கோடிக்கணக்கில் அள்ளிக் குவிக்கும் தகவல் உரிமை சட்டம் !





பொது மக்களின் செல்லக் குழந்தை 'தகவல் அறியும் உரிமை சட்டம்'. 2005 -ஆம் ஆண்டில் பிறந்த இந்தக் குழந்தை குறுகிய காலத்திலேயே பிரம்மாண்டமாக வளர்ந்து மக்களுக்கு பல முகங்களில் நன்மை செய்து வருகிறது. மக்களுக்கு பகலில் கிடைத்த இரண்டாம் சுதந்திரமாக இச்சட்டம் விளங்குகிறது. அதே நேரத்தில் மைய அரசுக்கும் நல்ல வருவாயை ஈட்டித் தந்துள்ளது.

மைய தகவல் ஆணையத்தின் தகவல்படி, 2007 -08 முதல் 2010 -11 வரையிலான காலகட்டத்தில் மைய தகவல் ஆணையம் கிடைக்கப் பெற்றுள்ள தகவல் கோரும் விண்ணப்பங்களின்

எண்ணிக்கை 18 ,32 ,181 ஆகும். இவற்றில் 17,33,620 விண்ணப்பங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மாநில அரசுகளின் பொது அதிகார அமைப்புகள் பெற்ற மற்றும் முடிவு செய்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை விவரம் மைய அளவில் பராமரிக்கப்படவில்லை. அவை அந்தந்த மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இங்கு கவனிக்கத்தக்க முக்கிய விவரம் யாதெனில், தகவல் கேட்டு பொது மக்கள் தாக்கல் செய்யும் விண்ணப்பங்களின் மீது அவர்கள் செலுத்தியுள்ள கட்டணம் மட்டும் ரூபாய் இரண்டு கோடிக்கும் அதிகமாக வசூலாகியுள்ளது. அதாவது 2007 -08 முதல் 2010 -11 வரையிலான காலகட்டத்தில் ரூ. 2,21,56,363 வருவாய் மைய அரசுக்கு வந்துள்ளது.
தகவல் கேட்டு பொது தகவல் அலுவலர் கொடுக்கவில்லை என்றால், அவருக்கு மைய தகவல் ஆணையம் அபராதம் விதிக்கலாம். அப்படி தகவல் தராத மைய பொது தகவல் அலுவலர்களுக்கு அபராதம் விதித்த வகையில் 2007 -08 முதல் 2010 -11 வரையிலான காலகட்டத்தில் ரூ. 44,23,221/- மைய அரசுக்கு வசூலாகியுள்ளது.

இந்தப் புள்ளி விவரங்களை கடந்த இரு தினங்களுக்கு முன் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் அலுவலர்கள், பொது மக்கள் குறைகள் மற்றும் ஒய்வூதிய அமைச்சகத்தின் மாநில அமைச்சர் திரு வி. நாராயணசாமி எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.

Comments

settaikkaran said…
தகவல்களுக்கு நன்றி! நானும் தகவல் உரிமைச் சட்டத்தின் படி சில மத்திய அமைச்சரகங்களுக்கு மனு அனுப்பியிருக்கிறேன். ஆகவே, இதில் எனது தொகையும் அடக்கம் என்பதறிந்து மகிழ்ச்சி! :-)
பின்னூட்டத்திற்கு நன்றி..
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தால்தான்
திருட்டுதனமா மாற்றப்பட்ட என் வீட்டு ரசீதை மாற்றியுள்ளேன.