எல்லாம் வந்ததா உங்க அப்பா அப்போவே சொன்னாரு.... பாவம் நீ என்னைக் கட்டிக்கிட்டு விசனப்படுற மாதிரி எனக்கு தோணுது..' (இது ஓரளவு பாலிஷாக இருந்தாலும், பின்னாடி பூலிஷ் ஆகிவிடும் சிக்கல் உண்டு. 'அப்பா .... நீங்க கல்யாணத்தப்போ உங்க மாப்பிள்ளை கிட்டே என்னைப் பத்தி என்ன சொன்னீங்க ...? பீச்சிலே சுண்டல் கடை வைச்சிருந்த ஒருத்தர் வந்து என்ன பொண்ணு கேட்டாரே அதைப் பத்தி சொல்லீடீங்களா..?" என்று உடனே செல்பேசியில் தந்தையை அழைத்து பேசி அதிலிருந்து புதிய பொருள் விளக்கங்களை கண்டுபிடித்து விவாதிக்கலாம்.... அல்லது "நீங்க என்னை சந்தேகபடுறீங்க" என்று தொடர் சண்டைக்கு இழுக்கலாம். கொஞ்சம் ரிஸ்க் சார்....)

4. 'நாந்தான் கெட்டவன்... நீ ரொம்போ.... நல்லவொ'. இதுவும் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். ("நான் எந்தெந்த விதத்தில் நல்லவள்...?" என்ற கேள்வியுடன் பேச்சு தொடங்கி முற்றலாம். 'என்ன கிண்டலா...? நக்கலா .... இந்த எகத்தாளம் எல்லாம் என்கிட்டே வேணாம்..." என்றோ... 'அப்போ என்னை நீங்க கெட்டவன்னு சொல்றீங்க போல இருக்கே...' என்றெல்லாம் காட்சி நீண்டு விடும். பின் கட்சி செய்வது கடினம்.)

போதுமா சார்....?

Comments

நல்ல வழிகள் சார்...

தவிர்க்கப்பட வேண்டியதும் அருமை...

போதுமா என்று எல்லாம் கேட்கக் கூடாது... இது ஒரு தொடர்கதை... ஹிஹி...

நன்றி...
வாழ்வில்
ரிஸ்க் விஷயங்களை
ரஸ்க மாதிரி எளிமையாக
ரசனையாக அளித்த
அருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..
பயனுள்ள பயன்படுத்தினால்
நிச்சயமான பலன் தரக் கூடிய
அருமையான ஆலோசனைகள்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
வாழ்வில் அன்றாடம் நாம் உபயோகின்ற எளிய வார்த்தைகளைத் தொகுத்து சுவை பட தந்தது அருமை

தொடர வாழ்த்துக்கள்...
minnal nagaraj said…
சார் என்ன சொல்ல வர்ரிங்க பணிஞ்சு போறதா இல்லே எஸ்கேப் ஆகறதா இது சாதாரண பெண்களுக்கு தானே கிரிமினல்களுக்கு இல்லையே
@ minnal nagaraj said...
//சார் என்ன சொல்ல வர்ரிங்க பணிஞ்சு போறதா இல்லே எஸ்கேப் ஆகறதா இது சாதாரண பெண்களுக்கு தானே கிரிமினல்களுக்கு இல்லையே//

நீங்க என்ன சொல்ல வரீங்க மின்னலு,,,,, கொஞ்சம் விளக்குங்க பாக்கலாம்....!