'ஜுக்' பத்திரிக்கைக்கு நன்றி !
'ஜுக்' - இது சௌராஷ்டிரா மொழி பேசும் மக்களுக்காக மதுரையில் இருந்து மாதமொரு முறை வெளி வரும் ஓர் செய்தி மற்றும் விளம்பர பத்திரிக்கை.
தினசரி செய்தித் தாள் அளவில் எட்டு பக்கங்களாக வெளிவரும் இப்பத்திரிக்கையின் ஆசிரியர் திரு பி.ஆர்.கணேஷ் .
தினசரி செய்தித் தாள் அளவில் எட்டு பக்கங்களாக வெளிவரும் இப்பத்திரிக்கையின் ஆசிரியர் திரு பி.ஆர்.கணேஷ் .
சௌராஷ்டிரா மொழிக்கு எழுத்து வடிவம் கிடையாது என்று பலரும் நினைகின்றனர். ஆனால் அது தவறு. எழுத்து வடிவம் உண்டு. மதுரையில் பல சௌராஷ்ட்ர வணிகர்கள் தங்கள் வணிக நிறுவனத்தின் பெயர் பலகையை சௌராஷ்டிர மொழியில் வைத்திருப்பதைக் காணலாம்.
அந்த வகையில் ஆசிரியர் திரு. கணேஷ் அவர்கள் சௌராஷ்டிரா மொழியை எழுத்து வடிவில் பிரபலப்படுத்த தனது 'ஜுக்' பத்திரிக்கை வாயிலாக பெரிதும் பாடுபட்டு வருகிறார். இவரது பத்திரிகையில் சௌராஷ்டிரா வணிகர்கள் கொடுக்கும் விளம்பரங்களில் முதலில் சௌராஷ்ட்ர எழுத்துகளில் அவர்களது நிறுவனப் பெயர் அல்லது அவர்களது பெயர் இடம் பெற்றிருக்கும்.
மாதமொரு முறை வெளியாகும் அந்தப் பத்திரிக்கை நமது சட்டப் பார்வை வலைப்பதிவில் வெளியாகும் சில பதிவுகளை தொகுத்து தனது நவம்பர், 11 பதிப்பின் ஒரு பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதன் 'பிடிஎப்' வடிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
எனது இந்த வலைப்பதிவில் வெளியான பதிவுகளை வெளியிட்டமைக்கு 'ஜுக்' பத்திரிக்கை ஆசிரியர் திரு கணேஷ் அவர்களுக்கும், சம்பந்தப்பட்ட இதரவர்களுக்கும் எனது நெஞ்சு நிறை நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி ! நன்றி !! நன்றி !!!
Comments
//பாராட்டுகள் உரித்தாகுக! உங்கள் சீர்பணி தொடரட்டும்!//
Nanri Sir...