"தட்கல்" பயணச் சீட்டை இரத்து செய்தால், பயணக் கட்டணத்தை திரும்பத் தர வேண்டும் !


பேருந்து கட்டண உயர்வின் எதிரொலியாக அனேகம் பேர் தொடர்வண்டியில் பிரயாணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்போதைய பேருந்து கட்டணத்தைக்  காட்டிலும் தொடர்வண்டி கட்டணம் மிகக் குறைவாக தெரிகிறது. எனவே கூட்டம் அலைமோதுகிறது. முன்பதிவு செய்தாலொழிய பயணச் சீட்டோ, அமர இடமோ கிடைப்பதில்லை.

'தட்கல்' முறையில் பயணச் சீட்டு வேண்டுமெனில் இரண்டு நாட்களுக்கு  முன்பே முன்பதிவு செய்ய வேண்டும். இது முன்பு இருந்த விதி. தற்போது கடந்த நவம்பர் 11-ஆம் தேதி முதல், பயணம் செய்வதற்கு முதல் நாளில்தான் தட்கல் பயணச் சீட்டு வழங்கப்படும் என்று தொடர்வண்டி நிருவாகம் அறிவித்துள்ளது. அதாவது தொடர்வண்டி கிளம்பும் தேதிக்கு ஒரு நாளுக்கு முன்பாக மட்டுமே தட்கல் சீட்டு வழங்கப்படும். சுருங்கச் சொன்னால் முன்பதிவானது, 48  மணி நேரங்களுக்கு முன்பு என்பது தற்போது 24  மணி நேரங்களுக்கு முன்பு என்று ஆக்கப் பட்டுள்ளது. 


ஒரு தொடர்வண்டி அதன் தொடக்க நிலையத்தில் இருந்து அடுத்தமாதம் இரண்டாம் தேதி புறப்படுகிறது என்றால், அதற்கான தட்கல் பயணச் சீட்டு வழங்கும் நேரம் அதற்கு முந்தைய தினமான 1-ஆம் தேதி காலை 8  மணிக்கு தொடங்குகிறது. முந்தைய நடைமுறைப்படி இரண்டு நாட்களுக்கு முன்பே தட்கல் சீட்டு பெறலாம் என்ற நிலை இருந்த போது, ஒரேடியாக அனைவரும் கணினியில் குவிந்து பதிவு செய்தனர். (அச்சமயம் தொடர்வண்டி நிருவாக இணையத்தளம் கூட சட்டென திறக்காமல் சண்டித்தனம் செய்யும்.) இதனால் விரைவில் எல்லா  சீட்டுகளும்  தீர்ந்து,  இடத்திற்கான மறு வாய்ப்புக்கு வழி இல்லாமல் போனது. தற்போது இந்த மறு வாய்ப்பு, தினம் தினம் பயணிகளுக்கு கிட்டியுள்ளது. இது பயணிகளுக்கு கிடைத்துள்ள உள்ளபடியான வசதி என்று எனக்குத் தோன்றுகிறது. (இதில் மாற்றுக் கருத்து ஏதும் இருந்தால் கருத்துரை இடலாம்.)

அதே நேரம் இங்கு மற்றொரு சங்கதியையும் அலச வேண்டியுள்ளது. அதாவது தட்கல் முறையில் பயணச் சீட்டு பெற்று, அதை இரத்து செய்தால் பயணக் கட்டணம் திரும்பத் தரப்படமாட்டது. இது தொடர்வண்டி நிருவாகத்தின் வணிகச் சுற்றறிக்கை கூறும் விதி. இதில் எனக்கு ஆரம்பத்தில் இருந்தே உடன்பாடு இல்லை. 

சாதாரண முன்பதிவு சீட்டை இரத்து செய்தால் எப்படி கட்டணம் திரும்பத் தரப்படுகிறதோ, அவ்வாறே தட்கல் சீட்டுக்கும் தரப்படவேண்டும். காரணம் தட்கல் முன்பதிவு முறையில் முன்பதிவு செய்தவர் தனது பயணத்தை தள்ளி வைக்கிறார் அல்லது அவரால் அன்றைய தினம் பயணம் செய்ய இயலவில்லை என்றால், அவர் தனது தட்கல் பயணச் சீட்டை இரத்து செய்ய முன்வருவதில்லை. 'இரத்து செய்தால்தான் என்ன கிடைக்கப் போகிறது?' என்ற எண்ணத்தில் அப்படியே பேசாமல் இருந்து விடுவர். பெரும்பாலனோர் அதற்காக மெனக்கெடுவதில்லை.  அப்போது என்ன ஆகிறது? அவருக்கடுத்து காத்திருப்போருக்கு சீட்டு கிடைப்பதில்லை. இதனால் யாருக்கு என்ன பலன்? 
'தட்கல்' சீட்டை இரத்து செய்வோருக்கு, பயணக் கட்டணத்தை தொடர்வண்டி நிருவாகம் தர மறுப்பது நியாயமா?

