நீங்கள் நேசித்தவர்களை நீங்களே நோகடிக்க முடியுமா...?
இது சின்ன விஷயம் இல்லே... சிந்திக்க வேண்டிய விசயம்....
சார் .... நமது உணர்வுகளை நாம் அறிவோம் .... ஆனால் அந்த உணர்வுகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தினால்தான் அவை அவர்களுக்கு தெரியும்.
நமக்கு பசிக்கிறது என்ற உணர்வை நமது வயிறு உடனே மூளைக்கு தகவல் சொல்லி விடும். பசியோடு இருக்கும் மற்றவர்களுக்கு புசிக்க உணவு கொடுக்க வேண்டும் என்ற நமது உணர்வு அவ்வாறு பசியோடு இருக்கின்றவர்களுக்கு உணவு கொடுக்கும் போதுதான் வெளிப்படும். பசித்தவன் மகிழ்ச்சியோடு உண்ணும் காட்சி கூட நமது பசியை மறக்கடிக்கச் செய்து விடும்.
இப்படி பல உணர்வுகளை நாம் தினமும் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கின்றோம். அதே நேரத்தில் சில உணர்வுகள் நமக்கே விளங்காத ஒன்றாக கூட இருக்கலாம். அன்பு, நேசம், நட்பு, பகை, பழி வாங்குதல், காதல், உறவு, மகிழ்ச்சி இப்படி பல உணர்வுகளில் பல செயல்கள் உட்பொதிந்து இருக்கின்றன. எல்லா உணர்வுகளுக்கும் அடிப்படை மனம். ஆனால் அது நமது உடலில் எங்கே இருக்கின்றது என்று காட்ட இயலாது. அதே நேரத்தில் உடல் உறுப்புகள் மன உணர்வுகளுக்கு இணங்க செயலாற்றுகின்றது.
அந்த வகையில் நாம் உள்ளார்ந்து நேசித்தவர்களுக்கு எதிராக நம்மால் கெடுதல் செய்ய இயலாது. இது ஒரு பொது உணர்வு அல்லது பொது விதி. ஒருக்கால் நாம் நேசித்தவர்கள் நமக்கு கெடுதல் செய்து விட்டால், "ஓஹோஹோ ... இரு உன்னை பார்த்துக் கொள்கின்றேன்..." என்று கிளம்பி விட்டால் அங்கு நாம் அவர்களை உள்ளார்ந்து நேசிக்கவில்லை என்றுதான் பொருள். நாம் நிஜமாகவே அவர்களை நேசித்துதான் வந்துள்ளோம் என்பதை அவர்கள் ஒருக்கால் சரிவர புரிந்து கொள்ளாமல் இருந்து இருக்கலாம் அல்லது நமது உணர்வை வெளிப்படுத்துவதில் நாம் சரியான வழிகளை தேர்ந்தெடுக்காமல் விட்டிருக்கலாம். இதற்கும் மேலாக புரிந்து கொள்வதில் குறைபாடு ஏற்பட்டிருக்கலாம். ஒருவேளை நம்மை இவர் எந்த அளவு நேசிக்கின்றார் என்று சோதித்தும் இருக்கலாம்.
எத்தனை இடர்பாடுகள் ஏற்பட்டாலும் உண்மையாக நேசித்தவர், தான் நேசித்தவரை இடர்ப்பாட்டில் விட்டு விட மாட்டார்.
எப்படி இருந்தாலும் நாம் உண்மையாக நேசித்தவர்களை, அவர்கள் கெடுதலே செய்தாலும் அல்லது செய்து கொண்டிருந்தாலும், அதை மனதில் கொண்டு அவர்களை காயப்படுத்தி விடக்கூடாது. தீங்கு செய்து விடக்கூடாது. எனினும் தற்காத்துக் கொள்வதில் தவறில்லை. அதாவது ஒரு காயத்திற்கு இன்னொரு காயம் மருந்தாகாது. செய்தது அல்லது செய்வது தவறு என்று சுட்டிக் காட்டலாம். சரியானது எது என்றும் சுட்டிக் காட்டலாம். இதற்கு சற்று அடுத்தபடியாக நமது நேசிப்பில் என்ன குறை என்று கேட்டு அதை சரி செய்து கொள்ளக் கூட முயற்சிக்கலாம்.
இயற்கையில் அமைந்த நல்ல சுபாவங்களை, உணர்வுகளை எதன் காரணம் கொண்டும் மாற்றிக் கொள்ள முயற்சி செய்தல் கூடாது. நல்லது நினைப்போம்... நல்லது தானாக நடக்கும்...!
இருப்பினும் மேற்கண்ட நிலைப்பாட்டில் எதுவும் சரி வரவில்லை என்றால் என்ன செய்வது....? இது ஒரு முக்கியமான கேள்வி ....! இதற்கு பதிலை பின்வரும் வாசகங்களை கண்டு பக்குவ நிலையும் தெளிவும் பெறலாம்.

இதுவும் நேசம் என்ற உணர்வில் ஓர் அங்கம்தான் !
வாழ்க... !
Comments
முடிவில் உள்ள நிலை வர அனுபவம் கைகொடுக்கும்...
பயனுள்ள அருமையான பதிவு
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்
//அருமை... உண்மை கருத்துக்கள் பல... முடிவில் உள்ள நிலை வர அனுபவம் கைகொடுக்கும்...//
வருகைக்கு நன்றி தா...
நீங்கள் மறுமொழிந்த அனுபவம் எல்லோருக்கும் ஏற்பட்டு விட்டால் யாதும், யாவரும் நலம்.
//உரத்த சிந்தனை
பயனுள்ள அருமையான பதிவு
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்//
வருகைக்கு நன்றி திரு ரமணி சார்.....
கருத்துரைக்கு further நன்றி சார்.... சிலரை திருத்த முயற்சிக்கின்றேன். முடிந்தால் அது வெற்றி... முடியாவிட்டால் அது தோல்வி என்று சொல்ல மாட்டேன்....!!
//நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும் அருமையான சிந்தனைப்பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.//
வருகைக்கு நன்றி அம்மா...
நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும்..... இதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. எண்ணம் போல் வாழ்க்கை.... கெடுவான் கேடு நினைப்பான்..... இதெல்லாம் வெற்றுக்கு சொன்னதல்ல..!!
அன்பு என்பதே விட்டுக் கொடுத்தல்தான்!
//நான் நேசித்தவர்களை என்னால் நோகடிக்கமுடியாது உண்மை ஆனால் அதனாலேயே அவர்களே என்னை மீண்டும் மீண்டும் வாழ்வையே வெறுக்கச் செய்கிறார்களே? நீங்கள் இன்னொரு பதிவில் சொன்னதுபோல் விதியை யாரும் மாற்றமுடியாது//
விதியின் விதி என்ன தெரியுமா...?
கெட்டது கெட வேண்டும் என்பதே....!
கேடு நினைப்பவன் யார்...? கெட்டுப் போக தயார் செய்து கொள்பவர்கள் ....
புரிந்ததா மின்னலு....