ஒரு அறக்கட்டளையின் வருமானத்தை அறங்காவலர் தனது சொந்த விடயங்களுக்காக பயன்படுத்திக் கொள்ள முடியுமா?

அண்மையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் எழுந்த வழக்கு ஒன்றில் அறக்கட்டளை (டிரஸ்ட்)  தொடர்பான வினா ஒன்றுக்கு உரிய விளக்கத்தை மாண்பமை நீதியரசர் எஸ். பழனிவேலு அவர்கள் நல்கினார்.

அதாவது வினா யாதெனில், "அறக்கட்டளையின் பணத்தை அறங்காவலர் தனது சொந்த விடயங்களுக்கு பயன்படுத்த முடியுமா?" என்பதாகும். அவ்வாறு பயன்படுத்தினால் அதன் விளைவு யாது?

இதற்கு விளக்கம் அளிக்கையில், "அறக்கட்டளை சொத்திலிருந்து கிடைக்கப் பெற்ற பணத்தை அறங்காவலர் தனக்குரியதக்கிக் கொள்ளவோ, தனது சொந்த விடயங்களுக்காக பயன்படுத்திக் கொள்ள தகுதிறன் படைத்தவர் அல்ல. அறக்கட்டளை ஆவணத்தில் குறித்த வகையிலான ஏவுரை அல்லது நிபந்தனை இல்லாத நிலையில் அறங்காவலர் அறக்கட்டளை மீறுகை புரிந்தவராகிறார். எனவே, அவர் அறங்காவலர் பதவியை வகிப்பதிலிருந்து தடுக்கப்படுகிறார்," என்று மாண்பமை நீதியரசர் குறிப்பிட்டார்.   

இந்த வழக்கில் அறக்கட்டளையின் வருமானத்தை பிரதிவாதி தனக்குரியதாக்கிக் கொள்கிறார். எனவே அவர் அறங்காவலர் பதவியை வகிக்க தகுதிறன் உடையவர் அல்ல என்று தீர்ப்புரைக்கப்பட்டது.

அதுபோல் மற்றொரு முக்கிய வினாவிற்கும் இதில் மாண்பமை நீதியரசர்
விளக்கம் அளித்தார். அதாவது, ஒரு வாடகை கட்டுப்பட்டு அலுவலர் (ரெண்ட் கண்ட்ரோலர்) , வழக்குச் சொத்து யாருக்கு உரிமையுடையது என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் படைத்தவர் அல்ல. வழக்குச் சொத்தின் உரிமை மூலம் யாருடையது என்பதை விவாதித்து முடிவு செய்வதற்கு உரிமையியல் நீதிமன்றமே தகுதிறன் படைத்த நீதிமன்றமாகும்.

(Trustee whether can use Trust money for his own purpose? Consequences of - Trustee not competent to appropriate or utilise funds derived from Trust Property for his own purpose - Trustee committing violation in absence of any specific direction or stipulation in Trust Deed, held, debarred from holding office of Trustee - Defendant in instant case, appropriated income of Trust for his own purpose, thus Defendant incompetent to hold office of Trustee.

Whether Rent controller is entitled to decide title of suit property - Question regarding title cannot be determined by a Rent Controller - Civil Court a competent court to decide and discuss regarding title holder of suit property.

The Idol of Arulmighu Kamakala Kameshwarar Temple, reptd. by its Fit Person, HR & CE Administration cum Executive Officer of Arulmighu Kamakalakameswarar Thirukoil, Triplicane, Chennai 600005 - Plaintiff Vs. Sri Siddaraja Manicka Prabha Temple, rept. by its Guru, Prabhu, Manicka Nagar, Himinabad, Gulbarga District - Defendant - C.S.No. 921 of 1999 - 26-04-2011 - Madras High Court - S.Palanivelu, J. - Citation : 2011 (2) MWN (Civil) 482)

Comments