எனவே சாதாரண பயண சீட்டை போல், தட்கல் முறை பயணச் சீட்டை இரத்து செய்தாலும், பயணக் கட்டணத்தை திரும்பத் தர தொடர்வண்டி நிருவாகம் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும்.

என்ன சரிதானே?

Comments

ananthako said…
udanadi payanaththirke hindiyil tatkaal enbathu. chattam pottuththaduththaalum thittam pottu oolal seyyum koottam ullathu.athaithadukkave kattanam thiruppithara iyalathu enra vidhi.aanaal unmaiyana kaaranaththaal raththu seythaal kattanam thiruppaththaravendum.
somebody is cheating railway but all are sufferers. this is indian rule when we are follwing from past foreign rulers like english medium.
Thanks for your comments ...
பயனுள்ள தகவல்கள்.
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.
Unknown said…
நல்ல விழிப்புணர்வு பதிவு! ஒருநாள் முன்னர் தத்கல் என்பது முன்னர் இருந்த முறைதான்!புதிதல்ல! லாலு இதை 2நாள்,5நள் என்று மாற்றி விளையாடினார். மம்தா 2நாளாகக் குறைத்தார்!இப்போது ஒருநாள்! ஒரு ரவுண்ட் வந்தாச்சு!

இந்த ஒருநாள் முறை வியாபாரிகளுக்கும்,மிக அவசர நிமித்தம் கட்டாயப் பயணம் மேற்கொள்வோருக்கும் மிக ஏற்புடையது! வரப்பிரசாதம்! பலமுறை இதன் பயனை அனுபவித்துள்ளேன்! லூதியானாவில் இருந்து திரும்பும் போது,தத்கல் முறையில் ரயிலில் டிக்கெட் கிடைத்ததால், விமான டிக்கெட்டை கேன்ஸல் செய்துவிட்டேன்!

ரத்து ஆகும் பயணத்திற்கு, 50 சத கட்டணத்தை திருப்பி வழங்கலாம் என்பது எனது கருத்து!
@ நண்டு @நொரண்டு -ஈரோடு said...

//பயனுள்ள தகவல்கள். பகிர்வுக்கு நன்றி . வாழ்த்துக்கள்.//

மறுமொழிக்கு மிக்க நன்றி..
@ ரமேஷ் வெங்கடபதி
//நல்ல விழிப்புணர்வு பதிவு! ஒருநாள் முன்னர் தத்கல் என்பது முன்னர் இருந்த முறைதான்!புதிதல்ல! லாலு இதை 2நாள்,5நள் என்று மாற்றி விளையாடினார். மம்தா 2நாளாகக் குறைத்தார்!இப்போது ஒருநாள்! ஒரு ரவுண்ட் வந்தாச்சு!//

கூடுதல் செய்திகளுக்கு நன்றி சார்..
//இந்த ஒருநாள் முறை வியாபாரிகளுக்கும்,மிக அவசர நிமித்தம் கட்டாயப் பயணம் மேற்கொள்வோருக்கும் மிக ஏற்புடையது! வரப்பிரசாதம்! பலமுறை இதன் பயனை அனுபவித்துள்ளேன்! லூதியானாவில் இருந்து திரும்பும் போது,தத்கல் முறையில் ரயிலில் டிக்கெட் கிடைத்ததால், விமான டிக்கெட்டை கேன்ஸல் செய்துவிட்டேன்!//

அனுபவ மறுமொழிக்கு நன்றி..
//ரத்து ஆகும் பயணத்திற்கு, 50 சத கட்டணத்தை திருப்பி வழங்கலாம் என்பது எனது கருத்து!//

