மனைவியின் கொடுமையிலிருந்து கணவனைக் காக்க ஒரு சட்டம் வேண்டும் !

கடந்த வாரம் ஒரு வழக்கு விடயமாக சென்னை குடும்ப நீதிமன்றம் சென்றேன்.



ஒன்றாக வாழ்ந்து, ஒன்றாக உண்டு, ஒன்றாக உறங்கி, ஒன்றாக மகிழ்ந்து, ஒன்றாக இணைந்து பிள்ளை பெற்று பின் ஏதேதோ காரணங்களால் பிரிந்து (யாருடைய துர்போதனையா ? அல்லது முன்கூட்டியே திட்டமிட்டோ ?) - இப்படி நகமும் சதையுமாக வாழ்ந்து தற்போது எதிரும் புதிருமாக நின்று மணமுறிவு கேட்டு, வாழ்கை பொருளுதவி கேட்டு, மறுதலையாக சேர்ந்து வாழ்கிறேன் என்று சொல்லி இப்படி பல கோணங்களில் வழக்கை நடத்தி, இருக்கும் வாழ்க்கையை இன்னும் தொலைத்துக் கொள்ள தயாராகி நிற்கும் கூட்டம் - எப்போது நம் வழக்கை கூப்பிடுவார்கள் என்று காத்துக் கொண்டிருக்கிறது !



மண வாழ்க்கையை நடத்திச் செல்ல சரியான வழிகாட்டுதல் இல்லை ! அது போல மண வழக்கை சட்டென முடித்துக் கொள்ளவும் சரியான வழிகாட்டுதல் இல்லை. இரு தரப்பினருக்கும் மனதளவில் ஏற்பட்டுள்ள காயங்களால் 'விட்டேனா பார்' என்று வழக்கை இழுக்கச் செய்கிறது. இதில் சுற்றியிருக்கும் கற்றறிந்த வழக்குரைஞர்கள் கூட்டம் சில சமயங்களில் எரியும் தீயில் எண்ணை ஊற்றுவதையும் நாம் மறுப்பதிற்கில்லை. அவர்களுக்கு 'டிவோர்ஸ் எக்ஸ்பெர்ட்' என்று பெயராம் ! மணமுறிவு வழக்குகளில் முடிந்த வரை சேர்ந்து வாழ முதலில் வழக்குரைஞர்கள் அறிவுரை வழங்க வேண்டும். எடுத்த எடுப்பிலேயே மணமுறிவுக்காக கண்டபடி பல்வேறு பொய் குற்றச்சாட்டுகளை அல்லது ஒன்றுக்கும் பொறாத பிரச்சனைகளை பெரிதாக்கி அள்ளிவீசினால் அந்த பக்கமும் ரோசம் வரத்தான் செய்யும். வழக்கு இழுக்கும்.



குடும்ப நீதிமன்றம் ஒரு பாவப்பட்ட நீதிமன்றமாகவே திகழ்கிறது. ஆனால் அதே நேரத்தில் நடந்த தவறுகளை மறந்து, பரஸ்பரம் மன்னித்து, விட்டுக் கொடுத்து சேர்த்து செல்லும் தம்பதிகளையும் காண முடிந்த வகையில் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. எல்லாம் மனப்பக்குவம்தான். ஆனால் எல்லோருக்கும் வந்து விடாது.


பெண்களை காக்க பின்வரும் பல்வேறு சட்டங்கள் உள்ளன..

WOMEN-SPECIFIC LEGISLATIONS

The Immoral Traffic (Prevention) Act, 1956
The Dowry Prohibition Act, 1961 (28 of 1961) (Amended in 1986)
The Indecent Representation of Women (Prohibition) Act, 1986
The Commission of Sati (Prevention) Act, 1987 (3 of 1988)
Protection of Women from Domestic Violence Act, 2005

