100-வது தளம் - கதையும் காட்சியும் !


மூன்று நண்பர்கள் ஒரு கட்டடத்தின் நூறாவது தளத்தில் உள்ள அறை ஒன்றில் தங்கி இருந்தனர். அவர்கள் மின்தூக்கி (லிப்ட்) வழியாக தங்கள் அறைக்கு செல்வது வழக்கம்.

அப்படி ஒரு நாள் செல்லும் போது மின்தூக்கி வேலை செய்யவில்லை. பழுதடைந்திருந்தது. எனவே படிக்கட்டு வழியாக தங்கள் அறைக்கு ஏறிச் சென்றனர். அப்படி ஏறி செல்லும் போது பொழுதுபோக்கிற்காக ஆளுக்கொரு கதை சொல்லிக்கொண்டே செல்வது என்று முடிவு செய்யப்பட்டது.

அம்மூன்று நண்பர்களில் ஒருவர் ஐம்பதாவது தளம் வரை புராணக்கதை ஒன்றை சுவைபட சொல்லிக்கொண்டே வந்தார்.

இரண்டாவது நண்பர் நகைச்சுவை  கதை ஒன்றை தொன்னுத்தொன்பதாவது தளம் வரை வயிறு குலுங்க கூறி வந்து மற்ற நண்பர்களை சிரிக்கச் செய்தார். 

மூன்றாவது நண்பரோ உணர்ச்சி மிக்க கதை ஒன்றை நூறாவது தளத்தை நெருங்கும் போது சொன்னார். அக்கதையை கேட்டு மற்ற நண்பர்களில் கண்களில் கண்ணீரே வந்து விட்டது. கதை சொன்ன நண்பரும் சேர்ந்து அழுதார். அவர் சொன்ன கதை அப்படி ஒன்றும் மிகப் பெரியதும் அல்ல.  ஒரு  வரிக் கதைதான் !

அப்படி என்ன கதையை  அம்மூன்றாவது  நண்பர் சொன்னார்.

...

......

"அறை சாவியை நான் காரிலேயே மறந்து வைத்து விட்டேன்"

___________________________________________________________________________________

பின்குறிப்பு :

மேற்காணும் படத்தில் உள்ள கட்டடம்  சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் அமைந்துள்ளது. இதன் பெயர் ஜின் மோ டவர் என்பதாகும். இது 1998-இல் கட்டி முடிக்கப்பட்டது. 1,380  அடி உயரமுள்ள  இதில் பல அலுவலகங்களும் ஷாங்காய் கிரான்ட் ஹ்யட் என்ற ஒரு  உணவு விடுதியும் இயங்குகின்றன. ஆனால் 88 தளங்களை மட்டுமே கொண்டது.

அதே நேரத்தில் பின்வரும் படத்தில் நாம் காணும் மற்றொரு கட்டடம் உலகிலேயே மிக உயரமான ஒன்றாகும். அபு துபையில் உள்ள இதன் பெயர் "புர்ஜ் துபை" (Burj  Dubai) என்பதாகும்.


இதில் மொத்தம் 161  தளங்கள் உள்ளன. இதில் ஒரு பெருமை என்னவென்றால், இதன் 100-வது தளத்தின் சொந்தக்காரர் B.R.ஷெட்டி என்ற ஒரு இந்தியர். New Medical Centre என்ற மருத்துவமனை குழுமங்களின் நிறுவனரும் மேலாண்மை இயக்குனருமான இவர், இந்த 100-வது தளம் முழுவதையும் ரூபாய் 50  கோடிக்கு வாங்கியுள்ளார். அதாவது 15,௦௦௦௦௦௦௦௦௦௦௦௦000 சதுர அடி கொண்ட இத்தளத்தை சதுர அடி ஒன்றுக்கு 860 டாலர் வீதம் கொடுத்து வாங்கியுள்ளார். இதை அவர் விருந்தினர்கள் மற்றும் நண்பர்கள் தங்குவதற்காக வாங்கியுள்ளதாக கூறியுள்ளார்.  100-வது தளத்தை அடைய மின்தூக்கியில் சென்றால் ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரமே பிடிக்கும் என்று பெருமை பொங்க சொல்கிறார் இந்த இந்தியர்.

Comments

அம்மாடியோவ் எவ்வளவு பெருசு