இழப்பீடு வழக்கில் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தீர்ப்பிற்கு முன் பற்றுகை (ஜப்தி) செய்ய முடியுமா?
இயக்கூர்திகள் சட்டம் (59/1988), பிரிவு 169 - உரிமையியல் நடைமுறை சட்டம், கட்டளை 38, விதி 5; கட்டளை 41, விதி 23-A. -
வழக்கின் சங்கதிகள்படி, விபத்து ஏற்படுத்திய 'டிராக்டர் மற்றும் ட்ரைலர்' வாகன உரிமையாளர் மீது இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்யப்படுகிறது. அத்துடன் அந்த வாகனத்தை 'தீர்ப்பிற்கு முன் பற்றுகை' (Attachment before judgment) செய்யவும் மனு தாக்கல் செய்யப்படுகிறது. இவ்வாறு மனு தாக்கல் செய்ய முடியுமா எனும் கேள்வி ஆந்திரப்பிரதேச உயர் நீதிமன்றத்தின் முன் எழுந்த போது, உரிமையியல் நடைமுறை சட்டத்தின் கட்டளை 38, விதி 5-இல் கண்ட வகைமுறைகள் (தீர்ப்பிற்கு முன் பற்றுகை செய்வது குறித்த நடைமுறைகளைக் கூறுவது), இயக்கூர்திகள் சட்டத்தின் கீழான நடவடிக்கைகளுக்கும் பொருந்தும் என்று நிலை நிறுத்தப்பட்டது.
எனவே, விபத்து வழக்குகளில் இழப்பீட்டிற்கான முடிவான தீர்வம் பகரப்படுவதற்கு முன்னதாக அத்தீர்வத் தொகையை பின்னிட்டு வசூலிப்பதற்கு உதவிகரமாக இருப்பதற்காக சம்பந்தப்பட்ட வாகனத்தை பற்றுகை (ஜப்தி) செய்யலாம். தீர்வத்திற்கு பிறகு அவ்வாகனத்தை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
(Duvvuru Siva Kumar Reddy and etc. v. Malli Srinivasulu and etc.)

Comments
வாகன விபத்து தொடர்புடைய பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு பல காலத்திற்குப் பின் தான் தீர்ப்பு வருகிறது. அதற்குப் பின் வழங்கப்படும் இழப்பீடு பெரும்பாலும் 'விழலுக்கு இறைத்த நீர்' போலத் தான்.
இதைத் தடுக்க எதுவும் வழி உண்டா?