11-11-11 - இந்தத் தேதி பெரும் வளர்ச்சியை குறிக்கிறது



இன்று 11-11-11. 

கடந்து போன ஆண்டுகளை நினைத்துப் பார்க்கின்றேன்.

எனக்கு முதலில் பரிச்சயம் ஆனது 7-7-77. இதுதான் நான் எனது வாழ்வில் முதலில் சந்தித்த இப்படிப்பட்ட தேதி.

6-6-66  தேதியின் போது நான் பிறந்திருக்கவில்லை.  7-7-77  தேதியின் போது பத்தாண்டுகளுக்கு ஒரு முறை வரும் அப்படிப்பட்ட தேதியின் சிறப்பு பற்றி ஏதும் எனக்கு தெரியாது. அது குறித்து அப்போது யாரும் சிறப்பாகவும் பேசிக் கொள்ளவில்லை. 7-7-77  தேதியின் போது நான் 4-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன் என்று நினைக்கின்றேன். அப்போது எனது தந்தை இருந்தார்.

இதை அடுத்து 8-8-88. இந்த தேதியின் சிறப்பு பற்றி அப்போது எங்கள் ஊருக்கு வந்திருந்த எனது சின்னம்மாவின் கணவர் சொன்னார். அவர் இப்படிப்பட்ட தேதிகளில் ஏதாவது ஒரு  புதிய பணியை தொடங்குவாராம். அந்த சமயத்தில் எனது தந்தை இல்லை. இறைவனடி சேர்ந்துவிட்டார். நான் கல்லூரி படிப்பு படித்துக் கொண்டிருந்தேன்.

இதற்கு பிறகு 9-9-99. நான் படிப்பை முடித்து சட்டத் தொழிலுக்கு வந்து விட்டேன். மேலும் அந்த காலகட்டத்தில் எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள்.

எனது தந்தையார் மறைந்த நாள் 10-10௦-85. எனவே  10-10௦-10 அன்று ௦கோவிலுக்கு சென்று வந்தேன்.

இப்போது 11-11-11  வந்துள்ளது. இது பத்தாண்டுகளுக்கு ஒரு முறை என்றில்லாமல் அடுத்த ஆண்டே வந்துள்ளது. இன்று காலை ஒரு நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னேன். அவர் 11-11- அன்று பிறந்தவர். காலை நேர பணிகளுக்குப் பிறகு இந்த நிமிடம் இந்தப் பதிவை பதிந்து கொண்டிருக்கிறேன்.


புதுக் கணக்கின் போது பேரேட்டில் ரூ.11/- என்று வரவு வைக்கின்றோம். தட்டில் காணிக்கை போடும் போது ரூ.11/- போடுகிறோம். மொய் வைக்க ரூ.101, 501, 1001 என்று கொடுக்கிறோம். ஏன் இவ்வாறு செய்கிறோம்? எழுதும் தொகை அல்லது கொடுக்கும் தொகை சுழியத்தில் முடியாமல் தொடர்ந்து கணக்கு வளரட்டும். அதாவது பெறுவதும் வளரட்டும்! அதுபோல் கொடுக்கவும் நம் கையில் தொகை வளரட்டும்!! அருளும் உறவும் வளரட்டும் !!! ஒன்னும் ஒன்னும் ரெண்டுதானே? எனவே இந்தப் பதினொன்று என்ற எண் வளர்ச்சியை குறிக்கிறது.

எனவே இந்தப் 11-11-11 என்ற தேதியிலிருந்து இந்தப் பதிவை எழுதிய நானும், அதே நேரத்தில் வாசித்துக் கொண்டிருக்கும் நீங்களும், ஏன் எல்லோரும் வளர்வோம் ! அடுத்த ஆண்டு 12-12-12  வருகிறது. இதுவும் வளர்ச்சி. ஒன்றுக்கு அடுத்து வருவது ரெண்டுதானே?

ஆனால் அதற்கு பிறகு 13-13-13 என்பது சாத்தியமில்லை. பிறகு 01-01-3001-இல்தான். இருக்கும் காலத்தில் சிறப்பாக வாழ்வோம் !

இப்படிப்பட்ட தேதிகளில் ஏதேனும் ஒன்றில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை ஒரு பின்னூட்டமாக பதிவு செய்யுங்களேன் !

Comments

Unknown said…
அருமையான பதிவு தோழா
@ mohandivya
//அருமையான பதிவு தோழா//

nanri thola..
goma said…
எனக்குத் தெரிந்து என் தோழி அனுப்பிய கடிதம்...எழுதிய நேரம் ,தேதி:


01.23.45.மணி


6/7/89 தேதி
இது எப்படி இருக்கு?
இது இன்னும் சூப்பர் ...!
Unknown said…
உற்சாகமூட்டும் பதிவு! தொடர வாழ்த்துக்கள்!
Anonymous said…
very interesting