WOMEN-RELATED LEGISLATIONS

The Indian Penal Code,1860
The Indian Evidence Act, 1872
The Indian Christian Marriage Act, 1872 (15 of 1872)
The Guardians and Wards Act,1890
The Child Marriage Restraint Act, 1929 (19 of 1929)
The Muslim Personal Law (Shariat) Application Act, 1937
The Plantation Labour Act, 1951 (amended by Acts Nos. 42 of 1953, 34 of 1960, 53 of1961, 58 of 1981and 61 of 1986)
The Cinematograph Act, 1952
The Mines Act 1952
The Special Marriage Act, 1954
The Protection of Civil Rights Act 1955
The Hindu Marriage Act, 1955 (28 of 1989)
The Hindu Adoptions & Maintenance Act, 1956
The Hindu Minority & Guardianship Act, 1956
The Hindu Succession Act, 1956
The Maternity Benefit Act, 1961 (53 of 1961)
The Beedi & Cigar Workers (Conditions of Employment) Act, 1966
The Foreign Marriage Act, 1969 (33 of 1969)
The Indian Divorce Act, 1969 (4 of 1969)
The Contract Labour (Regulation & Abolition) Act, 1970
The Medical Termination of Pregnancy Act, 1971 (34 of 1971)
Code of Criminal Procedure, 1973
The Equal Remuneration Act, 1976
The Bonded Labour System (Abolition) Act, 1979
The Inter-State Migrant Workmen (Regulation of Employment and Conditions of Service) Act, 1979
The Family Courts Act, 1984
The Muslim women Protection of Rights on Dowry Act 1986
Mental Health Act, 1987
National Commission for Women Act, 1990 (20 of 1990)
The Protection of Human Rights Act, 1993 [As amended by the Protection of Human Rights (Amendment) Act, 2006–No. 43 of 2006]
Juvenile Justice Act, 2000
The Child Labour (Prohibition & Regulation) Act
The Pre-Natal Diagnostic Techniques (Regulation and Prevention of misuse) Act 1994

ஆனால் ஆண்களுக்கு ? அவர்களின் நிலை பரிதாபம்தான். ஒரு கணவன் - மனைவி பிரச்னை என்றால் முதலில் F.I.R. யார் மீது போடப்படுகிறது? மனைவி மீதா? கணவன்தான் தவறு செய்திருப்பான் என்று முதலில் சட்டம் அனுமானம் கொள்கிறது.

எனினும் மனம் தளராத ஆண், பெண்களை காக்கும் சட்டங்களை நன்கு படித்துப் பார்த்தால் அதில் பல ஓட்டைகள் இருப்பதை அறியலாம். அதை கண்டறிந்து காத்துக் கொள்ளலாம். தவிரவும் இங்கு ஆண்களுக்கு ஆபத்பாந்தவர்களாக கை கொடுப்பது மாண்பமை நீதியரசர்கள் கொடுக்கும் தீர்ப்புகள்தாம். பல தீர்ப்புகள் வஞ்சிக்கப்பட்ட (!) ஆண்களுக்காகவும் குரல் கொடுக்கிறது.



அதென்ன கணவன்தான் கொடுமை செய்பவனா? மனைவி கொடுமையே செய்யாதவளா அல்லது எப்போதும் கொடுமைக்கு ஆளாகிக் கொண்டே இருப்பவளா? கணவன் மனைவியின் கொடுமைகளை தாங்கிக் கொள்கிறான்; சகித்துக் கொள்கிறான். எதற்கு.. ? தன் சமூக நிலை கருதி..., தன் தொழில் நிலை எண்ணி.. குடும்ப சூழல் நினைத்து... இப்படி நிறைய... இதெல்லாம் அவனது பலவீனம். எனினும் அவன் துணிந்து விட்டால்...? நம்பிக்கை துரோகம் செய்யும் மனைவிகள், ஏமாற்றும் மனைவிகள் எம்மாத்திரம் ?


எனவே பாலின வேறுபாடு காட்டாத நமது அரசியலமைப்பில் 'மனைவிகளின் கொடுமைகளிலிருந்து கணவன்களை காக்கும் சட்டங்களும்' கொண்டு வர வகை செய்யப்பட வேண்டும். அதாவது பெண்களை காக்கும் சட்டங்களில் உள்ள ஓட்டைகள் நமக்கு வேண்டாம். அவர்களிடமிருந்து ஆண்களை காக்க தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும். அதுவரை ஆண்டவனே ஆண்களுக்கு துணை !