நிச்சயம் செய்ய வேண்டும் சார்.. தட்கல் முன்பதிவுக்கு கூடுதலாக ரூ. 75 வசூல் செய்கிறார்கள். அத்துடன் பதிவை இரத்து செய்தால் கட்டணம் திருப்பித் தரமாட்டார்கள் என்பது ஏற்புடைதல்ல. எனவே நீங்கள் சொன்னது போல், குறைந்தபட்சம் 50 சதவீத கட்டணம் + அதனுடன் கூடுதல் கட்டணம் ஆகியவற்றை திருப்பித் தரவேண்டும்.
கருத்துரைக்கு நன்றி திரு. ரமேஷ் வெங்கடபதி சார் ...
Jayadev Das said…
\\'இரத்து செய்தால்தான் என்ன கிடைக்கப் போகிறது?' என்ற எண்ணத்தில் அப்படியே பேசாமல் இருந்து விடுவர். பெரும்பாலனோர் அதற்காக மெனக்கெடுவதில்லை. அப்போது என்ன ஆகிறது? அவருக்கடுத்து காத்திருப்போருக்கு சீட்டு கிடைப்பதில்லை. இதனால் யாருக்கு என்ன பலன்? \\ அட ஆமாம், இதுவும் நல்ல யோசனையாகப் படுகிறதே!! ரத்து செய்வதற்கு குறுப்பிட்ட தொகையை பிடித்துக் கொண்டால் அதுவும் லாபம் தானே? அதே சமயம் இன்னொருவருக்கு பயணம் செய்ய வாய்ப்பும் கிடைக்கிறதே!! ஆனால், கடைசி 24 முன்னால் கூட தங்களது பயணத்தை சரியாக திட்டமிட முடியாமல் போகும் வாய்ப்பு மிக மிக குறைவு, மேலும் வண்டி புறப்படுவதற்கு 6 மணி நேரத்துக்கு முன்னால் அட்டவணை தயாரிக்கப் படும், அதுவும் அதிகாலையில் புறப்படும் வண்டி என்றால் முதல் நாளே அட்டவணை தயாரிக்கப் பட்டுவிடும். பயணச் சீட்டு முன்பதிவு செய்யும் போதே தீர்க்கமாக முடிவு செய்து கொள்வதுதான் சிறந்தது.
kaialavuman said…
தத்கால் என்பதே அவசரத் தேவைக்கு தான். கடைசி நேரத்தில், அவசரமாக/அவசியமாகப் பயணம் செய்பவருக்காகத் தான். எனவே ஒரு நாளாகக் குறைத்தது சரியே. பணம் திரும்ப வழங்காததற்குக் காரணம் தேவையில்லாமல் சீட்டு பதிவு செய்வதைத் தடுக்கவே.

//(அச்சமயம் தொடர்வண்டி நிருவாக இணையத்தளம் கூட சட்டென திறக்காமல் சண்டித்தனம் செய்யும்.)

இதை அரசு நிச்சயமாகச் சரி செய்ய வேண்டும்
Jayadev Das said…
\\இதனால் விரைவில் எல்லா சீட்டுகளும் தீர்ந்து, இடத்திற்கான மறு வாய்ப்புக்கு வழி இல்லாமல் போனது. தற்போது இந்த மறு வாய்ப்பு, தினம் தினம் பயணிகளுக்கு கிட்டியுள்ளது. இது பயணிகளுக்கு கிடைத்துள்ள உள்ளபடியான வசதி என்று எனக்குத் தோன்றுகிறது.\\ முன்னர் இரண்டு நாள் அவகாசம் இருந்தது, தற்போது ஒரு நாள் தான் இருக்கிறது, இது எப்படி சவுகரியம் என்று சொல்கிறீர்கள்? நாளைக்கு செல்ல வேண்டுமென்றால் இன்றைக்கு காலை முயன்றால் தான் உண்டு, கணினி, irctc இணைய தளம் கொஞ்சம் முரண்டு பிடித்தாலும் தீர்ந்தது, அம்போ தான். இரண்டு நாள் அவகாசம் இருந்தால் மாற்று யோசனை ஏதாவது செய்யலாம், தற்போது அதுவும் இல்லை, இது சவுகரியமாகத் தோன்றவில்லை.
@ Jayadev Das said...
\\அட ஆமாம், இதுவும் நல்ல யோசனையாகப் படுகிறதே!!//

கருத்துரைக்கு நன்றி.
@ வேங்கட ஸ்ரீனிவாசன்

//(அச்சமயம் தொடர்வண்டி நிருவாக இணையத்தளம் கூட சட்டென திறக்காமல் சண்டித்தனம் செய்யும்.)
இதை அரசு நிச்சயமாகச் சரி செய்ய வேண்டும்//

அவதிப் பட்டவங்களுக்கு இந்த சிரமம் பற்றி மிகவும் நன்றாக தெரியும். இதற்கு ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கருத்துரைக்கு நன்றி..
@ Jayadev Das
\\இரண்டு நாள் அவகாசம் இருந்தால் மாற்று யோசனை ஏதாவது செய்யலாம், தற்போது அதுவும் இல்லை, இது சவுகரியமாகத் தோன்றவில்லை.//

