ஒரு கூட்டு உரிமையாளர் வசதியுரிமையை கோர முடியுமா ?

'Easement'   என்றால் 'வசதியுரிமை' என்பது நமக்குத் தெரியும்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் எழுந்த வழக்கு (இரண்டாம் மேல்முறையீடு) ஒன்றில் யார் வசதியுரிமையை கோர முடியும் என்பது குறித்து மாண்பமை நீதிபதி டி. மதிவாணன் அவர்கள் சட்ட விளக்கம் அளித்தார்.

இவ்வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களின்படி வாதிக்கும் பிரதிவாதிக்கும் இடையே பாகப்பிரிவினை ஏதும் நடக்கவில்லை. வசதியுரிமையை தரும் சொத்தையும் (ஓங்கு சொத்து - Dominant  tenement)  அதுபோல் வசதியுரிமையை பெரும் சொத்தையும் (ஒடுங்கு சொத்து - Servient tenament) வாதியும் பிரதிவாதியும் ஒன்றாகவே தங்கள் உடைமையில் கொண்டு கூட்டாக அனுபவித்து வந்தனர். 

வசதியுரிமை என்பது ஒருவரது சொத்துக்கு மற்றொருவரது சொத்தில் இருந்து பல காலமாக அல்லது  ஒடுங்கு சொத்தை அனுபவிப்பதற்கு அவசியமாக   கிடைக்கப் பெறும் காற்று, தடம், வெளிச்சம், நீர் வழி போன்ற வசதிகளுக்கான உரிமையாகும்.

ஆனால் இந்த வழக்கில் ஓங்கு சொத்தையும், ஒடுங்கு சொத்தையும் ஒன்றாக பாகப்பிரிவினை ஏதுமின்றி வாதியும், பிரதிவாதியும் அனுபவித்து வந்தனர். இவ்வாறு இரண்டு சொத்தையும்  வாதி கூட்டாக அனுபவித்து வரும் நேர்வில் அவருக்கு வசதியுரிமைக்கான தீர்வழி கோர உரிமையில்லை என்று மாண்பமை நீதியரசர் தீர்ப்புரைத்தார்.

வேறு விதத்தில் சொன்னால், ஒரு கூட்டு உரிமையாளர் மற்றொரு கூட்டு உரிமையாளரின் நிலத்தில் (சொத்தில்) இருந்து வசதியுரிமை கோர முடியாது.

முடிவில் வாதியின் வழக்கு தள்ளுபடி.



(Suit claiming easementary right by necessity - Record show that properties between Plaintif and Defendant were not partioned - Both are in joint possession of dominant tenement and servient tenement - Right of easement can be claimed only in respect of land belonging to another - Plaintiff not entitled for relief of easement by necessity - Held, Suit fails.

Whether a Co-owner can claim right of easement by necessity over other co-owner's land - Held, No.)

2011 (2) MWN (Civil) 653

Comments