ஆரம்பத்திலிருந்து ஆரம்பிக்கலாமா?
'ஆரம்பம்' என்ற வார்த்தை எவ்வளவு அழகானது தெரியுமா?
நாம் இன்று வளர்ந்து ஆளாகி விட்டாலும், ஆரம்ப வாழ்வை நினைத்து விட்டால் நெஞ்சம் ஒன்று மகிழும்.. அல்லது அந்த காலத்தில் இவ்வளவு கஷ்டப்பட்டோமா என்று நெகிழும்.
மனசுக்கு கஷ்டம் என்றால், ஆரம்ப வாழ்க்கை நினைவுகளில் சிறிது நேரம் மூழ்குவது எப்பொழுதும் ஒரு ரிலாக்ஸ்.
'ஆதி அந்தம்' என்கிறார்கள். அந்தம் பற்றி பேச வேண்டுமென்றால், ஆதி பற்றி தொடாமல் இருக்க முடியாது.
'அந்த நாள் ஞாபகம் வந்தததே... நண்பனே.. நண்பனே" என்று பாடுகிறார் சிவாஜி கணேசன். "இந்த நாள் அன்று போல் இன்பமாக இல்லையே... நண்பனே.. நண்பனே..." என்று பாடுகிறார் மேஜர் சுந்தர்ராஜன். இந்த இருவரும் இந்த நாளை ஒத்துக் கொண்டாலும், அந்த நாளை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அந்த ஆரம்ப நாள் ஞாபகம் என்றும் இன்பம்.
"பள்ளியை விட்டதும்
பாதைகள் மாறினோம்;
கடமையும் வந்தது,
கவலையும் வந்தது."
என்று முடிந்து போனதாக நினைவில் இருக்கும் ஆரம்ப வாழ்வின் மதிப்பை உணர்த்தும் வண்ணம் பாடுகிறார் மேஜர். இதற்கு சிவாஜி,
"பாசம் என்றும், நேசம் என்றும்,
வீடு என்றும், மனைவி என்றும்,
நூறு சொந்தம் வந்த பின்பும்
தேடுகின்ற அமைதி எங்கே?"
என்று எது வந்தாலும் ஆரம்பத்தில் இருந்த அமைதி, நிம்மதி எங்கே என்று தேடுகிறார்.
நமது வாழ்வில் பசுமையாக உள்ளவை எவை ? ஆரம்ப கால நினைவுகள் மட்டுமே. ஆணாக இருந்தால் பெற்றோரின் நிழலில் வசிக்கும் வரை நினைவுகள் எல்லாம் பசுமை. எனினும் இந்தப் பசுமை, பெண்ணைப் பொறுத்தவரை சற்று வேறுபடுகிறது. ஒரு பெண் திருமணம் முடியும் வரை பெற்றோரின் பசுமையில் இருக்கிறாள். பிறகு கணவனின் பசுமையில் இருக்கிறாள். கணவனுக்குப் பிறகு பிள்ளைகளின் வாழ்வைக் கண்டு மீண்டும் பசுமை பெறுகிறாள். சில விதிவிலக்குகளை இங்கு விட்டு விடுவோம். ஆணுக்கு பெற்றோரின் பசுமை முடிந்த பிறகு சுமை கூடுகிறது. அச்சுமையில் பசுமை தருவது அவனது ஆரம்ப வாழ்வு மட்டுமே.
இது வாழ்வில் என்றால், வழக்குகளிலும் இதே நிலைதான். ஒரு பத்திரத்தை கொண்டு சென்று வங்கியில் கடன் கேட்டால், மூலப் பத்திரம் இருக்கிறதா என்று மேலாளர் கேட்பார். "ஒரு 30 வருசத்துக்கு ஈ.சி. போட்டுக் கொண்டாங்க" என்று கூறுவார். ஒரு பிரச்சனைக்கு விடை காண நீதிமன்றமும், சட்டமும் எதைப் பார்க்கிறது? அதன் ஆரம்ப வரலாற்றை தேடுகிறது. எனவே ஆரம்பத்தை ஆராயாமல், நடுவிலிருந்து எதையும் தீர்மானிக்க முடியாது. ஆரம்பம் எப்போதும் மதிப்புடையது.
எதையும் ஆரம்ப நினைவுகளைக் கொண்டு ஆரம்பித்துப் பாருங்கள் செல்லும் திசை சரியா என்பது நமக்கும் புரியும், மற்றவர்களுக்கும் தெளிவாகும் அல்லது மற்றவர்களை தெளிவுபடுத்த முடியும் !

Comments
நல்லதொரு பதிவு !
தொடர வாழ்த்துகள்...
//நெஞ்சம் நெகிழும் மலரும் நினைவுகளை அசைபோடுவது என்றும் இனிமையே !//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு நிஜாம்
//வெற்றியை அடைவோம் என்று மீண்டும் ஆரம்பித்தோம் என்றால்... வெற்றி எப்போதும் நம் செல்லப்பிள்ளை...//
சபாஷ் சரியான கருத்து.....
நன்றி திரு. திண்டுக்கல் தனபாலன் தா ...
அட ! தித்திக்கிறதே ! உண்மை !
//நானும் வலைப்பூ ஆரம்பம் பற்றி எண்ணிப் பார்க்கிறேன்.
அட ! தித்திக்கிறதே ! உண்மை !//
எங்கோ சுற்றி வளைத்து ஆரம்பத்திற்கு போகாமல், இருப்பதில் உள்ள ஆரம்பத்தை நினைத்து மகிழ்ந்த உங்களுக்கு பாராட்டுகள். வருகைக்கும், அனுபவ பகிர்வுக்கும் நன்றி சகோதரி...
ஆதார சுருதியாகத்திகழும் அமர்க்களமான
ஆரம்பம என்னும்
அரிய
ஆரம்ப நினைவுகளைக் கொண்டு ஆரம்பித்துவைத்த
அருமையான பகிர்வுகளுக்கு
இனிய பாராட்டுக்கள்...
திரும்பி ஆரம்பத்தைப் பார்ப்பது ..ஒரு சுகம் ! இளைப்பாற நினைவுகள் தருமே நல்லதொரு நிழல் !
வாழ்த்துக்களுடன் !
//ஆதார சுருதியாகத்திகழும் அமர்க்களமான ஆரம்பம என்னும் அரிய
ஆரம்ப நினைவுகளைக் கொண்டு ஆரம்பித்துவைத்த அருமையான பகிர்வுகளுக்கு இனிய பாராட்டுக்கள்... //
தங்கள் வருகைக்கும் ஆழ்ந்த கருத்துக்கும் நன்றி அம்மா...
//திரும்பி ஆரம்பத்தைப் பார்ப்பது ..ஒரு சுகம் ! இளைப்பாற நினைவுகள் தருமே நல்லதொரு நிழல் //
தங்கள் வருகைக்கும் வாழ்வை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல உதவும் அருமையான கருத்தூட்டதிற்கும் நன்றி ரம்மி சார்...
தங்கள் எனது சட்டப்பார்வை (http://sattaparvai.blogspot.in/) மற்றும் மதனப்பெண் (http://jayarajanpr.blogspot.in/)
வலைப்பதிவுகளை இனம்கண்டு பெருமைப்படுத்தி வலைச்சரத்தில் அடையாளப்படுத்தியமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
தங்கள் கருத்துரைக்கும் நன்றி சொல்கின்றேன்.
வாழ்க...! தங்கள் பணி சிறக்க....!!