சென்னை டூ ஏற்காடு (குப்பனுர் வழி)

Chennai To Yercaud (via Kuppanoor) (For Video click this link)

ஏற்காட்டில் கோடை விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. (நாளை  தொடங்குகிறது)  சேலத்தில் இருந்தும், சென்னை, பெங்களூர் உள்ளிட்ட இன்னபிற நகரங்களில் இருந்தும் நிறைய சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். அனைவரும் சொந்த கார்களில் வருகின்றனர். விடுதிகளில் அறை கிடைப்பது கடினமாக உள்ளது. மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது.

இந்த நிலையில் இந்த பதிவு ஏற்காடு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சிறிதளவில் உதவி புரியும் என்ற எண்ணத்தில் எழுதியுள்ளேன்.

அதாகப்பட்டது என்னவென்றால், பெங்களூரில் இருந்து ஏற்காடு வருகிறவர்கள் வழக்கமான பாதையில் ஏற்காட்டை அடைதலே உசிதமாகும். பெங்களூருவில் இருந்து ஓமலூர் வந்து, பின் அங்கிருந்து 5 ரோடு வந்து, பிறகு அஸ்தம்பட்டி வந்து இடது கை பக்கம் திரும்பினால் ஏற்காடு செல்லும் பாதையை பிடித்து விடலாம். அங்கிருந்து சுமார் 50 நிமிட மலைப்பாதை பிரயாணம். ஏற்காடு வந்து விடும். இது பெரும்பாலும் எல்லோரும் அறிந்த வழக்கமான பாதை.

ஆனால் சென்னையில் இருந்து ஏற்காடு வருகிறவர்கள் இவ்வாறு வர வேண்டிய அவசியமில்லை. அப்படி வந்தால் மிகவும் சுற்று ஆகும். எனவே சென்னையில் இருந்து ஏற்காடு வருகிறவர்கள் பூந்தமல்லியில் இருந்து கிருஷ்ணகிரி புற வழி சாலையை பிடித்து திருப்பத்தூர் செல்லும் வழியை பிடித்துக் கொள்ள வேண்டும். இது புற வழி சாலையின் இடது புறமாக திரும்புகிறது. பின் திருப்பத்தூர் தாண்டினால் ஊத்தங்கரை, அரூர் வரும். அங்கிருந்து கொஞ்ச தூரம் சென்றால் பாப்பிரெட்டிப்பட்டி வரும். இதற்கடுத்து மஞ்சவடி கணவாய் என்ற இடம் வரும். இது ஏற்காடு மலையின் பின்பகுதி ஆகும். கொஞ்சம் மலைப்பாதையாக இருக்கும். பிறகு குப்பனூர் என்றொரு குக்கிராமம் வரும். இது ஏற்காடு மலையின் அடிவாரம் என்று சொல்லலாம்.

இந்த ஊரில் 'ஏற்காடு செல்லும் வழி' என்று பலகை வைக்கப்பட்டிருக்கும். அதாவது இந்த ஊரில் சேலம் நோக்கிய சாலையின் வலது புறம் ஏற்காடு செல்லும் மலைப்பாதை பிரிந்து செல்கிறது. இந்த பாதையை பிடித்தால் சுமார் 1.15 மணி நேரத்திற்குள் ஏற்காடு சென்றடைந்து விடலாம். வழியில் நிறைய ஓடைகள், தேக்கு மரக்காடுகள் வரும். மனதிற்க்கு ரம்யமாக இருக்கும். ஏற்காட்டை அடைவதற்கு முன் கொட்டச்செடு, தலைச்சோலை, செங்காடு என்ற ஊர்கள் வரும்.

செங்காட்டில் இருந்து வரும் சாலையில் வலது புறம் திரும்பினால் ஏற்காடு டவுன் வந்து விடும். இடது புறம் திரும்பினால் 'பகோடா பாயிண்ட்' என்ற புகழ் பெற்ற வியூ பாயிண்ட் வரும். நடுவே தலைசோலையில் இருந்து இடது புறம் திரும்பினால் 'அண்ணாமலையார் கோவில்' வரும். திருவண்ணாமலை போல் பௌர்ணமிக்கு பௌர்ணமி கிரிவலம் இங்கு நடை பெறுகிறது. இதுவும் மேகக்கூட்டம் தழுவும் ஒரு நல்ல வியூ பாயிண்ட்.

ஆகவே சென்னையில் இருந்து ஏற்காடு வருகிறவர்கள் சேலத்தை தொடாமலேயே ஏற்காடு சென்று திரும்ப முடியும். நேரம், எரிபொருள் மிச்சம். அலைச்சல் குறைவு. நடுவிலேயே ஏற்காட்டின்  இரண்டு முக்கிய சுற்றுலா இடங்களையும் பார்த்து மகிழலாம்.

இப்பதிவு பயன் தரக்கூடியது என்று நீங்கள் கருதினால் தயை கூர்ந்து பின்னூட்டம் இடவும்.

Comments

It would be better if you published with photos.
Dear Ramji_yahoo,

Thanks for your comment and suggestions.

I hope you have watched the linked video clip of a wounderful hill water course crossing the hill road via kuppanoor.
மிகவும் பயனுள்ள பதிவு.
கூகுள் வரைபடம், தூரம், மற்றும் ஏற்காட்டில் தங்குவதற்கு நடுத்தர குடிமக்களுக்கு ஏற்றதான தங்குமிடங்கள் இவற்றையும் பதிவு செய்தால் இன்னும் மிகவும் உபயோகமாக இருக்கும்.
பின்னூட்டத்திற்கு நன்றி வழிப்போக்கன் அய்யா. தங்கள் ஆலோசனைப்படி அந்த விவரங்களையும் விரைவில் எழுதுகிறேன்.
பின்வரும் ஒரு பதிவையும் படித்து பார்க்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

"ஒரு வக்கீலின் கோடை விடுமுறை காலம் - ஏற்காட்டில் ஒரு அரிசியின் விலை 20 ரூபா."

http://sattaparvai.blogspot.com/2009/05/20.html
Thanks a lot sir.

Your blog is very interesting.

Please keep writing. worth reading your blog.

If could put a map of this route, it will really a great Help.

Thanks Sir.