அடேங்கப்பா எவ்வளவு பெரிய்ய 1 GB ?

ஒரு கணினியில் விவரங்களை சேகரித்திட வன்வட்டு (Hard  Disk) வேண்டும். அதில் எந்த அளவு சேகரிக்க முடியும் என்பதை பொறுத்து அந்த கணினியின் விலை மதிப்பு மாறும்; அதிகரிக்கும்.

கணினி பரவலாக பயன்பாட்டிற்கு வர ஆரம்பித்த காலத்தில் இந்த இட அளவை MB  (Megabyte) என்றார்கள். அதே நேரத்தில் கூடவே மெல்லமெல்ல  ஜிகா பைட்ஸ் (ஜிபி) (GB) அறிமுகம் ஆகிக் கொண்டிருந்தது. 1 GB இட அளவு மெல்ல 4 GB ஆனது. பின் 10 GB ஆனது. பிறகு 160 GB ஆனது. இப்படியே கூடி தற்போது TB (Terabyte) ஆகி விட்டது.

அப்போது பெரிதாக இருந்த கணினியின் அளவு, வடிவமைப்பு நாளாவட்டத்தில் சிறிதாக சுருங்கி விட்டது. அந்த வகையில் இன்றைக்கு இருபது ஆண்டுகளுக்கு முன் இருந்த  1 GB மிகப் பெரியது. ஆனால் அது இன்றைக்கு எந்த அளவு உள்ளது ?

மிகமிகச் சிறியது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

பின்வரும் படத்தைப் பாருங்களேன்.. இந்த சங்கதி விளங்கும்..


உலகம் எவ்வளவு சுருங்கி விட்டது..?

Comments

ஆமாங்க சார் உலகம் சுருங்கிவிட்டது மாதிரியே மனிதர்களின் மனமும் சுரிங்கிவிட்டது.
உண்மைதாங்க ...
ஒருத்தனடோ வழி இன்னொருத்தனுக்கு தெரியலை..!
சுருங்கின மனசோட சுத்திகிட்டு இருக்கறாங்க..
என்ன சார் பண்றது..?

எப்படி இருந்தாலும் பெரிய மனசு பண்ணி பின்னூட்டம் போட்ட உங்களுக்கு என்னோட முதல் ஓட்டு..!
Unknown said…
உலகம் சுருங்கிவிட்டது! மனிதர்கள் நெருங்கிவிட்டார்கள்! மனிதம் தொலைந்துவிட்டது!
aalunga said…
அடேங்கப்பா....
எவ்வளவு பெருசு?

உலகம் சுருங்கி விட்டது..

"செயற்கைக்கோள் சுற்றும் உலகில்
அண்டம் எல்லாம் பக்கம் ஆச்சு
அண்டை வீடோ தூரம் ஆச்சு"
aalunga said…
அடேங்கப்பா....
இவ்வளவு பெரிய நினைவகமா????
தாங்காது சாமியோவ்!!
//"செயற்கைக்கோள் சுற்றும் உலகில்
அண்டம் எல்லாம் பக்கம் ஆச்சு
அண்டை வீடோ தூரம் ஆச்சு" //

சரியாகச் சொன்னீர்கள்.

உறவுகளே பாரமாகிப் போன இந்த உலகில்
உயிரே இல்லாத கணினி மட்டும் விதிவிலக்கா?
அவ்வளவு பெரிய 1 ஜிபி -யை சுமந்து கொண்டிருப்பதற்கு ?

பின்னூட்டத்திற்கு நன்றி.