'உயர் நீதிமன்றத்தில் தமிழ்' என்ற எங்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துங்கள்
1985-ஆம் ஆண்டுகளில் தமிழிலும் சட்டக் கல்வி படிக்கலாம்; தேர்வுகள் எழுதலாம் என்ற ஒரு நிலைப்பாடு உறுதி பெற்றது. இதை தமிழ் வழியில் பள்ளி மற்றும் கல்லூரிப்படிப்பை முடித்த அநேக சட்ட மாணவர்கள் மிக மகிழ்ச்சியுடன் வரவேற்று தமிழில் தேர்வுகள் எழுதி வெற்றி பெற்று இன்று தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் வழக்குரைஞர்களாக சக்கை போடு போடுகிறார்கள். அவர்களுக்கு உதவியாக நானும் நிறைய சட்ட நூல்களை எளிமையான தமிழில் எழுதினேன். இன்றளவும் அவர்கள் அனைவர் மனதிலும் நான் நீங்க இடம் பெற்றுள்ளேன் என்பதை அவர்கள் ஒரு வெற்றிகரமான வழக்குரைஞராக வலம் வரும் சமயத்தில் சொல்லக் கேட்டு மிகவும் அகம் மகிழ்ந்துள்ளேன்.
மாவட்ட நீதிமன்றங்களில் தமிழில் வாதுரைகளை தாக்கல் செய்யலாம், தமிழில் வாதாடலாம், தமிழில் தீர்ப்புகள் பகரப்படுதல் வேண்டும் என்ற நிலை ஏற்கனவே இருந்து வந்தது. அது தமிழில் சட்டம் படித்த மாணவர்கள் வழக்குரைஞர்களாக வெளி வரத் தொடங்கிய பிறகு மெல்ல மெல்ல நிலை பெற்று இன்று ஆங்கிலத்தில் பேசினால் நீதிபதிகளின் கவனத்தை ஈர்ப்பதே கடினமாகி விட்டது. நீதிபதிகளும் தமிழ் வாதம் கேட்பதையே பெரிதும் விரும்புகின்றனர். இவை யாவும் சட்டத் தமிழுக்கு கிடைத்த மகத்தான வெற்றி. அதற்காக உழைத்த எனக்கும் கிடைத்த வெற்றி.
எனது கனவில் ஒன்று மட்டும் பாக்கி இருந்து வந்தது. அது நமது சென்னை உயர் நீதிமன்றத்திலும் தமிழில் வாதங்கள் ஒலிக்க வேண்டும் என்பது. கனவாக இருந்தது இன்னும் ஒரு சில நாட்களில் நனவாகப் போகிறது. அதற்கான போராட்டம் வெற்றி பெற உள்ளது. நாளை (18-06-2010) இதை வலியுறுத்தி ஒரு பெரும் உரிமைப் போராட்டத்தை வழக்குரைஞர்கள் மேற்கொள்ள உள்ளனர். அதில் வழக்குரைஞர்களாக உள்ள ஒவ்வொருவரும் பங்கேற்று தோழமையை காட்டி போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்; உயர் நீதிமன்றத்தில் தமிழ் என்ற இலட்சியத்தை அடைய வேண்டும்.
கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம் மொழி மாநாட்டில் உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாடலாம் என்ற நற்செய்தி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட வேண்டும்.
ஒரு கூடுதல் தகவல் : நானும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொழிலாற்ற தயாராகி வருகிறேன். எனது மகள் ஏற்கனவே சட்டம் B.A., B.L., (Hons.) படிக்க சென்னை சென்று விட்டார். நானும் பெட்டி, படுக்கை எடுத்து வைத்து விட்டேன்.

Comments
வாருங்கள், உங்களை வரவேற்கிறோம்.
உயர்நீதி மன்றத்தில் நீங்கள் தமிழில் வாதாடும் நாள் விரைவில் வர உளமார வாழ்த்துங்கள்!
நன்றி!

சத்தியமான வார்த்தைகள் திரு ராஜா நடராஜன் அவர்களே..
தங்கள் வரவேற்ப்புக்கு மிக்க நன்றி திரு அமைதி அப்பா அவர்களே.
தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி திருமதி கண்ணகி அவர்களே..
உயர்நீதி மன்றத்தில் நீங்கள் தமிழில் வாதாடும் நாள் விரைவில் வர உளமார வாழ்த்துங்கள்!//
என் தமிழ்த் தொண்டு சிறக்க வாழ்த்திய மக்ஸிமம் இந்தியா அவர்களுக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல. தங்கள் வாழ்த்து பலிக்கட்டும்.
தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி திரு தமிழன் அவர்களே.
நன்றி திருமதி சுமிதா கேசவன் அவர்களே..