லீகலும் லாஜிகலும்

ஒரு இளம் சட்ட மாணவர் தனது சட்டத் தேர்வில் தோல்வி அடைந்திருந்தார். எனவே முகம் வாட்டமடைந்து இருந்தார்.  எனினும் தனது விடைத் தாளை திருத்தி மதிப்பெண் இட்ட பேராசிரியரை 'கலாய்க்க' நினைத்தார். அவரது பேராசிரியர் சட்டத்தை கரைத்துக் குடித்து சட்ட அறிவுப் பிழம்பாக இருப்பவர்.

மாணவன் அவரிடம் சென்று, "அய்யா உங்களுக்கு சட்டத்தில் எல்லாம் தெரியுமா?" என்று கேட்டார். அதற்கு அவர், "இல்லாவிட்டால் உங்களிடம் குப்பை கொட்ட முடியுமா?" என்று எகத்தாளமாக கேட்டார். இதனால் சற்று கடுப்படைந்த அம்மாணவர், "அப்படியானால் நான் கேட்கும் ஒரு கேள்விக்கு உங்களால் சரியான பதில் சொல்ல முடியுமா?" என்று சவால் விடும் பாணியில் கை கட்டை விரலை சொடுக்கு போட்டு கேட்டான்.

பேராசிரியரும் சளைக்காமல் "கேட்டுத்தான் பாரேன்" என்று பதிலுக்கு சொடுக்கு போட்டார். அம்மாணவர் கேள்வி கேட்பதற்கு முன் "நீங்கள் சரியான பதிலை சொல்லிவிட்டால் தேர்வில் தோல்வி அடைந்திருக்கும் என்னை நீங்கள் பாஸ் மார்க் போட்டு தேர்ச்சியடையச் செய்யவேண்டும்" என்று பேராசிரியருக்கு  ஒரு நிபந்தனை விதித்தான். இதற்கு பேராசிரியர் ஒப்புக்  கொண்டார்.

மாணவர் கேட்ட கேள்வி இதுதான்:

லீகலாக இருக்கும் ஆனால் அது லாஜிகலாக இருக்கக் கூடாது, லாஜிகலாக இருக்கும் அது லீகலாக இருக்கக் கூடாது, லீகலாகவும் லாஜிகலகவும் இருக்கக்  கூடாது   - அது எது? (What is legal but not logical, logical but not legal, and neither logical nor legal?)

65 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் அப்பேராசிரியரின் முன் நெற்றி இந்த குழப்பமான கேள்வியால் சுருக்கமடைந்தது. அவரால் சட்டென பதில் சொல்ல முடியவில்லை. எனவே தனது தோல்வியை ஒப்புக் கொண்டு அம்மாணவனுக்கு  "பாஸ் மார்க்" போட்டார். மாணவருக்கு மகிழ்ச்சி. 

ஆனால்  மாணவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லையே என்ற ஆதங்கம் அப்பேராசிரியருக்கு நெஞ்சை   நெருடிக் கொண்டிருந்தது. எனவே தனது வகுப்பில் இருக்கும் சில அதிபுத்திசாலி மாணவர்களிடம் நடந்ததை சொல்லி இந்தக் கேள்வியை  முன் வைத்தார். அவர்களும் தங்கள் மூளையை கசக்கிப்  பார்த்தார்கள். "ஹு..ஹு...ம்" சரியான பதில் தோன்றவில்லை.

இருப்பினும் பேராசிரியரை தனிப்பட்ட முறையில் நன்கு அறிந்த ஞானப் பழமான மாணவர் ஒருவர் முகத்தில் மட்டும்  40   வாட்ஸ் சி.எப்.எல். பல்ப் ஒளி  தெரிந்தது. அவர் உடனே எழுந்து நின்று தனக்கு அக்கேள்விக்கு விடை தெரியும் என்று ஏற்கனவே வெற்றி பெற்று விட்ட உற்சாகத்துடன் குரல் கொடுத்தார்.  அனைவரும் ஆவலாக அவரைப் பார்த்தனர்.

அவர் பின்வருமாறு பதில் சொன்னார்:-

"அய்யா, 65 வயதான நீங்கள் 32 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டிருப்பது - லீகல்; ஆனால் லாஜிகல் அல்ல (legal but not logical).
32  வயதாகும் உங்க மனைவி 22 வயதாகும் உங்க மாணவரை காதலிப்பது - லாஜிகல்; ஆனால் லீகல் அல்ல (logical but not legal).
தேர்வில் தோல்வி அடைந்த அந்த மாணவருக்கு நீங்கள் பாஸ் மார்க் போட்டு இருப்பது - லீகலும்  அல்ல லாஜிகலும் அல்ல (neither logical nor legal)" என்றார்.

அடிமடியிலேயே கையை வைத்து விட்டானே என்று அப்பேராசிரியர் மீண்டும் தன் முன் நெற்றியை சுருக்கினார்.

இது எப்பிடிய்... ?





Comments

அட்டகாசம் போங்க.
சொந்தப்பெயரையும் அடையாளத்தையும் வைத்துப் பதிவு எழுதும் உங்களை மனமாரப் பாராட்டுகிறேன்.
//அட்டகாசம் போங்க.//


நன்றி அய்யா....
//சொந்தப்பெயரையும் அடையாளத்தையும் வைத்துப் பதிவு எழுதும் உங்களை மனமாரப் பாராட்டுகிறேன்.//

தெரிந்ததை எழுதுகிறேன்... உணர்வுகளை மதிக்கின்றேன்..... மாற்றுக் கருத்துகளை வரவேற்கிறேன்... தவறு இருந்தால் திருத்திக் கொள்கிறேன்... எனவே எனக்கு முகமூடி தேவையில்லை என்று கருதுகிறேன்... அந்த வகையில் தங்கள் பாராட்டுதலுக்கு என் நெஞ்சு நிறை நன்றிகள் பல..