முன்பு இருந்த இரண்டு நாள் நடைமுறையே இருக்கலாம் என்று சொல்கிறீர்கள்.. கருத்துரைக்கு நன்றி..
@ Jayadev Das
\\முன்னர் இரண்டு நாள் அவகாசம் இருந்தது, தற்போது ஒரு நாள் தான் இருக்கிறது, இது எப்படி சவுகரியம் என்று சொல்கிறீர்கள்? நாளைக்கு செல்ல வேண்டுமென்றால் இன்றைக்கு காலை முயன்றால் தான் உண்டு, கணினி, irctc இணைய தளம் கொஞ்சம் முரண்டு பிடித்தாலும் தீர்ந்தது, அம்போ தான்.//

ஒரு விதத்தில் சௌகரியம் என்று நான் கருதுகின்றேன். காரணம், புதிய நடைமுறைப்படி காலை 8 மணி முதல் 10 மணி பயணச் சீட்டு பதிவு முகவர்கள் (ஏஜென்ட்) தட்கல் சீட்டு பதிவு செய்ய முடியாது. இவர்கள் கூட்டம் குறைந்தால், கணினியில் தொடர்வண்டி வலைப்பக்கம் எப்படியும் திறந்து விடும் அல்லது சீட்டு கிடைத்து விடும் என்று நம்ப நிறைய வாய்ப்பு உள்ளது.
நியாயமான கோரிக்கை பயனுள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள்
@ Ramani
//நியாயமான கோரிக்கை பயனுள்ள பதிவு தொடர வாழ்த்துக்கள்//

மறுமொழிக்கு மிக்க நன்றி..
aalunga said…
தட்கல் பயண முன்பதிவை ஒரு நாளாக குறைத்ததால், நல்ல முன்னேற்றம் இருக்கிறது. இதை அடிக்கடி தொடர்வண்டியில் பயணம் செய்பவன் என்கிற முறையில் உணர்ந்து சொல்கிறேன்.

நிச்சயமாக பயணம் செய்வோம் என்ற உறுதி
உடையவர்கள் தான் முன்பதிவு செய்கிறனர்.

தவறுதலாக முன்பதிவு செய்வதும் தவிர்க்கப்படும். (இரவு 12/1 மணிக்கு வரும் ரயில்களை தேதி மாற்றி பலர் பதிவு செய்வது உண்டு)

முகவர்களின் முன்பதிவையும் சற்று நேரம் நிறுத்தி விட்டதால், இப்போது உண்மையாகவே பலருக்கு நியாயமான விலையில் சீட்டு கிடைக்கிறது.

முன்பு,ரயில்வே முன்பதிவு மையத்தில் முன்பதிவு செய்தால், ஆதாரத்தைக் காட்ட வேண்டியதில்லை... இதனை சிலர் தவறாக பயன்படுத்தினர்.
மையம் சென்று தட்கல் சீட்டு எடுத்து அதை நல்ல விலைக்கு விற்றவர்களும் உண்டு. (இதை சில இடங்களில் கண்கூடாக பார்க்கலாம்!!) இது போன்ற தவறான பயன்பாடுகளைத் தடுக்க "முன்பதிவு மையத்திலும், ரயிலிலும் ஆவணங்களைக் காட்டுதல்" என்கிற புதிய நெறி உதவும்.இதிலும் தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது என்றாலும், சதவீதம் மிக குறைவு!!

தட்கல் சீட்டுகளை தவறாக பயன்படுத்துவதைத்
தடுக்கவே, ரத்து செய்தால் கட்டணம் இல்லை
என்கிற நிலை வந்தது.இந்த நிலை உறுதிசெய்யப்பட்ட சீட்டுகளுக்கு (Confirmed Tickets) மட்டுமே!! ரத்தினால் உறுதி(RAC), காத்திருப்பு (W/L) முறைக்கு கிடையாது.

மேலும், தற்போதைய நடைமுறையின் படி,முன்பதிவு செய்த 12-24 மணி நேரத்திற்குள்ளேயே அட்டவணை தயாராகிறது. எனவே,சீட்டை ரத்து செய்ய
ஆகும் காலமும் குறைவு!!

அதே போல, 90% பயணம் செய்பவர்கள் தான் முன்பதிவு செய்கிறார்கள் என்பதால் சீட்டை ரத்து செய்யும் வாய்ப்பு குறைவு..

எனினும், எதிர்பாராத காரணங்களால் பயணத்தை நிறுத்த வேண்டியவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அட்டவணை தயாரிப்பு நடக்கும் வரை சாதாரண பதிவிற்கு இருக்கும் பயண ரத்து விதிகளை இங்கும் அமல்படுத்தலாம். தேவையெனில், ரத்து செய்வதற்கான வழிமுறைகளைக் கடுமையாக்கிக் கொள்ளலாம்.