சேலம் பிறந்த கதை
கி.பி. 1750 -ஆம் ஆண்டு ஐதர் அலியின் மைசூர் படைகள் சதுர்வேதி மங்கலத்தை கைப்பற்றின. உருது மொழியை தாய் மொழியாக கொண்ட ஐதர் அலிக்கு, சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கும் போது வாய் குளறியது. மேலும் அவரது ஆட்சியின் முதல்நிலை அதிகாரிகளாக இருந்த முஸ்லிம்களும் சதுவேதி மங்கலம் என்று கூறும் போது, 'சர்தர்வே அமங்கலம்' என்று வாயில் வந்த வார்த்தையை கூறி வந்தனர். இவர்கள் கூறுவதை கேட்டு யாராவது சிறிது விட்டால், உடனே அவர்களுக்கு சவுக்கடி தண்டனைதான்.
எனவே, உச்சரிப்பு குழப்பத்தை போக்குவதற்கு ஊரின் பெயர் மூன்று எழுத்தில் அடங்கி இருக்க வேண்டும் என்று தங்களுக்கு உதவியாளர்களாக இருந்த பிராமணர்களை அழைத்து, ஐதர் அலி கேட்டுக் கொண்டார். இதன்படி, பிராமணர்கள் வகுத்துக் கொடுத்த பெயரே 'சலாம்' என்ற சொல். சதுர்வேதி மங்கலம் என்ற பெயரின் முதலில் உள்ள 'ச' வையும், இடையில் வரும் 'ல' வையும் கடைசியாக வரும் 'ம்' ஐயும் இணைத்து 'சலாம்' என்று சுருக்கமாக கூறும்படி தெரிவித்தனர். ஐதர் அலிக்கு இந்த பெயர் பிடித்துப் போனதால் இப்பெயரை தொகுத்து வழங்கிய பிராமணர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
அதன்பின் இந்த பெயரில் உள்ள (ச-லா-ம்) வார்த்தை நாளடைவில் 'சலம்' ஆகியது. இது உருதில் மற்றவரை பார்க்கும் போது, வணக்கத்தை தெரிவிக்கும் வார்த்தை ஆகும். ஐதரும் இவ்வாறே எளிமையாக கூறி வந்தார். ஆனால் ஐதரின் சர்வதிகார ஆட்சியில் மக்கள் அடைந்த துன்பங்களுக்கு அளவே இல்லை. இதனால் அவர்கள் 'சலாம்' என்ற வார்த்தையை பல்லைகடித்துக் கொண்டே கூறினார்கள். அப்படி கூறும் போது அது 'சேலம்' என்றே ஒலித்தது.
எது எப்படி இருப்பினும் அன்று குடிமக்கள் அறியாமல் பல்லை கடித்துக் கொண்டே கூறிய வார்த்தைகள் என்று 'சேலம்' என்று அழைக்கப் படுகிறது. இந்த வார்த்தை ஒரு நிர்பந்தத்தில் பிறந்தாலும் இன்று நமக்கெல்லாம் அழகுள்ள பெயராக விளங்கி வருகிறது.
Comments
நன்றி!