மணமுறிவு, வாழ்க்கைப் பொருளுதவி வழக்குகளை சந்திக்கும் கணவன்மார்கள் சண்டையிட்டு சகதியில் புரளுவதை விட சமாதானம் செய்து சேர்ந்து வாழ முயற்சி செய்யலாம் அல்லது முடிந்தவரை கேட்கும் நிவாரணத்தை (நியாயமானதாக இருப்பின்) வழங்கி விட்டு, மனைவியை விட்டு அதே அன்புடன் பிரிந்து விடலாம். அநிநியாமானதாக இருப்பின் வழக்கில் சட்டம், சாட்சி மற்றும் சங்கதிகளின் துணை கொண்டு சண்டையிட்டுதான் ஆக வேண்டும். வேறு வழியில்லை. ஆனால் அது சாதாரணச் சண்டையாக இருக்கக் கூடாது. இவருடன் ஏன் சண்டை பிடித்தோம் என்று மனைவி நினைத்து வருந்த வேண்டும். எனினும் "விட்டுக் கொடுப்பவர்கள் என்றும் கெட்டுப் போவதில்லை"; "கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே, சங்கு சுட்டாலும் வெண்மை தரும்".

இந்த கட்டுரையை முடிக்கும் அதே நேரத்தில் நான் குடும்ப நீதிமன்றத்தில் கண்ட மற்றொரு காட்சி பரிதாபத்திற்குரியதாக இருந்ததையும் இங்கு விவரிக்க வேண்டும். அதை அடுத்து வரும் கட்டுரையில் சொல்கிறேன்..

அதுவரை,

பி.ஆர்.ஜெ.

நன்றி : பொருத்தமான கார்டூன்களுக்கு 

Comments

பாரதி கேட்ட புதுமைபெண்கள்.இப்போ டைவர்ஸ் கேட்கிறார்களோ??? நிச்சயம் சகிப்புதன்மை என்பது மிகவும் குறைந்து போய் விட்டது. எடுத்து எறிந்து பேசுவது இப்ப சகஜம்.ஆண்களை பயமுறுத்த இந்த சட்டங்களை இப்ப நிறைய பெண்கள் தங்கள் பெற்றோர் துணை கொண்டு பயன்படுத்திக் கொள்கிறார்கள்..
//பாரதி கேட்ட புதுமைபெண்கள்.இப்போ டைவர்ஸ் கேட்கிறார்களோ???//

இன்றைய புதுமை பெண்கள் மணம் முடித்த சில மாதங்களிலேயே அல்லது சில ஆண்டுகளிலேயே கணவனை அல்லது அவரது குடும்பத்தினரை தனக்கு சாதகமாக உள்ள பல சட்டங்களில் ஒன்றை துணைக்கு எடுத்துக்கொண்டு மிரட்டி அல்லது பிளாக் மெயில் செய்து லட்சாதிபதி அல்லது கோடீஸ்வரி ஆக முயற்சி செய்து அதில் வெற்றியும் காண்கிறார்கள். அப்பாவி கணவன்மார்கள் பாவப்பட்ட ஜென்மங்கள் ! இப்படிப்பட்ட பெண்களுக்கு 'சமூக சேவை செய்கிறேன்' பேர்வழி என்று சில பெண் அமைப்புகளும் கொடி பிடிக்கின்றன.
//நிச்சயம் சகிப்புதன்மை என்பது மிகவும் குறைந்து போய் விட்டது.//

சகிப்புதன்மையா? கிலோ - ஒரு லட்சம் !!
//ஆண்களை பயமுறுத்த இந்த சட்டங்களை இப்ப நிறைய பெண்கள் தங்கள் பெற்றோர் துணை கொண்டு பயன்படுத்திக் கொள்கிறார்கள்..//

....நிறைய பெண்கள் தங்கள் பெற்றோர் துணை கொண்டு பயன்படுத்திக் கொள்கிறார்கள் - சத்தியமான வாசகம்.
கருத்துரைக்கு நன்றி திருமிகு அமுதா கிருஷ்ணா..
Anonymous said…
Yes sir You are correct.

We 498a victim are struggling a lot because of greedy wife and MIL
Unknown said…
உண்மை தான் ...
http://mydreamonhome.blogspot.com/